சுய உதவிக் குழு என்றால் என்ன ?
சுய உதவிக் குழு என்பது 15-20 உறுப்பினர்களை கொண்ட குழுவாகும். அனைத்து உறுப்பினர்களும் மனமுகந்து சிறு சேமிப்பு கடன் மற்றும் சமூக நலனில் ஈடுபடுவர்.
சுய உதவிக் குழுக்களின் குறிக்கோள்கள் யாது?
-
உறுப்பினர்களிடையே சமூக பொருளாதார அந்தஸ்தை உயர்த்துவர்
-
சிறு சேமிப்பு பழக்கத்தை கிராம பெண்களிடம் அறிவுறுத்துவர்
-
வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுடன் சமூக உறவுகளை மேம்படுத்தி ஊரக சமூகத்தின் தன்னம்பிக்கையை வளர்ப்பர்
-
உறுப்பினர்களிடையே முகாமைத்து மேம்படுத்துவர்
-
வருமானம் தரும் தொழில்களை உண்டாக்குவர்
-
கல்வி அறிவு மேம்படுத்துதல், விழிப்புணர்வு மற்றும் சம உரிமை பெறுதல்
-
விரிவாக்க கல்வி மற்றும் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப மாற்றம் மற்றும் விற்பனை தகவல்களை தருவர்
-
புதிய தொழில்நுட்பங்களை பற்றி கலந்தாலோசித்தல் மற்றும் மாற்றங்களை மேற்கொள்வர்
நீடித்த சுய உதவிக் குழுக்களின் தனித்தன்மை யாது?
சுய உதவிக் குழுக்களின் வலிமை மற்றும் நீடித்த செயல்பாட்டிற்கு குழு உறுப்பினர்களின் திறமை மற்றும் நற்பண்புகள் மிக முக்கிள வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
குழு உறுப்பினர்களை புதிய தொழில்நுட்பங்கள் கலந்தாலோசித்தல் போன்றவற்றை ஊக்கப்படுத்துதல்
-
கருத்துகளை மற்ற குழுவிடம் பகிர்ந்து ஆதரவு தெரிவித்தல்
-
அனைவரின் கலந்தாலோசித்து முடிவு எடுத்தல்
-
தினசரி அனைவரும் கூடி பிரச்சனைகளை ஆராய்தல் மற்றும் விதிமுறைகளை மீறாமல் செயல்படுதல்
-
குழு நடவடிக்கை மற்றும் முடிவுகளை பதிவு செய்தல்
-
குழு முடிவுகளை தினசரி பின்பற்றுதல்
-
குழு தலைவர், செயலாளர், பொருளாதாரர் ஆகியோரை ஒருமனதாக தேர்வு செய்தல்
சுய உதவிக் குழு எப்பொழுது தொடங்கப்பட்டது?
1989 ஆம் ஆண்டு சுய உதவிக் குழு தொடங்கப்பட்டது.
சுய உதவிக் குழுக்களுக்கு எந்த வங்கிகள் கடன் வழங்க தயாராக உள்ளன?
தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளும் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க சம்மதித்துள்ளன.
சுய உதவிக் குழு கணக்கு பராமரிப்பின் குறைந்த தொகை யாது?
குறைந்த தொகையாக 1000 ரூபாயாவது சுய உதவி குழு கணக்கில் இருக்க வேண்டும்.
அடிப்படை கிளை என்றால் என்ன?
அடிப்படை கிளை என்பது மாவட்ட மற்றும் கிராமங்களின் வங்கி கிளைகளில் சுய உதவிக் குழுக்கள் கணக்கு வைப்பதாகும். மாவட்டம் மற்றும் கிராமங்களில் ஓர் கிளைக்கு மேல் இருப்பின் சுய உதவிக் குழுக்கள் எவ்வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார்களோ அதுவே அடிப்படை கிளையாகும்.
சுய உதவிக் குழுக்களுக்கு தானியங்கி இயந்திர (ATM) பரிவர்த்தனை வசதி இருக்கிறதா?
சுய உதவிக் குழுக்களுக்கு தானியங்கி இயந்திர (ATM) பரிவர்த்தனை வசதி கிடையாது.
சுய உதவிக் குழுக்கள் பதிவு மேற்கொள்ள வேண்டும்?
சட்டப்படி பதிவு செய்வது அவசியமல்ல ஏனெனில் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பொதுவாகவே படிப்பற்றவர்களாவர்.
