நார்ச்சத்து
நார்ச்சத்து என்பது இரைப்பை குடல் பகுதியில் நொதிகளால் செரிக்க இயலாத உணவு நார்ச்சத்து பல்கட்டு சர்க்கரை மற்றும் லிக்னின் ஆகியவற்றைக் கொண்டது.
செல்லுலோஸ் என்னும் தாவர நார் இயற்கையில் நிறைந்திருக்கும் மூலக்கூறாகும். அவை உயிரணுக்களின் சுவர்களின் முக்கிய அமைப்பாகும்.
லிக்னின் நீரில் கரையாத்தன்மை உடையது, கடினமான மரப்பகுதியின் கூறாகும். பயிறினம், கொட்டையுள்ள பழங்கள் இவற்றுக்கு சிறந்த ஆதாரமாகும். முழு கோதுமையில் மிதமான அளவும், காய்கறிகளில் குறைந்த அளவும் லிக்னின் காணப்படுகிறது.
|
ஹெமி செல்லுலோஸ் தாவரங்களின் உயிரணுக்களின் சுவர்களில் காணப்படும். இவை சுடுநீரில் கரையும் தன்மை யுடையது. இவை காரட், முட்டைகோஸ், செலவி, கீரை, ஆப்பிள், பூசணி வகைகள், பேரிக்காய் மற்றும் முழு தானியங்களில் காணப்படும்.
பெக்டின் சுடு தண்ணீரில் கரையக் கூடியது. இவை நீரைத்தக்க வைத்து ஜெல்லாக மாற்றும் தன்மையுடையது. ஆப்பிள் மற்றும் எலுமிச்சை இனங்களில் உள்ள பழங்களில் நிறைந்துள்ளன. தானியங்களில் இவை குறைவாக இருக்கும். பெக்டின் பழ ஜெல்லிகளை செய்வதற்கு பயன்படுகின்றன. கடல் பாசியிலிருந்து பெறப்படும் அகாரும் ஜெல்லாக மாறும் பண்பைக் கொண்டது.
தாவர பிசின் மற்றும் பிசின்கள் தாவர உயிரணுக்களில் உள்ள கட்டமைப்பில்லாத கூறுகளாகும். அவை சுடுநீரில் கரையக்கூடியது.
ஐரிஷ் பாசி - கடல் பாசியிலிருந்து பெறப்படும் ஐரிஷ் பாசி மற்றம் ஆக்ஸிஜனேட் பனிக்கூழ் மற்றும் குறிக்கப்பட்ட பாலின் மென்மைத்தன்மை மேம்படுத்துவதற்குப் பயன்படுகிறது. |
|
செயல்பாடுகள்:
-
உணவு நார்ச்சத்து நீரைத்தக்க வைத்துக் கொள்வதால் மலம் மிருதுவாக இருப்பதோடு உடனடியாக வெளியேற்றப்படுகின்றது. நார்ச்சத்து மிக்க தவிடுகளே இதற்கு சிறந்தது. அதிக அளவில் மலம் வெளியேற்றப்படுவதால் நச்சுப்பொருட்கள் உடலில் இருந்து விரைவாக வெளியேற்றப்படுகின்றன.
-
நார்ச்சத்து பொதுவாக சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இயக்கத்தை அதிகரித்து கடந்து செல்லும் நேரத்தை அதிகரிக்கின்றன. இது சளியின் தூண்டுதலாலோ அல்லது நுண்ணுயிரிகளின் நொதித்தல் மூலமாகவோ ஏற்படுகின்றது. கடந்து செல்லும் நேரம் குறைக்கப்படுவதால் நுண்ணுயிரிகள் தீங்கு விளைவிக்கும் பொருட்களை தயாரிக்கும் நேரமும் குறைகின்றது.
-
பெக்டின், நார்பிசின் மற்றும் பிசின்கள் இரைப்பை வெறுமையாக்குதலைத் தாமதப்படுத்துகின்றன. இதனால் இரண்டு நன்மைகள் உண்டு: சிறிதளவு உணவு உட்கொண்டாலே திருப்தி ஏற்படுகின்றது. ஆற்றல் உட்கொள்ளும் அளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். இரத்தத்தில் குளுக்கோஸ் சீராக உயர்வதால் இன்சுலின் சுரப்பு குறைவாகவே தேவைப்படுகின்றது. அதிக நார்ச்சத்துள்ள மாவுப்பொருட்களை உண்ணும் நீரிழிவு நோயாளிகளும் குறைந்த அளவு இன்சுலின் மட்டுமே தேவைப்படும் என்பதை இது நிரூபிக்கின்றது.
-
நார்ச்சத்து மிக்க உணவுகள் பெருங்குடல் எரிச்சல் நோய் அல்லது பதுங்கு நோய் உள்ளவர்களுக்கு முன் பெருங்குடலில் புழைளேளிய அழுத்தத்தைக்குறைக்கின்றது.
-
அதிக அளவில் நார்ச்சத்து கொண்ட சைவ உணவுகள் குறைந்த ஜீரணக்கெழுகைக் கொண்டது. இதனால் அசைவ உணவுகளைவிட சைவ உணவுகளிலிருந்து பெறப்படும் ஆற்றல் குறைவாக உள்ளது. செல்லுலோஸ் மற்றும் லிக்னின், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற கனிமங்களைப் பிணைக்கும் திறன் கொண்டவை.
|
-
பெக்டின், நார்பிசின் மற்றும் பிசின்கள் பைலமிலங்கள் மற்றும் ஸ்டீராய்டுகளை இணைக்கவல்லது. இதனால் இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு குறையும். நார்ச்சத்துள்ள உணவுகளில் கொழுப்பு சத்து குறைவாக இருப்பதினாலும், இரத்தத்தில் கொழுப்பின் அளவு குறையும்.
-
பெக்டின், ஹெமிசெல்லுலோஸ், பிசின் மற்றும் தாவர பிசின் குடலில் உள்ள நுண்ணுயிரிகளால் பகுதியளவு எளிதாக ஆவியாகும் கொழுப்பு அமிலம், கார்பன்டை ஆக்ஸைடு மீதேனாக நொதிக்கப்படுகின்றது. இதன் மூலம் பெறப்படும் ஆற்றல் நார்ச்சத்து உணவுகளிலிருந்து பெறப்படும் ஆற்றலில் 5 % மட்டுமே ஆகும்.
|
|
ஆதாரம்:
Tomris AltuŃg. 2002. Introduction to Toxicology and Food: Toxin Science, Food Toxicants, Chemoprevention. CRC Publication.
Robinson,C.N and Lawler, M.R 16 Edition. Normal and Therapeutic Nutrition. Oxford and IBH Publishing Co, Delhi.
http://4.bp.blogspot.com/s400/P1010303a.jpg
http://www.diamondorganics.com/images
http://materiaaromatica.com/UsedImages/ThickBox_coriander.jpg
http://skinbeautifulblog.files.wordpress.com/2008/09/fruits.jpg |
|
|