தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் & சுய உதவிக் குழுக்கள் :: சுயஉதவி குழுக்கள் - வழங்கப்படும் வசதிகள்

சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் வசதிகள் / வாய்ப்புகள்:

  • பயிற்சிகள்
  • சந்தை வாய்ப்புகள்
  • விருதுகள்
  • அரசு சாரா அமைப்புகளின் பணிகள்

பயிற்சிகள்

பயிற்சி திட்டங்கள் மிகவும் அவசியமானவை ஏனென்றால்

  1. அறிவு திறனை வளர்த்து கொள்ளவும்
  2. அவர்களின் நடவடிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்தவும்
  3. புதிய திறமைகளை மற்றும் பழைமையான தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ளவும் அவசியமாகிறது

    Facilities

தமிழ்நாட்டின் பெண்கள் முன்னேற்ற திட்டம் (மகளிர் திட்டம்) மற்ற அரசு திட்டங்களை காட்டிலும் வேறுபட்டது. ஏனென்றால் அதை நடைமுறைப்படுத்துகிற பல்வேறு பின்புலங்களை உடைய முகமைகள் (அரசின் அரசு சாரா அமைப்புகள் மற்றும் வங்கிகள்) போன்றவைகளுக்கிடையே தேவைப்படுகிற திட்டங்களின் நோக்கங்களை ஒருமித்த கருதிதோடு புரிந்து கொள்ளுதல். ஒருமைப்பாடு மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகியவை அமைகிறது. பயிற்சியானது இயக்குபவர்கள் பிறதிநிதிகள் மற்றும் குழுக்களின் கூட்டமைப்பின் பிரதிநிதி மற்றும் கூன்பெறுவோர் உறுப்பினர்கள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியில் புத்துணர்ச்சியளிக்கும் பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு சுற்றுலா போன்றவை அடங்கும். அரசு சாரா அமைப்புகளின் அலுவலர்களும் தேவைப்படுகிற பயிற்சியின்மை பெறுகிறார்கள். பி.ஐ.யு (சக்தி தகவல் உபயோகப்பாளர்கள்) மற்றும் பி.எம்.யு (திட்ட மேலாண்மை பிரிவு) அதிகாரிகள் மற்றும் வங்கியின் மூலமும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

பயிற்சியின் வகைகள்

பல்வேறு வகையான பயிற்சிகள் பல்வேறு திட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு ஏற்றார்போல் வழங்கப்படுகிறது.

  • சுய உதவிக் குழு உறுப்பினர் பயிற்சிகள்
  • இயக்குபவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பயிற்சிகள்
  • பிரதிநிதிகள் பயிற்சி (2வது வருடம் முதல்)
  • குழு கூட்டமைப்பின் பிரதிநிதிகளின் பயிற்சிகள்
  • அரசு சாரா அமைப்புகளின் அலுவலகர்களுக்கான பயிற்சி
  • வங்கி அலுவலர் பயிற்சிகள்
  • பி.ஐ.யு அலுவலர் பயிற்சிகள்
  • பி.எம்.யு அலுவலர் பயிற்சிகள்
  • தகவல் தொடர்பு குழுக்களுக்கு பயிற்சிகள்

பொருளாதார நடவடிக்கைகளுக்கான திறன் பயிற்சிகள்

சுய உதவி குழுக்களின் அடையாளமாக மகளிர் திட்டம் உள்ளது. இதற்கு சுய உதவி குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் மூலமாக வடிவமைக்கப்பட்ட பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த திறன் வளர்ப்பு பயிற்சியின் மூலமாக பெண்களின் வாழ்வில் தரமான மாற்றங்களை கொண்டு வரவும் மேலும் குழுவின் நடவடிக்கைகளை மேம்படுத்துதல் மற்றும் திறமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுகிறது.

