புரதம்
புரதங்கள் உடலின் கட்டமைபிற்கு முக்கியமாகும். புரதம் மிகவும் சிறிய அமினோஅமிலங்கள் சிலவற்றால் ஆனவை. புரதங்கள் உடல்திசுக்கள் மற்றும் செல்களின் கட்டமைபிற்கு முக்கியமானதாகும். இவை தசை, மற்ற திசுக்கள் மற்றும் இரத்தம் போன்ற முக்கிய உடல்திரவங்களின் முக்கிய கூறாகும். புரதங்களானது நொதிகள் மற்றும் ஹார்மோன் வடிவிலும் உடலில் உள்ள முக்கியமான வளர்சிதை மாற்ற செயல்முறைக்கு முக்கியமானதாகும்.
வகைப்படுத்துதல்
புரதத்தின் வேதியியல் கூறை பொறுத்துஅட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன
புரதம் |
சிறப்பியல்புகள் |
எடுத்துக்காட்டு |
கோளவடிவம் |
அல்புமின்ஸ் |
நீரில் கரையக் கூடிய, உப்பு தீர்வுகளில் நீர்த்துப்போகும் அமிலங்கள், மற்றும் தளங்கள் வெப்பத்தால் ஒரு சேர அணைதல் |
லாக்ட்டால்புமின், முட்டை ஆல்புமின், சீரம் அல்புமின் |
குளோபுலின்கள் |
நீரில் கரையாது, உப்பு தீர்வுகளினுல் கரையக்கூடியது. |
சீரம்அல்புமின், அராசின் மற்றும் வேர்கடலையிலுள்ள கானார்சின், மையோசின், ஹிஸ்டோனிஸ் |
அடிப்படை புரதங்கள் |
மிகவும் பொதுவானவைகளில் கரைப்பான்கள் கரையக்கூடியவை, மிகவும் சிறிய மூலக்கூறுகள் |
நியுக்ளியோபுரதம் |
சார்சத்துடையவை (ஸ்கிளிரோ புரதம்) |
கொலஜின்ஸ் |
செரிமான நொதிகளின் எதிர்ப்புடையவை; கரையாத, கொதிக்கும்போது செரிமானமடையும் புரதங்கள் மற்றும் ஜெலாடினாக மாற்றப்படுகிறது; ஹைட்ராக்ஸிபுரோலினை பெரிய அளவு கொண்டிருக்கும்; சல்பர் குறைந்த அளவு கொண்ட அமினோஅமிலங்கள் |
தோல், தசைநாண்கள், எலும்புகள் |
எலாஸ்டின்ஸ் |
செரிமான நொதிகளினை ஓரளவு எதிர்ப்புடையது; சிறிதளவு ஹைட்ராக்ஸிபுரோலினை கொண்டிருக்கும். |
தமனிகள், தசைநாண்கள், மீள்திசுக்கள் |
கெரட்டின் |
அதிகம் கரையாத மற்றும் செரிமான நொதிகளின் எதிர்ப்பு;அதிக சிஸ்டைன் கொண்டது. |
தோல், முடி, நகங்கள் |
புரதம் - இணைக்கப்பட்ட புரதங்கள் |
நியுக்ளியோ புரதம் |
உப்புகள் அல்லது அடிப்படை புரதம் அல்லது பாலிபெப்டைட் மற்றும் நியூக்ளிக் அமிலங்கள் |
குரோமோசோம்கள், உட்கரு |
மியுகோபுரதம் |
புரதம் அல்லது சிறிய பாலிபெப்டைட் கொண்ட மியுகோபாலிசாக்கரைட் ; 4% ஹெக்ஸோமைன் |
சீரம் ஆல்பா, பீட்டா மற்றும் குளோபுலின்; சப்மாக்ஜிலரி மற்றும் இரைப்பை மியுகாய்ட்ஸ் |
கிளைக்கோ புரதம் |
புரதம் அல்லது சிறிய பாலிசாக்கரைட் கொண்ட மியுகோபாலிசாக்கரைட் ; 4% ஹெக்ஸோமைன் |
சீரம் ஆல்பா, பீட்டா, மற்றும் காமா |
லிப்போபுரதங்கள் |
புரத கலப்புகள் மற்றும் கொழுப்பு கரைதிறனை பண்புகளைக் கொண்ட புரதங்கள் |
செல் மற்றும் உள்ளுறுப்பு சவ்வுகள் |
புரோடியோலிப்பிட்ஸ் |
புரதகலப்புகள் மற்றும் கொழுப்பு கரைதிறனை பண்புகளைக் கொண்ட புரதங்கள் |
மையிலீன் |
குரோமோபுரோட்டின்ஸ் |
சேர்மங்கள் புரதங்கள் மற்றும் நிறமி அல்லாத புரதங்களை கொண்டது |
ஃபிளாவோபுரோட்டீன், ஹீமோகுளோபின் சைட்டோகுரோம் |
மெட்டல்லோ புரதம் |
புரதம் உலோகங்களுடன் இணைக்கப்பட்டது; உலோகங்கள் புரதங்கள் அல்லாத செயற்கைகுழுப் பகுதியாகும். |
ஃபெரிட்டின், ஹீமோசெடாரின்,
டிரான்ஸ்பெரின், கார்பானிக்அன்ஹைட்ரேஸ் |
பாஸ்போபுரோட்டின் |
பாஸ்பாரிக் அமிலம் எஸ்டர் இணைப்புடன் புரதத்தில் சேர்ந்தது |
கேசின் உள்ள பால் |
அமினோஅமிலங்கள் ஊட்டச்சத்து வகைப்படுத்துதல்
அத்தியாவசிய அமினோஅமிலங்கள்
அத்தியாவசிய அமினோ அமிலங்கள் வளர்ச்சி மற்றும் பராமரிப்பு தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான ஒருவிகிதத்தில் உடலில் இயற்கையாக உற்பத்தி செய்ய முடியாது .