சுய உதவிக் குழு உறுப்பினர்கள் 20க்கு மேல் சேர்க்கப்படமாட்டாது?
அதிக உறுப்பினர்கள் இருப்பின் அவர்களுக்குள் ஒற்றுமை இருக்காது. இரண்டாவதாக 20 உறுப்பினர்களுக்கு மேல் இருப்பின் நிதி இயக்கத்தில் பங்கு பெறும் அனைவரும் பதிவு செய்திருக்க வேண்டும்.
சுய உதவிக் குழுவில் உறுப்பினர்களாக தகுதியுடையவர் யாவர்?
சுய உதவிக் குழு என்பது வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்களுக்காக தொடங்கப்பட்டதாகும். பெண்கள் அல்லது விவசாயிகள் ஓர் குறிப்பிட்ட பயிர் அல்லது விளைப்பொருட்களை விளைவிப்பவர்கலோ அவர்களை இஞ்சி, மஞ்சள், குழு என்று கூறுவர். சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக வேண்டிய தகுதிகள் பின்வருவன.,
-
உறுப்பினர்கள் வயது வந்தோராக இருத்தல் வேண்டும்
-
குடும்பத்தில் உள்ள ஓர் நபர் மட்டும் குழு உறுப்பினர் ஆகலாம்
-
உறுப்பினர்கள் அனைவரும் சமூக பொருளாதார அந்தஸ்தை அனுபவிப்பர்
-
உறுப்பினர்கள் அனைவரும் உள்ளூர் கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆவர்
-
உறுப்பினர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களின் உறுப்பினர்களாக இருக்க இயலாது
அதிக சேமிப்புகளின் மூலம் சுய உதவிக் குழுக்களை வலிமையான குழு என்று கூற முடியுமா?
அதிக சேமிப்பு இல்லாமல் தினசரி சேமிப்புகளைக் கொண்டு வலிமையான குழு என்று கூறலாம்.
குழுக்கள் எப்பொழுது உள்கடன் வாங்கலாம்?
குழுக்கள் எவ்வளவு சீக்கிரமாக வாங்க முடியுமா வாங்கலாம். முதல் அல்லது இரண்டாவது மாதத்திற்குள் பெறலாம்.
குழு அமைப்பதற்கு அரசு சாரா நிறுவனங்களின் உதவி வேண்டுமா அல்லது மற்ற முகாம்கள் குழு அமைவதற்கு உதவலாமா?
குழு அமைப்பதற்கு அரசு சாரா நிறுவனங்கள் அல்லது மற்ற முகாம்களில் உதவி அவசியம் தேவைப்படுகிறது.
வங்கி கடன் எப்பொழுது தொடங்கப்பட வேண்டும்?
குழு கூட்டம், சிறு சேமிப்பு மற்றும் குழுக்களுக்குள் சேமிப்பு தொகையை பங்கிடுவது ஆகியவற்றிற்கு பிறகு வங்கி கடன் தொடங்கப்படும்.
மகளிர் திட்டம் என்றால் என்ன?
மாவட்டங்களில் உளவு மாவட்ட ஊரக மேம்பாட்டு முகாமின் திட்ட அலுவலர், பெண்களின் நல்வாழ்வுக்காக மகளிர் திட்டத்தை தொடங்கியுள்ளார்.
சுய உதவிக் குழுக்களின் குறிக்கோள் யாது?
பெண்களுக்கு சம உரிமை மற்றும் பொருளாதார மேம்பாடு சுய உதவிக் குழு தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்யும் வளாகம் யாது?
பூமலை வணிக வளாகம் .
சுய உதவிக் குழுக்கள் ஆண் / பெண் இருபாலருக்கும் உரியதா?
இருபாலருக்கும் உரியதாகும் இருப்பினும் பெண்கள் ஊக்கப்படுத்தப்ப
சுய உதவிக் குழு யாரால் அமைக்கப்படுகிறது?
சுய உதவிக் குழு ஆரம்ப காலத்தில் வெளி நிறுவனங்களில் தூண்டுதல் மற்றும் விரிவாக்க முகாம், சமூக சேவகர்கள் திட்டம் மேற்பார்வையாளர்களின் உதவியுடன் இயக்கப்பட்டது. இதற்கு பதிலீடாக கிராம உறுப்பினர் அவர்களுக்கு குழு அமைத்து செயல்படுவர்.
சுய உதவிக் குழு என்பது அரசு திட்டமா?