அனைத்து சுய உதவி குழு உறுப்பினர்களுக்கும் சுய உதவி குழுக்கள் பற்றிய கருத்துக்கள் தொடர்பான 4 பயிற்சிகள் 4 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. சுய உதவி குழுவின் அலுவலக பணியாளர்களுக்கு (இயக்குபவர் மற்றும் பிரதிநிதிகள்) 3 பயிற்சிகள் 6 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பயிற்சிகள் தலைமை பண்பு குழு திறன் பற்றிய கருத்துக்கள் மற்றும் கணக்கு ஏடுகளை பராமரிப்பிற்கும் பயிற்சிகள் போன்றவை வழங்கப்படுகின்றன. இதோடு சுய உதவி குழு உறுப்பினர்களில் யார் யார் பொருளாதார நடவடிக்கைகளை தொடங்க தயாராக இருப்பவர்கள் அல்லது சுய தொழில் தொடங்குபவர்களுக்கு தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இந்த திறன் வளர்ச்சி பயிற்சி 5 நாள் வழங்கப்படுகிறது. அதில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும் அடங்கும்.
இதன் பொருட்டு மாவட்ட அளவில் மற்றும் வட்டாற அளவில் பிரசித்தி பெற்ற சுய உதவி குழுக்கள் மூலம் வணிக பயிலரங்குகள் நடத்தப்படுகிறது. இதில் விற்பனை யுக்கிகள் மற்றும் தரம் பற்றிய கருத்துக்கள் விலை, கப்பமிடுதல், மற்றும் மேம்படுத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

சுய உதவி குழுக்களின் திறன் வளர்ப்பு பயிற்சிகள்

இரண்டு வகைகள் உள்ளது.

  • இயக்குபவர்கள் பிரதிநிதிகள் பயிற்சிகள் (சுய உதவி குழுக்களின் அலுவலக பணியாளர்)
  • சுய உதவி குழு உறுப்பினர்கள் பயிற்சி

கால அளவு

  • சுய உதவி குழு உறுப்பினர்கள் பயிற்சிகள் - 4 நாட்கள்
  • இயக்குனர் பிரதித்தி பயிற்சிகள் - 4 நாட்கள்

ஊக்கத் தொகை

  • பயிற்சி பெறுபவர்கள் - ரூ45 / நாள் / தலை
  • அரசு சாரா அமைப்புகள் - ரூ12.50 / நாள் / தலை
  • பயிற்சி அறிவிப்பவர்கள் - ரூ10 / இயக்குனர் மற்றும் பிரதிநிதி பயிற்சிகள்

                             ரூ.7.50 - சுய உதவி குழு பயிற்சி

இளைஞர்களுக்கான திறன் பயிற்சிகள்:

மாநில அரசு தொழில்துறை முதலிடுவதற்க்கு முக்கயத்துவம் அறிந்து வருகிறது. இந்நிலையில் உற்பத்தி மற்றும் சேவை பிரிவுகளில் திறமையான தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. வேலையில்லாத இளைஞர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதன் மூலம் அவர்களை உபயோகப்படுத்திக் கொள்ள முடியும் இதன் அவர்களுக்கும் சழுதாயத்திற்கும் நன்மைகள் கிடைக்கும். இந்த நோக்கத்தை கவனித்தில் கொண்டு தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு நிறுவனம் (டி.என்.ச்.டி.டபள்யூ) திறன் வளர்ப்பு பயிற்சியினை 11,485 இளைஞர்களுக்கு சிறப்பு மிக்க தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களான எம்.ஆர்.எஃப், நோக்கியா, சயின்டு கோபைன் போன்றவைகளின் மூலம் வழங்கியது.

இந்த வருடம் 2008 - 2009 ல் 25000 இளைஞர்களுக்கு இறப்புமிக்க தொழிற்சாலைகள் மற்றும் இதர நிறுவனங்கள் மூலம் திறன் வளர்ப்பு பயிற்சியினை வழங்க முடிவு செய்துள்ளது.