மனித உடல் ஒரு அமினோஅமிலத்தை மற்றொரு அமினோ அமிலமாக மாற்றக் கூடிய தன்மை கொண்டது இது கல்லீரல் தாக்கத்தால் நடைபெறும் இடம் பெயர்தல் ஆகும். இதில் அமினோடிரான்ஸ்பரேஸ்கள் மூலம் அமினோஅமிலங்கள் ஒருமூலக்கூறு இருந்து முழுவதும் மாற்றப்படுகிறது. இதில் கோ-என்சைமாக பைரிடாக்ஸல் பாஸ்பேட் ஆகும். மனித உடலில் கார்பன் உட்கூட்டை தொடுக்க இயலாததால் இந்த வகை அமினோ அமிலத்தை அத்தியாவசிய அமினோ அமிலம் என்கிறோம். 20 அமினோஅமிலத்தில் 9 உணவு மூலமே பெறாப்படும் அத்தியாவசிய அமினோ அமிலமாகும்.
அத்தியாவசியமல்லாத அமினோஅமிலங்கள்
உணவில் தேவையான அளவு நைட்ரஜன் இருக்குமாயின் உடல் அதற்குத் தேவையான அமினோ அமிலத்தை உருவாக்கிகொள்ளும். இவையும் இன்றியமையாததுதான், உணவில் முக்கிய அங்கமாக இல்லாததால் இவை அத்தியாவசியமில்லாத அமினோ அமிலம் என்று அழைக்கப்படுகிறது.
நிபந்தனையினான அத்தியாவசியஅமினோஅமிலங்கள்
இவை அமினோ அமிலம் தொகுப்பிற்கு தேவையான முன்னோடிகள் இல்லாத போது உணவு மூலம் தேவைப்படுகிறது
அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமல்லாத அமினோ அமிலங்கள்
அத்தியாவசிய அமினோ அமிலங்கள் |
நிபந்தனையினான அத்தியாவசிய அமினோ அமிலங்கள் |
அத்தியாவசியமல்லாத அமினோ அமிலங்கள் |
ஹிஸ்டிடின் |
ஆர்கினைன் |
ஆலனைன் |
ஐசோலியூசின் |
சிஸ்டீன் |
அஸ்பரஜின் |
லியூசின் |
கிளைசின் |
அஸ்பார்டிக்அமிலம் |
லைசின் |
புரோலின் |
குளுடாமிக் |
மித்தியோனின் |
டைரோசின் |
குளூட்டமின் |
பினைல்அலனின் |
|
செரின் |
திரியோனின் |
|
|
டிரிப்டோபான் |
|
|
வாலின் |
|
|
செயல்பாடுகள்
- புரதங்கள் உடல் கட்டமைப்பை அளிப்பதற்கும் மற்றும் தேய்மானத்தினால் ஏற்படும் இழப்புகளை சீராக்கவும் இன்றியமையாததாகும்.
- புரதங்கள், உடலை நோய்களுக்கு எதிராக பாதுகாக்க உதவுகிறது.
- உணவு புரதங்கள் அமினோ அமிலங்களாக உடைக்கப்பட்டு மீண்டும் உடலில் உறுஞ்சப்படுகிறது. உணவுலிருந்து பெறப்பட்ட இந்த அமினோ அமிலங்கள் உடலின் பல்வேறு செயல்பாடுகளான திசு கட்டமைப்பு, குறை புரதத்தை ஈடுகட்டவும், வினைசார் மூலக்கூறுகளான நொதிகள் ஊக்கிகள் மற்றும் பிற பொருட்களை தொகுக்கிறது.
- 1 கிராம் புரதத்தில் 4.2 கிலோகலோரி உள்ளது.
- உணவில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு ஆற்றலை வழங்குகிறது. உணவில் புரதங்கள் மிகவும் பொருளாதார வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாகவும் , உடல் கட்டமைப்பை அமைக்கவும் மற்ற செயல்பாடுகளை நிறைவேற்றவும் புரதங்கள் பயன்படுத்தப்படுகிறது.