சுய உதவிக் குழு என்பது அரசு இயக்கும் திட்டம் அல்ல கிராம மக்களின் கமூக பொருளாதார அந்தஸ்தை மேம்படுத்துவதாகும். சுய உதவிக் குழு அமைப்பதற்கு அரசு சாரா நிறுவனம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவலாம்.
சுய உதவிக் குழு அமைப்பில் அரசு ஆதரவு யாது?
ஆரம்ப காலத்தில் சுய உதவிக் குழுக்கள் தனியார் நிறுவனங்களின் மூலம் இயக்கப்பட்டது. பின்பு சுய உதவிக் குழுக்கள் வலிமை அடைந்தவுடன் உறுப்பினர்கள் பொருளாதார மேம்பாட்டிற்காக வாய்ப்பு தேடுவர் குழு தொடர்பு இதர நிறுவனற்களுடன் மேற்கொள்வதற்காக அரசு ஆதரவு தெரிவித்தன.
சுய உதவிக் குழு பதிவு செய்வது சட்ட பாரதீனம் அவசியமா?
குழு பதிவு செய்வது சட்ட பாரதீனமாக அவசியம் அல்ல. எனினும் அவற்றின் அதீத செயல்பாடுகளுக்கு, விதிமுறைகளை பின்பற்றுவது அவசியமாகும்.
சுய உதவிக் குழு அமைப்பில் பண சேமிப்பு அவசியமா?
பண சேமிப்பு என்பது சுய உதவிக் குழு அமைப்பில் அவசியமே ஆகும். உறுப்பினர்கள் சேமிக்கும் குறிப்பிட்ட தொகையை ஒன்றாக சேர்த்து பிரச்சனைகள் ஏற்படும் பொழுது, தீர்வு காண வழங்குவதாகும்.
சேமிப்பு கணக்குகளை ஆரம்பிக்கும் காரணம் யாது?
-
குழுவின் மொத்த தொகையை பாதுகாப்பாக பயன்படுத்துதல்
-
சேமிப்பு வட்டி தொகையை அனைவரும் சமமாக பங்கு பிரித்தல்
-
வங்கி மற்றும் குழுக்களின் இடையே வலிமையான தொடர்பு அமைத்தல்
வங்கிகளில் கணக்கு ஆரம்பிக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
-
குழு வங்கி கடன் மற்றும் அதன் பரிவர்த்தனை குழு கூட்டத்தின் தகவல்கள் அடங்கிய விதிமுறை ஏடு
-
குழு சேமிக்கும் தொகையின் மதிப்பு
-
குழு நிர்வாக உறுப்பினர்களின் 3 புகைப்படங்கள்
-
வங்கி கணக்கு வைத்துக்கொள்ளும் நபரின் அறிமுக கடிதம்
பின்வரும் நிபந்தனைகள் பின்பற்றினால் வங்கிகளின் கணக்கு ஆரம்பிப்பது மிக எளிதாகும்:
-
சுய உதவிக் குழுக்களின் இரப்பர் முத்திரை
-
குழு கூட்டத்தின் விதிமுறைகள்
-
குழு பதிவேடு பராமரிப்பு
-
குழு மற்றும் வங்கிகளின் தொடர்பு தகவல்கள்
சுய உதவிக் குழுக்களினால் பராமரிக்கப்படும் பதிவேடுகள் யாவை?
குழு கூட்டத்திற்கு பங்கேற்கும் அனைவரின் வருகையை பதிவு செய்வதாகும் அனைத்து குழு உறுப்பினர்களும் கையெழுத்திட வேண்டும்
குழு கூட்டத்திற்கு கலந்தலோசிக்கும் அனைத்து தகவல்களையும் மற்றும் முக்கிய தீர்மானங்களை பதிவு செய்வது ஆகியவற்றை கொண்டதாகும்
இப்பதிவேடுகளில், குழு உறுப்பினர்களின் தனிப்பட்ட சேமிப்பு மற்றும் மொத்த சேமிப்பு தகவல்களை தரவல்லதாகும்
குழுவின் மொத்த தொகையின் பரிவர்த்தனைகள் தகவல்களை கொண்டதாகும்
அனைத்து குழு உறுப்பினர்களிடம் இப்புத்தகம் கையில் இருக்க வேண்டும். இப்புத்தகத்தை குழு கூட்டத்திற்கு எடுத்து வர வேண்டும்.
