முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
ஊட்டச்சத்துக்களின் முக்கியத்துவம் :: பெருஊட்டச்சத்துக்கள்

மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்)
மாவுச்சத்து என்பது சர்க்கரை அல்லது பல்வகை சர்க்கரையிலான மாவுச்சத்து ஆகும். இது செரிமான நொதிகள் அல்லது நீர்த்த அமிலங்களால் எளிய சர்க்கரையாக மாறும். கார்பன், மாவுச்சத்தில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் கொண்ட கலவைகளாக உள்ளன. இது மாச்சத்து, குளுக்கோஸ், கரும்பு சர்க்கரை, பால், சர்க்கரை போன்ற பொருட்களில் மிகுதியாக உள்ளது

வகைப்பாடுகள்
வகைப்பாடுகள்
கூறுகள் கருத்து
தனி சர்க்கரை ஒற்றை மற்றும் இரட்டை சர்க்கரை உயர் இரத்தக் குளுக்கோஸ் மற்றும் இன்சுலின், நீரிழிவு நோய், இதயநோய், புற்றுநோய் மற்றும் முதுமையடைதல் ஆகியவற்றுடன் தொடர்புடையது.
இன்சுலின் சர்க்கரைஆல்கஹால் மிகக்குறைவாகவே உறிஞ்சப்படுகிறது
ஓரளவுக்குவளர்ச்சிதையுடையது
குறுகியசங்கிலியுடைய மாவுச்சத்து தனிசர்க்கரை இன்சுலின் பெருகுடலில் நொதிகளாக காணப்படும். இன்சுலின் மற்றும் ஃப்ரக்டோஒலிக்கோசாக்கரைட் நன்மை பயக்கும் பைவிடோ பாக்டீரியா வளர்ச்சியை தூண்டச் செய்கிறது.
பல்கூட்டு சர்க்கரை    
ஸ்டார்ச்(மாச்சத்து) வேகமாய் செரிமானமடையும் ஸ்டார்ச் RDS உள்ளது. (மால்டோடெக்ஸ்ட்ரின் இதில் அடங்கும்) RDS மற்றும் RAG ஆனது உயர் இரத்த குளுக்கோஸ் மற்றும் இன்சுலின்,நீரிழிவு, இதயநோய், புற்றுநோய் ஆகியவைகளில் தொடர்புடையது.
மெதுவாக செரிமானமடையும் ஸ்டார்ச், SDS இரத்த குளுக்கோஸ் மற்றும் இன்சுலிங்களில் மிதமான செயல்பாடு கொண்டது. உடலுக்கு மிகவும் ஊட்டமிகுந்த மாசத்து பொருளாகும்.
உயர்சர்க்கரை அளவை தடுக்ககூடிய மாச்சத்து, RS. உணவில் இதன் அளவை அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் இதுவரை ஆய்வு செய்யப்படவில்லை.
மாச்சத்தில்லாத பல்கூட்டு சர்க்கரை, NSP NSP ஆனது தூய்மையாக்கப்படாத தாவர உணவுகளில் உயிரணு சுவரில் உள்ளது. நார்சத்து மிகுதியாக இருப்பதால் மெதுவான செரிமானம் மற்றும் சர்க்கரையின் அளவு மெதுவாக உறுஞ்சப்படும்.

செயல்பாடுகள்
  • ஆற்றல் - மாவுச்சத்து மூலமாக உடலின் ஆற்றல் ஆதாரமாக உள்ளது. ஒவ்வொரு கிராம் மாவுச்சத்து, சர்க்கரை அல்லது மாச்சத்து உட்கொள்ளும்போது சராசரியாக 4 கிலோகலோரியை தருகிறது. இந்தியர்கள் தானியங்களை அதிக அளவில் உட்கொள்வதால் உடலுக்கு தேவையான சக்தி மாவுச்சத்து மூலம் கிடைக்கிறது.