பங்கேற்பாளர்களை தேர்வு செய்ய கடை பிடிக்கும் தகுதி காரணிகள்

வயது : 18-25 வருடங்கள்
கல்வித்தகுதி : 10ம் வகுப்பு வெற்றி / தோல்வி

இளைஞர் திறன் வளர்ப்பு பயிற்சிக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை

மகளிர் திட்டம் ரூ.10000 கதை பயிற்ச்சியை வழங்கும் நிறுவனத்திற்கு வழங்குகிறது

பங்கேற்பாளர்களுக்கு ரூ.750 யை பயிற்சிகால முழுவதிற்கும் ஊக்கத்தொகையாக வழங்குகிறது.

இளைஞர் திறன் வளர்ப்பு பயிற்சி 2008 - 2009 கான செயல்திட்டம்

வ.எண் பயிற்சியின் பெயர் பயிற்சி பெறுபவர் எண்ணிக்கை பயிற்சிகாலம் நிறுவனத்தின் பெயர்
1. சி.என்.ச. லேத் ஆப்ரேட்டர் 100 3 மாதம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா ஐ.டி.ஐ பி.என்.பாளையம்,
கோயமுத்தூர்
2. சி.என்.சி. மில்லிங் ஆப்ரேட்டர் 100 3 மாதம்
3. பிட்டர் 50 3 மாதம்
4. லேத் ஆப் ரேட்டர் 100 3 மாதம்
5. எலக்ட்ரீசியன் 100 3 மாதம்
6. டிரைவர் 150 3 மாதம்  
7. கணிப்பொறி பாகங்கள் பராமரிப்பு 100 3 மாதம்
8. செல்போன் சேவைகள் 100 3 மாதம்
9. ரெஃப்ரிஜிரேட்டர் மற்றும் ஏர்கூலர் 100 3 மாதம்
10. நான்கு சக’கரவாகன பழுதுநீக்கம் 100 3 மாதம்
  மொத்தம் 1000    
1. வேவர்ஸ் பயிற்சி 40 1 மாதம்  
2. பிட்டர் பயிற்சி திட்டம் 40 1 மாதம்  
3. கணிப்பொறி உதவியுடன் ஜவுளி வடிவமைப்பு (சி.ஏ.டி) 40 1 மாதம்  
4. நிட்டிங் மெஷின் பராமரிப்பு 40 1 மாதம்  
5. நிட்டிங் மெஷின் ஆப்ரேட்டர் 40 1 மாதம்  
  மொத்தம் 200    
1. உணவு தயாரிப்பு மற்றும் பரிமாறுதல் 100 3 மாதம் உணவு பரிமாறுதல் உணவாக மேலாண்மை இந்திய மையம்
2. தையல் பயிற்சி 100 3 மாதம்
  மொத்தம் 200    
1. மார்சன்டைசிங் 50 3 மாதம் பிரிமியர் பேஷன் கோயமுத்தூர்
2. மெஷின் மெடாய்டரி 50 3 மாதம்
3. ஷ்டிச்சிங் 50 3 மாதம்
  மொத்தம் 150    
  ஒட்டு மொத்தம் 1700    

பெண்கள் திறன் பயிற்சிகள்

வ.எண் பயிற்சி விவரங்கள் நிறுவனங்கள் எண்ணிக்கை
1. ஜவுளி உற்பத்தி மற்றும் ஆடை வடிவமைப்பு குமரகுருபரர் கல்லூரி கோயமுத்தூர் 40
2. மெடாய்டரி 40
3. சேவை வண்ணமிடுதல் அச்சிடுதல் 40
4. சேவை வடிவமைப்பு 40
5. எளிய பொம்மை தயாரிப்பு  
6. தையல் இந்திய உணவு தயாரிப்பு தொழில் நுட்பம் மற்றும் உணவாக மேலாண்மை கழகம் 25
7. காலர் டிச்சிங் 25
8. உணவு உற்பத்தி 30
  மொத்தம்   300

சந்தை வசதிகள்

பூமாலை வணிக வளாகம்:

