சுவர்ணஜெயந்தி சுவர்ஜ்கார் யோஜ்னா மற்றும் சுய உதவிக் குழுக்கள் - கன்யாகுமரி :
கன்யாகுமரி மாவட்டத்தில் ஏழை பெண்கள் ஒருங்கிணை படுத்தப்பட்டுள்ளன. மாவட்டங்களில் சுமார் 7000 சுய உதவிக் குழுக்கள் வருமானம் தரும் திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். புரணாங்களில் ஏழைகளினால் சேமிப்பு மேற்கொள்ள முடியாது என்பது தற்பொழுது மாற்றி எழுதப்பட்டுள்ளது. அனைவரும் ஒருங்கிணைந்து சுமார் 3.5 கோடி ரூபாய்களுக்கு மேல் சேமித்துள்ளனர். எனவே அவர்களது பணத் தேவைகளை வட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடம் இருந்து பெறாமல் சேமிப்புகளின் மூலம் சந்திக்கின்றேன். மாவட்டங்களில் கிராம கை வினைப்பொருட்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.20 கோடி வருமானமாக கிடைக்கிறது. எனவே கிராம பெண்கள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு உட்கார்ந்த இடத்திலேயே வருமானம் பெறுகின்றனர்.
சுவர்ணஜெயந்தி சுவர்ஜ்கார் யோஜ்னா திட்டத்திற்கு பிறகு பல குழுக்கள் சுழல் நிதியை அரசு மானியத்துடனும் மற்றும் இதர வங்கி கடன்களில் மூலம் பெறுகின்றனர். கன்யாகுமரியில் சிறப்பாக இயங்கி வரும் பகுதி கட்டிமன்கோடு பஞ்சாயத்து ஆகும். இப்பகுதியில், உள்ளூர் பஞ்சாயத்து அரசு சாரா நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசு முகாம்கள் ஒருங்கிணைந்து சுய உதவிக் குழுக்களை செயல்படுத்துகின்றன.
ஊதுபத்தி தயாரித்தல், பனை ஓலையில் தூரிகை தயாரித்தல், மரவள்ளி பதப்படுத்தும் பொருட்கள், தென்னை ஓலையில் கூரை வேய்தல் புளி பதப்படுத்தும் பொருட்கள் ஆகியவை சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகளாகும். இப் பஞ்சாயத்தில் 6585 நபர்கள் வசிக்கின்றனர். இவற்றுள் பாதி மக்கள் வறுமை கோடுகளுக்கு கீழ் உள்ளவர்கள் ஆவர் மொத்தம் 92 சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. கிருஷ்ணபுரம் கிராமங்களில், நான்கு செயல்பாடுகள் சிறப்பான பணிகளை உள்ளூர் பெண்களுக்கு தரவல்லதாகும். சுய உதவிக் குழுக்களான துளசு, நாகஷ்பம், பாரிஜாதம், மற்றும் பரிக்கொழுந்து ஆகியவை உள்ளூர் அரசு சாரா நிறுவனங்களான நல ஒளி சூடில் நிதியான 25,000 ரூபாயை ஒவ்வொரு சுய உதவிக் குழுக்களுக்கும் வழங்குகிறது.
சேருப்பன்கோடு கிராமங்களில் ஓய்வு நேரத்தில் பெண்கள் புளியைக் கொண்டு பதப்படுத்தும் பொருட்களை தயாரிப்பதன் மூலம் நாள் ஒன்றிற்கு ரூ.25 முதல் 30 ரூபாயை வருமானமாக பெறுகின்றனர். அரசர்கோணம் கிராமங்களில், பெண்கள் பனை நார்களைக் கொண்டு தூரிகை தயாரிப்பதன் மூலம் நியாயமான வருமானங்களை பெறுகின்றனர். மேலும் சுவர்ணஜெயந்தி சுவர்ஜ்கார் யோஜ்னா வழங்கும் கடன் மற்றும் மானியங்களை வைத்து குழுக்கள் பணியாற்றுகின்றனர். உள்ளூர் வங்கிகள், முதன்மை வேளாண் கூட்டுறவு வங்கி மற்றும் மத்திய இந்திய வங்கிகள் முன் கடனாக வழங்க சம்மதித்துள்ளனர். 92 குழுக்களில் 34 குழுக்கள் சுழல் நிதியை பெறுகின்றனர்.
மூலதனம்:
http://kanyakumari.nic.in/selfhelp.html
|