காரணிகள்:
சமூக மற்றும் பொருளாதார காரணிகள்
பஞ்சத்தின் காரணத்தால் உணவு பற்றாக்குறை, நெரிசல், சுகாதாரமற்ற வாழ்க்கை. குழந்தைகளை சரிவர பராமரிக்காமல் இருத்தல் ஆகியவை புரத சக்தி ஊட்டச்சத்துக் குறைவான முக்கிய காரணிகள் ஆகும்.
உயிரிய காரணிகள்:
பிரசவத்தின் போது அல்லது அதற்கு முன்பு, தாய் ஊட்டச்சத்துக் குறைவு இருப்பின் குழந்தை பிறக்கும் போது எடை குறைவாக இருக்கம். வயிற்றுப்போக்கு, தட்டம்மை மற்றும் சுவாசம் சம்பந்தப்பட்ட இடர்பாடுகள் எதிர்மறையான புரதச்சத்து மற்றும் சக்தி குறைபாடு ஏற்படும்.
சுற்றுப்புற காரணிகள்:
கூட்ட நெரிசல் மற்றும் சுகாதாரமற்ற நிலையினால் வயிற்றுப் போக்கும் வறட்சி, வெள்ளத்தாக்கு, பூகம்பம், போர் மற்றும் கட்டாய இடமாற்றம், நீண்ட உணவு பற்றாக்குறைக்கும் வழிவகுக்கும்.
வயது:
பொதுவாக பச்சை குழந்தை மற்றும் இளம் குழந்தையை மட்டுமே தாக்கும்.
பற்றாக்குறையான உணவை நீண்ட நாட்கள் எடுப்பதால் மராமஸ் ஒரு வருடத்திற்கு முன்னரே தாக்கும். ஆயினும் குவாஷயாகோர் 18 மாதங்கள் கழித்தே தோன்றும்.
|