மகளிர் திட்டம் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருள்களுக்கு சந்தை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கிறது. பொது இடங்களான பேருந்து நிலையம் அரசின் வணிக வளாகங்கள் போன்றவைகளால் கடைகளை அமைப்பதன் மூலம் விற்பனை வாய்ப்புகளையும் வழங்குகிறது. மேலும் இது அரசு துறைகள் அமைக்கும் தேசிய மாநில மாவட்ட அளவிளான விற்பனை மேளா அல்லது கண்காட்சிகளில் சுய உதவி குழுக்கள் பங்குகொள்ள உதவி செய்கிறது. மேலும் சுய உதவி குழுக்களின் பொருள்கள் மாவட்ட வழங்கள் மற்றும் கூட்டுறவு விற்பனை (டி.எஸ்.எம்.எஸ்) அல்லது மாவட்ட தலைமையகங்களில் அமைக்கப்பட்டுள்ள பூமாலை வணிக வளாகம் போன்ற இடங்களில் சுய உதவி குழுக்களின் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றது. இதுபோன்ற வளாகங்களில் சுய உதவி குழுக்கள் தங்களின் பொருள்களை விற்பனை செய்கிறது. மேலும் சில சுய உதவி குழுக்கள் சிற்றுண்டி சாலைகள் இதுபோன்ற வளாகங்களில் வெற்றிகரமாக நடத்துகின்றன.

Facilities


விருதுகள்

மணிமேகலை விருதுகள்

சிறப்பாக செயல்படும் சுய உதவி குழுக்கள் மற்றும் பஞ்சாயத்து அளவிலான கட்டமைப்புகள் போன்றவற்றை ஊக்குவிக்கும் பொருட்டு மாநில மற்றும் மாவட்ட அளவில் விருதுகள் வழங்கப்படுகிறது. விருதுகள் மாநில அளவில் சிறந்து 10 சுய உதவி குழுக்கள் மற்றும் 5 சிறந்த பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகள் போன்றவற்றிற்கு வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் ஒரு பஞ்சாயத்து கூட்டமைப்புகளுக்கும் மூன்று சிறந்த சுய உதவி குழுக்களுக்கும் மணிமேகலை விருதுகள் வழங்கப்படுகிறது மேலும் வட்டார அளவில் சிற்நத சுய உதவி குழுக்களுக்கு சான்றிதல்கள் வழங்கப்படுகிறது.

அரசு சாரா அமைப்புகளின் பங்கு

அரசு சாரா அமைப்புகள் முக்கிய பங்கினை வகிக்கிறது. இது சுய உதவி குழுக்கள் ஆரம்பிப்பது முதற்கொண்டு பெண்கள் சுயஅதிகாரம் பெறுதல் மற்றும் அதற்கு தேவையான பயிற்சிகள் மற்றும் இதர உள்ளீடுகள் ஆகியவற்றை வழங்குகிறது. அரசு சாரா அமைப்புகள் மற்றும் வேளாண் விரிவாக்க மையம் ஆகியவை சுய உதவி குழுக்களை இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சுய உதவி குழுக்கள் தொடங்குவதற்கு மட்டும் உதவாமல் நடவடிக்கைகளை கண்டறிதல் பயிற்சியினை வழங்குவது மற்றும் ஆரம்ப நிலையில் நிதி உதவி வழங்குவது முதற்கொண்டு உதவுகிறது. அரசு சாரா அமைப்புகள் சுய உதவி குழுக்களின் நடவடிக்கைகளை எளிதாக்குகிறது. அரசு சாரா அமைப்புகள் ஒரு சட்டநெறியாக செயல்பட்டு சுய உதவி குழுக்களை அமைப்பதற்கு மற்றும் கண்காணிப்பதற்கும் உதவுகிறது.

அரசு சாரா அமைப்புகளின் பங்கு

  • யுக்திகளை பயன்படுத்தி

  • சமுதாய வரைபடம் வளபட்டியல் போன்ற ஆய்வுகளை மேற்கொள்ளல் ப்கேற்பு கிராம மதிப்பீடு / பங்களிப்பு கற்றல் மற்றும் செயல்களை கண்டறிதல் மற்றும் ஏழை பெண்கள் இந்த திட்டத்தில் பங்குகொள்ளுவதை எளிதாக்குதல்.

