உணவுகளின் செயல் கூறுகள்
உடலில் நடக்கும் செயல்கூறுகளை அடிப்டையாகக் கொண்டு பத்திய உணவுகள் வகைப்படுத்தப்படுகிறது.
அ) உடற்செயலியல் அடிப்டையில் உணவு வகைகள்:
1. சக்தி அளிக்கும் உணவுகள்:
மாவு மற்றும் கொழுப்பு சத்துக்கள் அடங்களி உணவு வகைகள் ஆகும். உடலில் உள்ள அனைத்து உறுப்பக்களும் செயல்பட சக்தி அளிக்கிறது. (எ-டு) தானியங்கள் வேர் மற்றும் கிழங்கு காய்கறிகள் உலர்ந்த பழ வகைகள், எண்ணெய், வெண்ணெய் மற்றும் நெய்.
2. உடல் கட்டுக்களை மேம்படுத்தும் உணவுகள்:
புரதச்சத்து அடங்கிய உணவு வகைகள் ஆகும். (எ-டு) பால், இறைச்சி, மீன், பருப்பு வகைகள் மற்றும் கொட்டைகள்.
3. பாதுகாப்பான உணவுகள்:
புரதம், வைட்டமின் மற்றும தாதுப்பொருட்கள் கொண்ட உணவு வகை ஆகும். இவை உடற்செயல் மேம்பாடு, உடல் வெப்பத்தை மேம்படுத்துதல் தசை சுருக்குதல், நீர் உடல் நீரை சமநிலையில் வைத்தல் மற்றும் ரத்த உறைதலை தடுத்தல், உடல் கழிவுகள் வெளியேற்றம் மற்றும் இதயத் துடிப்பை சீராக வைத்தல், (எ-டு) பால், முட்டை, கல்லீரல், பழங்கள் மற்றும் காய்கறி வகைகள்.
சமூக செயல்பாடுகளின் அடிப்படையில் உணவு வகைகள்:
உணவு என்பது சமூகம் பண்பாடு மற்றும் மதம் கார்புக் கொண்ட மையப் பொருளாக விளக்குகிறது. மேலும் இலை அனபு, நட்புரிமை, மகிழ்ச்சியை மதம், சமூக மற்றும் குடும்ப நிகழ்ச்சியில் வெளிப்படுத்தவல்லதாகும்.
உளவியல் செயல்பாடுக் கொண்ட உணவு வகைகள்:
வினை மற்றும் சமூக தேவைகளை பூர்த்தியாவது மட்டுமின்றி மனிதனின் உணர்ச்சியையும் திருப்தி அடைய செய்ய வேண்டும்.
(எ-டு) வீட்டு அருஞ்சுவை உணவு செய்து பரிமாறினால் அதுவே அன்பு மற்றும் பாசத்தை வெளிப்படுத்துவதாகும்.
|