வங்கி கணக்கு பராமரிப்பின் போது பின்பற்ற வேண்டிய குறிப்புகள் யாவை?
-
வங்கி கணக்குகள் தெளிவாக இருக்க வேண்டும்
-
ஒவ்வொரு குழு உறுப்பினர்களும் வங்கி கணக்கு ஆரம்பிப்பதன் நோக்கம் மற்றும் முக்கியத்துவங்களை அறிந்து கொள்ளுதல் அவசியமாகும்
-
வங்கி பரிவர்த்தனைகள் அனைத்தும் குழு உறுப்பினர்களுக்கு அனைவருக்கும் தெரிவது போல் மேற்கொள்ள வேண்டும்
-
அனைத்து குழு தகவல்கள் மற்றும் தீர்மானங்களை பதிவு செய்தல்
-
அனைத்து பதிவேடுகளும் சரிவர கண்காணிக்கப்பட வேண்டும்
சுய உதவிக் குழுவில் எவ்வித நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும்?
குழு மேலாண்மை மாதிரிகள்:
முன் திட்டமிடல் மற்றும் குழுக்களின் கூட்டம் ஏற்பாடு செய்யும் நோக்கம் ஆகியவை ஆகும்.
வருகை மாதிரிகள்:
குறைந்த உறுப்பினர்கள் குழு கூட்டத்தை பங்கேற்கும் நிலைமையை தடுப்பதாகும்.
தேர்வற்ற மாதிரிகள்:
குழு கூட்டங்களில் பங்கேற்காது சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றை கொண்டதாகும்.
நிர்வாக மாதிரிகள்:
நிர்வாகத்தின் சிறப்பான செயல்பாடுகள் பற்றியதாகும்
நிதி மேலாண்மை மாதிரிகள்:
உறுப்பினர்கள் கட்டணம் வங்கி கடனுக்கான வட்டி விகிதம் கடன் தர குறைந்த மற்றும் அதிக தொகை பற்றிய தகவல்களை தருவதாகும்.
மக்கள் செயல் மற்றும் ஊரக தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான குழு அமைப்பு:
இந்தியாவில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஊரக மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய தன்னிச்சை தொண்டுகளினால் ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தில் மக்கள் செயல் மற்றும் ஊரக தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான குழு 1986 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
கப்பார்ட் (CAPART) இரண்டு முக்கிய முகாம்களான மக்கள் செயல் மற்றும் ஊரக தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான குழு மற்றும் இந்திய மேம்பாட்டில் மக்கள் செயல் (PADI) ஆகியவற்றை இணைத்து உருவானதாகும். கப்பார்ட் என்பது தனிச்சு செயல்படும் நிறுவனமாகும். அவை சங்க பதிவு (1980) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதாகும். மேலும் இவை ஊரக மேம்பாட்டு செயலகம் இந்திய அரசின் கீழ் இயங்குவதாகும். தற்போது கப்பார்ட் நிறுவனம் ஊரக மேம்பாட்டு நலனில் அதிக ஆர்வம் காட்டி நாட்டில் சுமார் 12,000 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்கிறது.
http://capart .nic.in/orgn/index.html.
விரிவாக்க செயல்பாடுகளில் ஊரக பங்கேற்பு அணுகுமுறை:
கடந்த 1980 ஆம் ஆண்டு மற்றும் 1990 ஆம் ஆண்டு வேளாண் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்தில் வயல்வெளி அனுபவங்கள் வழிமுறைகள் மற்றும் புதுமைகளை அறிய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. பங்கேற்பு அணுகுமுறை என்பது மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அணுகுமுறையை பற்றி விரிவாக எடுத்து கூறுவதாகும். மேலும் இவற்றை வழிகாட்டி கொள்கைகள் எனக் கூறலாம்.
பங்கேற்பு அணுகுமுறை மற்றும் வழிமுறை இடத்திற்கு தகுந்தவாறு மாறுபடும். இத்தகைய பங்கேற்பு வகைமுறை விரிவாக்க பகுதிகளில் பல்வேறு பயன்படுத்தப்படுகிறது. அவை குறிப்பிட்ட கூழலை ஆராய்வது பிரச்சனைகளை அறிய செயல் சார்ந்த பண்கள் திட்டத்தின் வெற்றி மற்றும் தோல்விகளை ஆராய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. விவசாயிகளின் பங்கேற்பு வேளாண் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்தில் அவசியம் தேவைப்படுகிறது. |