புரத்தின் தேவைகள்
புரதங்கள் பெரியவர்களுக்கும், கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சிக்கும்,கர்ப்பினி பெண்களின் கரு வளர்ச்சி மற்றும் தாய்பால் உற்பத்திக்கும் பயன்படுகிறது. குழந்தைகள் வளர்ச்சிக்கும் உபயோகிக்கப்படுகிறது, ஏனெனில் குழந்தைகளின் திசுக்கள், பெரியவர்கள் விட உடல் அதிக எடை பெற புரதம் தேவைப்படுகிறது. பெரும்பாலும் உணவு புரதங்கள் இருந்து வரையப்பட்ட அமினோ அமிலங்களிலிருந்து உடல் வளர்ச்சிக்கு தேவையானவற்றை பெருகின்றன.
- விலங்கின் புரதங்கள் சரியான விகிதாச்சாரத்தில் அத்தியாவசிய அமினோ அமிலங்களை தரமானதாக வழங்குகின்றன.
- தானியங்கள், கொட்டைகள் மற்றும் பருப்பு கலவை போன்ற சைவ உணவுகளை கலவையாக தேவையான அளவு எடுத்துக் கொள்வதால் தேவையான புரதத்தை பெறலாம்.
- பால் மற்றும் முட்டையில் நல்ல தரமான புரதங்கள் உள்ளன.
- சில புரதம் நிறைந்த பொருட்களான பயறு வகைகள், கொட்டைகள் மற்றும் எண்ணெய்வித்து, பால் மற்றும் பால் பொருட்கள், இறைச்சி, மீன் மற்றும் கோழி இறைச்சியில் புரதம் உள்ளது.
- சோயா புரதத்தில் 40% மேல் புரதச்சத்து உள்ளது.
- 57 கிலோ உடல் எடை கொண்ட நபருக்கு தேவையான புரத அளவானது (16-18 வயது) நாள் ஒன்றுக்கு 78g தேவைப்படுகிறது அதேசமயம் 50 கிலோ எடைகொண்ட அதே வயதை சேர்ந்த பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு 63g தேவைப்படுகிறது
- கர்ப்பிணி பெண்கள்65 கிராம் புரதம் , தாய்பாலூட்டும் பெண்களுக்கு(வரை 6 மாதங்கள்)நாள் ஒன்றுக்கு 75g தேவைப்படுகிறது .
உணவுப்பொருட்கள் :
- உணவுகளில் அதிக அளவு புரதம் கொண்டிருப்பவையை புரதம் நிறைந்த உணவுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- விலங்கிலிருந்து பெறப்படூம் இறைச்சி, மீன், பருப்பு வகைகள் , முட்டை மற்றும் தாவரங்களிலிருந்து பெறப்படும் பருப்புகள், எண்ணெய் வித்துக்கள், கொட்டைகளில் புரதம் நிறைந்துள்ளது.
- குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான புரதம் பாலில் சிறந்த உள்ளது. பொதுவாக சைவ உணவில் கிடைப்பதை விட பாலில் கால்சியம் நன்கு உள்ளது.
- குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான புரதம் பாலில் சிறந்த உள்ளது. பொதுவாக சைவ உணவில் கிடைப்பதை விட பாலில் கால்சியம் நன்கு உள்ளது.
- மோர் ஒரு நல்ல தரமான புரதம் ஆதாரமாகும்.
- மீன் சிறந்த புரத ஆதாரமாகும்.
- சோயா மொச்சையில் 40% மேல் புரதம் சத்து உள்ளது.
- கொழுப்பு நீக்கிய எண்ணெய் வித்து பிண்ணாக்கில் 50-60% புரதம் கொண்டிருக்குகிறது.
உணவுகளில் உள்ள புரதங்கள் அளவு
மாமிச புரதத்தின் அளவு |
புரதம் கிராம் / 100 கிராம் |
உணவுபொருள் |
புரதம் கிராம் / 100 கிராம் |
பால் பவுடர் (பசும்பால்) |
38 |
சோயா மொச்சை |
43 |
முழு பால் பவுடர் (பசும்பால்) |
26 |
தர்பூசணி விதைகள் |
34 |
கோழி |
26 |
கோதுமை |
29 |
வெண்ணெய் |
24 |
நிலக்கடலை |
26 |
ஹெர்ரிங், இந்தியா |
20 |
பாசிப்பருப்பு |
25 |
ஆட்டின் கல்லீரல் |
20 |
உலர்ந்த பட்டாணி |
20 |
இறால் |
19 |
கொண்டக்கலை |
17 |
ஆட்டிறைச்சி |
18 |
கோதுமை முழு |
12 |
முட்டை |
13 |
அகத்தி |
8 |
எருமை பால் |
4 |
அரிசி |
7 |
ஆதாரங்கள்
Vijayapushpam et al. 2008, Protein: Its importance. NIN, Hyderabad
.http://www.indiamart.com/kunjapurienterprises/pcat-gifs/products-small/pulses.jpg
Pike Ruth L and Myrtie L. Brown, 1975, Nutrition-an integrated approach, John Wiley and Sons, Inc., New York. |