  • புரத செயல்பாட்டை ஊக்குவித்தல் -உடலானது தன் ஆற்றலை மாவுச்சத்து மூலம் பெருகிறதுக புரதத்தின் பணி உடல் கட்டமைப்பாகும், போதுமான அளவு உணவில் மாவுச்சத்து கிடைக்காத பட்ச்சத்தில் புரதமானது ஆற்றலை கொடுக்கிறது. இதனால் புரதத்தின் திசு கட்டமைப்பு பணி தடைபெறுகிறது. இதை தேவையான மாவுச்சத்து உட்கொள்வதால் தடுக்கலாம்.
  • கொழுப்பின் ஆக்ஸிஜனேற்றம்- கொழுப்பானது கார்போஹைட்ரேட் மற்றும் அமினோ அமிலத்தின் உள்ள ஆக்ஸலோஅசிடிக் உடன் வினை புரிந்து சிட்ரிக் அமிலமாக மாறி இது TCA சுழற்சி மூலம் ஆக்ஸிஜனேற்றமடைந்து அசிடைல் Co A உருவாகிறது. கொழுப்புகள் ஆக்சிஜனேற்றமடைய கார்போஹைட்ரேட்அவசியம்.கார்போஹைட்ரேட் போதிய அளவு இல்லாத போது கொழுப்பானது தடைபடுகிறது. அதனால் இடைப்பொருட்களான அசிட்டோன், அசிட்டோ அசிட்டிக் அமிலம் மற்றும் பி-ஹைட்ராக்ஸி பியூடிரிக் அமிலம் ஆகியவை உடலில் தங்குவதால் கீட்டோசிஸ் நிலை ஏற்ப்படுகிறது.
  • நரம்புமண்டலம் -- மைய நரம்பு மண்டலத்தின் முக்கியமான ஆற்றல் மூலம் குளுக்கோஸ் ஆகும். நீண்ட மைய நரம்புமண்டலத்தின் மாவுச்சத்து குறைபாட்டால் மூளை திசுக்களில் சேதம் ஏற்படும்..
  • தசைகளில் மாவுச்சத்தின் பங்கு - கார்போஹைட்ரேட் பங்கானது தசை இயங்குவதற்கான ஆற்றல் தரக்கூடிய முக்கிய ஆதாரமாக உள்ளது. தசைச்சுருங்கும் போது, கிளைக்கோஜன் கிளைக்கோலிஸிஸ் மூலம் உடைந்து லாக்டிக்அமிலம் மாக மாறுகிறது. மீட்புகாலத்தில் பொழுது லாக்டிக் அமிலம் பைருவிக் அமிலம் ஆக்ஸிஜனேற்றமடைகிறது. பின்னர் அசட்டைல்- CoA ஆனது CO2 H2O மூலம் ஆக்ஸிஜனேற்றமடைந்து , தசை வேலை செய்வதற்கான ஆற்றலை உற்பத்தி செய்கிறது. 
  • கல்லீரலின் பங்கு - இது நஞ்சு நீக்கும் வேலையையும் மற்றும் புரதம், கொழுப்பு வளர்சிதை ஒழுங்குபடுத்தும் வேலையையூம் செய்கிறது. கல்லீரலில் கிளைக்கோஜன் அதிகமாகவும் மற்றும் கார்பன்டெட்ராகுளோரைடு, மது, ஆர்சனிக்மற்றும்பாக்டீரியாநச்சுகள் போன்ற நஞ்சுகளை நீக்கும் தன்மையை கொண்டது. உடலில் தேவையான மாவுச்சத்து இருக்கும் இல்லாத போது அமினோ அமிலத்தின் ஆக்ஸிஜனேற்ற விகிதம் மிகவும் குறைகின்றது.
  • இதயதசைக்கான ஆற்றல் மூலம் -இதயதசை குளுக்கோஸை முக்கியமாக ஆற்றல் மூலமாக பயன்படுத்துகிறது. இரத்ததில் சர்க்கரை அளவு நீண்ட கால குறைந்திருக்கும் போது இதய தசைக்கு தீங்கு விளைவிக்கிறது.
  • குளுக்கோஸில் இருந்து பெறப்படும் ரைபோஸ் -பெண்டோஸ் ரைபோஸ் ஆனது ஆர்.என்.ஏ மற்றும் நியூக்ளியோடைட்களில் காணப்படுகிறது. . இது ஹெக்ஸோஸ் மோனோ பாஸ்பேட் மூலம் உடலில் குளுக்கோஸிலிருந்து பெறப்படுகிறது.
  • கொழுப்புமாற்றம்  - தேவைக்கு அதிகமான மாவுச்சத்து கொழுப்பு வடிவில் திசுக்களில் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. உடலில் ஆற்றல் தேவைப்படும் போது, கொழுப்புதிசுக்கள் இருந்து ஆற்றல் எடுத்துக்கொள்ளப்படும்.
  • நன்மைபயக்கும் பாக்டீரியாவை ஊக்குவிக்கிறது - லாக்டோஸானது இரைப்பை குடலில் பல செயல்பாடுகளுக்கு உதவுகிறது. இது நன்மைபயக்கும் பாக்டீரியாவை ஊக்குவித்து பிகாம்ப்ளக்ஸ் வைட்டமின்களை தொகுக்க உதவுகிறது. லாக்டோஸ் உடலின் கால்சியம் சத்தை அதிகரிக்கிறது.
  • நார்ச்சத்தின் பங்கு - நார்ச்சத்து எந்தவித சத்துக்களை அளிக்காவிட்டாலும் தொடரலை இயக்கத்தை தூண்டுகிறது. பல சிதைவு நோய்களை தடுக்கிறது.
  • அமினோஅமிலங்களின் உயிரியல் தொகுப்பு - அலனின், ஆஸ்பார்டிக் ஆசிட் மற்றும் குளுடாமிக் அமில தொகுப்பிற்கு தேவையான கரிம உட்கூடானது பைருவிக் ஆசிட், ஆக்ஸலோ அசிடிக் மற்றும் ஆல்பா-கீடோகுளுடாரிக் அமிலத்தின் ஆக்ஜிஸனேற்றத்தின் மூலம் கிடைக்கும் குளுகோஸினால் அளிக்கப்படுகிறது .

