உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ)
உடல் நிறை குறியீட்டெண் என்பது மொத்த உடலின் கொழுப்பானது, நோய் மற்றும் மரணம் ஆகியவற்றுடன் தொடர்பானது. இதன் மதிப்பெண்ணானது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் குறிக்கும், இவை சில வரம்புகள் உடையது அவை:
விளையாட்டு வீரர்கள் மற்றும் மற்றவர்கள் உடல் கொழுப்பு மதிப்பீடு செய்யலாம்.
முதியோர்க்கு மற்றும் தசை குறைவாக உள்ளவர்களின் உடல் கொழுப்பு குறைத்து மதிப்பீடு இருக்கலாம். |
உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ)= உடல் எடை(கிலோகிராம்) / ( உயரம்(மீட்டர்)2
உங்கள் மொத்த உடல் கொழுப்பு மதிப்பிட பிஎம்ஐ கால்குலேட்டர் அல்லது அட்டவணைகள் பயன்படுகிறது. பிஎம்ஐ மதிப்பெண் பின்வருமறு:
உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) அளவிட ஒரு நபரின் உயரம், உடல் எடை ஒரு புள்ளிவிவர நடவடிக்கையில் மதிப்பிடப்படுகிறது. பிஎம்ஐ
உடல் நிறை குறியீட்டெண் கொண்டு, ஒரு நபரின் உயரத்திற்கேற்ற எடையை அடிக்கடி சரிபார்த்து கொள்ளலாம். |
|
பிஎம்ஐ (kg/m2) |
< 16.5 |
கடுமையாக எடைகுறைவு |
16.5 முதல் 18.5 வரை |
நடுனிலையான எடைகுறைவு |
18.5 முதல் 25 வரை |
சரியான எடை அளவு |
25 முதல் 30 வரை |
அதிக எடை |
30 முதல் 35 வரை |
அதிக பருமனான எடை |
35 முதல் 40 வரை |
மிகவும் அதிகமான எடை |
>40 |
நோயுற்ற உடல்பருமன் |
உடல் நிறை குறியீட்டெண் சாதாரண வரம்பானது கர்ப்பிணி மற்றும் தாய்மார்கள் பொருந்தாது.
மற்ற அபாய காரணிகள்
அதிக எடை அல்லது உடல்பருமன் தவிர, மற்ற அபாய காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
-
உயர் இரத்த அழுத்தம்
-
உயர் HDL - கொழுப்பு ("கெட்ட" கொழுப்பு)
-
குறைந்த HDL- கொழுப்பு ("நல்ல" கொழுப்பு)
-
அதிக ட்ரைகிளிசரைடுகள்
-
உயர் இரத்த குளுக்கோஸ் (சர்க்கரை)
-
குடும்பங்களில் பாரம்பரிய இதய நோய்
-
உடல் மந்த நிலை
- சிகரெட் புகைப்பது
சரியான உடல் எடை உடல் நிறை குறியீட்டெண் அளவால் ஏற்படும் நன்மைகள் :
-
நீரிழிவு ஏற்ப்படாது.
-
ஏற்கனவே நீரிழிவு நோய் இருந்தால் அது உங்கள் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது மற்றும் நீரிழிவு மருந்துகளை குறைக்க உதவுகிறது.
-
இரத்த அழுத்தம் தடுக்கும்.
-
நீங்கள் ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அது நன்றாக உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த மற்றும் இரத்த அழுத்த வீழ்த்த உதவுகிறது.
-
இதய நோயை தடுக்கும்.
-
பக்கவாதத்தை தடுத்தல்.
-
சில வகையான புற்றுநோயுடன் தடுத்தல்.
-
மூட்டு வலிகள் போன்றவற்றை தடுத்தல்.
-
கொழுப்பின் அளவை இயல்பாக்குதல்.
- வாழ்நாள் அதிகரிக்கவும்..
-
இளைமையாக இருக்கவும்.
-
ஆற்றல் மட்டங்கள் மேம்படுத்தவும் உதவுகிறது.
இடுப்பு சுற்றளவு
இடுப்பு சுற்றளவு அளவீடுகள்.
ஆண்கள்: > 40(> 102 செமீ)
பெண்கள்: > 35 (> 88cm)
அடிவயிறு - இடுப்பு விகிதம் (WHR)
மற்ற ஆந்த்ரோபோமெட்ரிக் அளவீடுகள் பல்வேறு உடல் பருமனை கண்டறிவதற்கு பயன்படுகிறது . இடுப்பு விகிதம் ஒரு எளிய மற்றும் மிகவும் பயனுள்ள அளவுருவாக உள்ளது. மனிதனில், மார்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் கொழுப்பானது படிகிறது.ம் .பெண்களில், தொடை மற்றும் பின்புறத்தில் மீது கொழுப்பானது சேர்கிறது.
பெரியவர்களுக்கான சிறந்த சுகாதார WHR விகிதம்
ஆண்களுக்கு அடிவயிறு - இடுப்பு விகிதம் 1.0 மேலேயும் மற்றும் பெண்களில் 0.9 மேலேயும் -இடுப்பு விகிதம் இருப்பின் அது உடல் பருமன் குறிக்கிறது.
அடிவயிறு-இடுப்பு விகிதம் = |
இடுப்பு சுற்றளவு (செ.மீ)
------------------------------------
அடிவயிறு சுற்றளவு (செ.மீ)
|
|
உடல் எடை அளவு உடல் எடை அளவு (கிலோ) = உயரம் (செ.மீ.) -100
உடல் கொழுப்பின் சதவீதம்
உடல் கொழுப்பானது உடலில் உள்ள தோலடி திசுக்களின் தடிமனை அளவிட்டு தீர்மானிப்பதன் மூலம் நியமிக்கப்படுகிறது .
வகைபாடு |
பெண்கள் (கொழுப்பு%) |
ஆண்கள் (கொழுப்பு%) |
சரியான அளவு |
21-24 |
14-17 |
ஏற்கக்கூடிய |
25-31 |
18-25 |
பருமன் |
32+ |
25+ |
ஆதாரம்
Srilakshmi .B 2003.Dietetics, New Age International (P) Publishers Ltd.Chennai.
|
|
|