வைட்டமின் பற்றாக்குறையால் ஏற்படும் நோய்கள்:
வைட்டமின் எ (ரெட்டினால்)
மாலைக்கண் நோய்:
வைட்டமின் எ பற்றாக்குறையின் ஆரம்ப கட்டத்தில், தனிநபர் ஒருவர் மங்களான ஒளியில் பார்க்க முடியாது. இறுதியான நிலையில்இ மங்கலான ஒளியையே பார்க்க முடியாது.
மாலைக்கண் விழியின் படலம்:
விழிகள் உலர்ந்து, தடித்து, சுருங்கி மற்றும் நிறம் கொண்டு காணப்படும். நிறமியிகளினால் விழிகள் புகை மண்டலம் போல் காணப்படும்.
மாலைக்கண் விழித்திரை:
உலரும் தன்மை விழித்திரைக்கு பரவினால் மங்கலான நிலை ஏற்படும்
பிட்டாட் புள்ளிகள்:
சாம்பல் நிற முக்கோண வடிவ மினுமினுக்கும் வெண் பற்கறை ஏற்படும்
கேரட்டோமலேசியா:
மாலைக்கண் விழியின் படலம், மற்றும் விழித்திரையை குணமாக்காமல் இருத்தல், அவை கேரட்டோமலேசியாகும்.
போலிகுவார் ஹைப்பர்கேரட்டோசிஸ்:
தோல்கள் கரடுமுரடாக உலர்ந்து காணப்படும்.
மாலைக்கண் தேசிய நோய் தடுப்பு முறையின் கீழ் 2,00,000 சர்வதேச அளவு குறியீடுகள் கொண்ட வைட்டமின் எண்ணெயையை 6 மாதத்திற்கு ஒரு முறை பள்ளி குழந்தைகளுக்கு தருவதன் மூலம், வைட்டமின் எ பற்றாக்குறையை வெளியேற்றலாம்.
மூலப்பொருட்கள்:
விலங்கின் உணவுகளில் வைட்டமின் எ ரெட்டினால் மற்றும் உயிரிய சேர்மப் பொருள் என்ற வடிவத்தில் காணப்படும். முட்டைகள் விலை மிகுதியினாலும், வைட்டமின் எ மூலப்பொருள் அதிகம் காணப்படுகிறது.
இந்திய உணவுகளில் சுமார் 80 சதவிகித வைட்டமின் எ வகை தாவர உணவுகளான பி-கரோட்டின், எ-கரோட்டின், ஜி-கரோட்டின் மற்றும் பி-கிரிப்ட்டோசான்தின் கொண்டு அனுப்பப்படுகிறது. அனைத்து கரோட்டன் வகைகளை காட்டிலும் பி-கரோட்டினில் அதிக வைட்டமின் செயல்பாடுகள் உள்ளன. பச்சை காய்கறிகள் மற்றும் மஞ்சல் நிற பழங்களான மா, பப்பாளி, மற்றம் காரட்டில் அதிக வைட்டமின் எ உள்ளது.
வைட்டமின் எ அதிகம் கொண்ட உணவுகள்:
உணவு வகைகளின் பெயர்கள் வைட்டமின் எ மி.கி/100 கிராம்
செம்மதி ஈரல் 6690
வெண்ணெய் 960
நீரக எண்ணெய் 750
பசு நெய் 600
கோழி முட்டை 420
பசும்பால்(பசும்பால் பொடி) 420
தயிர் 82
எருமை பால் 53
எருமை தயிர் 31
ஆட்டிரைச்சி 9
சிகிச்சை:
1-6 வயதுடைய குழந்தைகளில் நோயை கண்டறிந்த உடனே, 200,000 சர்வதேச அளவு கொண்ட எண்ணெயையை கொடுக்க வேண்டும். தொடர்ந்து வாந்தி மற்றும் வயிற்றுப்போக்குக் கொண்ட குழந்தைகளுக்கு 1,00,000 சர்வதேச அளவு வைட்டமின் எ வை தசையில் ஊசிக்கொண்டு செலுத்த வேண்டும். இவற்றை தொடர்ந்து, 1 முதல் 4 வாரங்கள் கழித்து 2,00,000 சர்வதேச அளவு வைட்டமின்களை தர வேண்டும். தொடர்ந்து விழிகளில் கோளாறு ஏற்பட்டால், அவசர சிகிச்சை எனக் கருதி, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
மாலைக்கண் நோயை குணமாக்கும் சிகிச்சை முறை விதிகள்:
உடனடி நிவாரணம் |
1 வயது குறைந்த குழந்தைகள் |
1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் |
உடனடி நிவாரணம் |
100,000 சர்வதேச அளவு |
200,000 சர்வதேச அளவு |
அடுத்த நாள் |
100,000 சர்வதேச அளவு |
200,000 சர்வதேச அளவு |
2 முதல் 4 வாரங்கள் கழித்து |
100,000 சர்வதேச அளவு |
200,000 சர்வதேச அளவு |
கடுமையான புரத ஊட்டச்சத்து குறைவு |
|
|
கூடுதலான மாத சிகிச்சை, புரத ஊட்டச்சத்துக் குறைவு மாறும் வரை |
|
|
முலதனம்: உலக சுகாதார நிறுவனம்/ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் பாதுகரப்பு நிதியம்,1998
வைட்டமின் டி (T - டி - ஹைட்ரோ கொளஸ்டிரால்)
|