  • குழுக்களை அமைத்தல்

  • குழுக்களை வழிநடத்துவதற்கு உதவுகிறது மேலும் திட்ட அமலாக்க பிரிவிற்கு குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிநடத்துபவரை பற்றிய தீர்மானத்துடன் கூடிய தகவளை தெரிவிப்பது

  • குழுக்களுடன் இணைந்து செயலாற்றி அவற்றை வழுவாக்குதல், தொடர்ச்சியான செயல்பாடுகளுக்கு உதவுகள் போன்றவற்றை மேற்கொள்கிறது

  • தொடர்ச்சியான சேமிப்பிற்காக உறுப்பினர்களை உறக்கப்படுத்துவது மற்றும் நிதியை சிக்கனமாக பயன்படுத்துவதற்காக உறுப்பினர்களுக்கு வழிகாட்டுதல்

  • சேமிப்பு மற்றும் நிதியின் சிக்கனமான உபயோகத்தை கண்காணித்தல்

  • குழுவினை அமைப்பதற்கும் மற்றும் குழுவின் கையிருப்பு நிதி பயன்பாட்டிற்கும் உதவுதல்

  • குழுவின் இயக்குனர் மற்றும் பிரதிநிதி மற்றும் குழுவின் பதிவேடுகளை முறையாக பராமரிப்பதற்கும் வழிகாட்டுதல்களை வழங்குதல்

  • திட்டத்தின் சமூக வளர்ச்சி நிலைகளை அடைவதற்கும் உளக்கப்படுத்துதல் மற்றும் எளிதாக்குதல்

  • குழுவின் பல்வேறு விஷயங்களான சமூக பொருளாதார சமுதாய செயல் திட்டங்களில் பிரச்சனை தீர்பது போன்ற விஷயங்களுக்கு ஆலோசகராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளது

  • தொடர்ச்சியான பயிற்சியை வழங்குவது மற்றும் இயக்குபவர்கள் பிரதிநிதிகள் குழுக்களுக்கு உதவிபுரிதல் மற்றும் சேமிப்பு மற்றும் கடன் நிதி மேலாண்மையை கூட்டணைப்பு ஒருங்கிணைப் பாளர்களுக்கு வழங்குவது பயிற்சி திட்டங்களின் தாக்கங்களை அளவிடுதல் மதிப்பீடுதல் மற்றும் திட்டங்களில் மாற்றங்கள் மற்றும் திருத்தங்களை ஏற்படுத்துதல்

  • பயிற்சியாளர்கள் மற்றும் கட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களின் களப்பணிகளை கண்காணித்தல் மற்றும் அளவிடுதல்

  • பல்வேறு நிலைகளின் பெண்களின் கட்டமைப்புகளை ஏற்படுத்த உதவுதல்

  • குறிப்பிட்ட கால இடைவெளிகளின் குழுக்களை மதிப்பீடு செய்தல் மற்றும் அனைத்து விதங்களிலும் அவைகளின் செயல்பாடுகளை அதிகரித்தல்

  • ஒவ்வொரு சுய உதவி குழுக்களின் கணக்கு ஏடுகளை ஆண்டு தனிக்கை செய்வதை உறுதிப்படுத்துதல் மற்றும் உதவுதல்

  • சுய உதவி குழுக்களின் தொடர்ச்சியான செயல்பாடுகளை உறுதிசெய்வதன் மூலம் அவைகளின் சுதந்திரமான செயல்பாடுகள் பொருளாதார மேன்மை மற்றும் உற்சார்பு அடைய உதவுதல்

  • சுய உதவி குழுக்களிடையே தொழில் முனைவு தனிமையை வளர்த்தல் சிறு அளவிலான தொழிற்கூடங்களை ஏற்படுத்தி அதன் மூலம்

  • சுய உதவி குழுக்களுக்கு உதவுதல் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு வருமான வளர்ச்சிகான திட்டங்களை வழங்குதல்

ஒருங்கிணைப்பாளர்களின் பணிகள்

(அரசு சாரா அமைப்பின் பனியாளர்கள்)