நார்ச்சத்து
நார்ச்சத்தில் இருக்கும் பாலிசாக்கரைடுகள் மற்றும் லினின் ஆகியவை இரையக குடல் பாதையில் ஜீரணிக்க இயலாது. சத்துக்கள் அற்ற இவை குறிப்பிட்ட வேதியியல் அமைப்பை கொண்டது. இவற்றின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் உணவின் அளவைப் பொருத்து வேறுபடும்.

ஆதாரங்கள்
அரிசி, கோதுமை, கம்பு, கிழங்கு வகைகள், உருளைக்கிழங்கு, மரவள்ளி, சர்க்கரைவள்ளிகிழங்கு, பருப்பு, சர்க்கரை, வெல்லம், தேன், பழங்கள், காய்கறிகள் போன்றவைகளில் கார்போஹைட்ரேட் மிகுந்து உள்ளது. தானியங்கள், தானியஉணவுகள், கிழங்குகள் போன்றவைகளில் பெரும்பாலும் ஸ்டார்ச், சிக்கலான கார்போஹைட்ரேட் உள்ளது.உணாவில் இருக்கும் மாச்சத்து மற்ற சர்க்கரையிலிருந்து கிடைக்கப்பெரும் குளுகோஸானது உடலின் ஆற்றலுக்கு முக்கியமான ஆதாரமாக உள்ளது.

உணவுகளில் ஹெமிசெல்லுலோஸ் , ஜெம்ஸ், பெக்டின் மற்றும் லிக்னின்ஸ் போன்ற செரிமானம் அடையாத கார்போஹைட்ரேட்களையும் கொண்டிருக்கின்றன. இந்த செரிமானம் அடையாத கார்போஹைட்ரேட்களே நார்ச்சத்து அல்லது 'கிடைக்கபெறா கார்போஹைட்ரேட்' எனப்படும். இவை செரிமானப்பகுதியில் செரிக்கப்படுவதில்லை. இவைகள் பெரும்பகுதி உடலில் இருந்து வெளியேற்றப்படும். உணவில் போதுமான நார்ச்சத்து இல்லை எனில் மலச்சிக்கல் மற்றும் பெருங்குடல்புற்றுநோய்ஏற்படுகிறது.

கார்போஹைட்ரேட் உள்ள உணவுப்பொருட்கள்:
உணவுபொருள்பெயர் கார்போஹைட்ரேட் கிராம் / 100 கிராம்
சர்க்கரை 99
வெல்லம் 95
சாகோ 87
அரிசி 78
உலர்ந்த பேறுச்சை 76
கோதுமைமாவு 69
துவரம் பருப்பு 58
பால்பவுடர் 51
முழுபால்பவுடர் 38
உருளைக்கிழங்கு 23

தேவைகள்
100 கிராம் கார்போஹைட்ரேட் கொழுப்புகள் நன்கு ஆக்ஸிஜனேற்றமடைய தேவைப்படுகிறது. பெரும்பாலும் தேவைகேற்ற அளவை விட அதிகமாக கிடைக்கப்பெருகிறது. மாவுச்சத்து எளிதாக கிடைக்கும் ஆற்றல் என்பதால் குறைந்த செலவிலான உணவில் 80% கலோரிகளைத் தருகிறது புரதங்கள் சுமார் 10% கலோரிகளையும், கொழுப்பு 20% ம் என்றால் கார்போஹைட்ரேட் மீதமுள்ள 70% கலோரிகள் வழங்குகிறது . ஒரு மனிதனுக்கு தினசரி உணவில் நார்ச்சத்து உணவு குறைந்தது40 கிராம்இருக்கவேண்டும்.

ஆதாரம்:
http://www.onlinegardenertips.com/images/What-Is-Potato-Plant-Pesticide.jpg
http://www.birnstihl.com/photos/product/Carbohydrate%20food%20shot%20@%20350.jpg
http://www.veeshunexim.com/Images/Products/Jaggery.jpg
http://img.alibaba.com/photo/11149679/Thai_Fruits_Mango_Guava_Baby_Banana_Pineapple_.jpg
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015