  • சுய உதவி குழுக்கள் தொடங்க ஏழை பெண்களை ஊக்குவித்தல்

  • சுய உதவி குழுக்களை தொடர்ச்சியாக சந்தித்தல் மற்றும் உளக்கிப் படுத்துதல்

  • சுய உதவி குழுக்களின் தினசரியான நிர்வாகத்தில் ஏற்படும் தவறுகளை சரிசெய்ய சரியான வழிமுறைகளை வழங்குதல்

  • சுய உதவி குழுக்களின் ஏடுகளை பராமரிக்க பயிற்சியினை வழங்குதல்

  • சுய உதவி குழுக்கள் வங்கி கணக்கை தொடங்க உதவுதல்

  • சுய உதவி குழுக்கள் வெளியில் இருந்து கடன் வாங்க மற்றும் விண்ணப்பிக்க உதவுதல்

  • சுய உதவி குழுக்கள் தங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே இருந்து பெற்ற கடன்களை திருப்பி செலுத்த ஊக்கப்படுத்துதல்

  • சுய உதவி குழுக்களின் வருமான உற்பத்தி திட்டங்களை வழங்குவது மற்றும் அதில் உள்ள பிரச்சனைகளை திரிப்பது

பங்கேற்பு கிராம மதிப்பிடல்

உலகளாவிய வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள பல்வேறு முகமைகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளை இந்த அணுகு முறையை உபயோகப்படுத்துகின்றன

வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பணிகளை திட்டமிடுதல் மற்றும் நிர்வகிப்பதில் கிராம மக்களின் அறிவுகளையும் மற்றும் கருத்துக்களையும் ஒருங்கிணைப்பது இந்த அணுகு முறையின் நோக்கம் ஆகும்

இந்த திட்டத்தில் அரசு சாரா அமைப்புகளின் பங்கு மிகவும் முக்கியமானது ஆகையால் இவை மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. கடந்த வருடங்களில் நியாயமான மற்றும் கட்டுப்பாடுகளுடன் தேர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த மதிப்பீடுகளை மேற்கெள்வதில் வேறு மாவட்டத்தை சேர்ந்த திட்ட அலுவலர் மற்றும் டி.இ.டபள்யு சென்னை அலுவலர் மற்றும் வேறு மாவட்டத்தின் தகுதியுள்ள அரசு சாரா அமைப்பு ஆகியவை உள்ளடங்கியுள்ளன. இதன் மூலம் சிறந்த அமைப்பை தேர்வு செய்யப்படுகிறது. அரசு சாரா அமைப்புகளை பொருத்த வரையில் செயல்முறை பயிற்சி மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சிகளை அரசு சாரா அமைப்பின் பணியாளர்களுக்கு வழங்குவது முக்கியமான நடவடிக்கையாகும்.

அரசு சாரா அமைப்புகள் ஒவ்வொன்றிற்கும் வருடத்திற்கு ஒரு முறை தகுதி மதிப்பிடல் (தரப்படுத்துதல்) திட்ட அமலாக்க பிரிவு மூலம் மேற்கொள்ளப்பட்டு அரசு சாரா அமைப்புகளின் குறைகள் கண்டறியப்படும்.

அரசு சாரா அமைப்புகள் இத்தகைய குறைகளை திட்ட அமலாக்க பிரிவின் துணையுடன் சரிசெய்ய முற்பட வேண்டும்

அரசு சாரா அமைப்புகள் மூலம் அனுமதிக்கப்பட்ட மகளிர் திட்டம்

வேளாண் விரிவாக்க மையம்

அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களும் சுய உதவி குழுக்களை அமைப்பதிலும் மற்றும் பயிற்சியை வழங்குவதில் கவணத்தை கொண்டுள்ளன.

உணவு பதப்படுத்துதல் பயிற்சி யுக்திகள்

வேளாண் விரிவாக்க மையம் - காரமடை கோயமுத்தூர்
மைரடா வேளாண் விரிவாக்க மையம் - அணிகள் சுய உதவி குழுக்கள்

 

Facilities Facilities
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015