தண்ணீர்
தண்ணீர், மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஊட்டச்சத்தாகும். மனித உடல் 70 % தண்ணீரால் ஆனது. வியர்வை, கழிவுகள் மூலம் ஏற்படும் நீரிழப்பை நமது உணவு, குறிப்பாக, நீர் அருந்துவதன் மூலம் ஈடு செய்யலாம்.
செயல்பாடுகள்
- செரிமான திரவங்கள், நிணநீர், இரத்தம், சிறுநீர் மற்றும் வியர்வைத் தண்ணீரால் ஆனது.
- செரிமானப் பொருட்களுக்கு நீர் கரைப்பானாக செயல்பட்டு அவற்றை ஒரு திரவக் கலவையாக மாற்றி உடல் சுவர்கள் மூலம் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் கலக்க உதவுகிறது
-
ஊட்டச்சத்துக்கள் உடலில் எல்லா இடங்களுக்கும் சென்று வர செய்கிறது.
-
உணவை மெல்லுதல், உறிஞ்சுதல் மற்றும் செரிமானத்திற்கு நீர் உதவுகின்றது.
-
தண்ணீர், உயவுப்பொருளாக செயல்படுகிறது. அது திசுக்களின் உள்ளேயும் சுற்றியும் பரவி நமது உடலை அதிர்ச்சியிலிருந்து காக்கின்றது. மூளை, கண்கள் மற்றும் முதுகுத்தண்டு ஆகிய நுட்பமான உறுப்புகளைச் சுற்றியும் நீர்ப்படலம் காக்கின்றது.
-
உயிரிமிகளின் எதிர் வினையால் ஏற்படும் வெப்பத்தை உடல் முழுவதும் பரவச்செய்து உடல் வெப்பத்தைச் சீராக்குகின்றது.
-
கழிவு மற்றும் நச்சுக்கள் வெளியேறத் தூண்டுகிறது.
|
நீர் - ஆதாரம்
உடலுக்குத் தேவையான நீர்
- நீர் மற்றும் நீர் பானங்களை உட்கொள்வதாலும்,
- உணவுப்பொருட்களிலுள்ள நீரினாலும்
- உணவுப்பொருட்களில் உயிரேற்றம் ஏற்படுவதின் மூலமும் கிடைக்கின்றது.
உணவு |
தண்ணீரின் சதவீதம் |
பால் |
87% |
முட்டை |
75% |
இறைச்சி |
40% |
காய்கறிகள் மற்றும் பழங்கள் |
70-95% |
தானியங்கள், தயார் நிலை |
1-5% |
தானியங்கள் சமைத்தது |
80-88% |
ரொட்டி வகைகள் |
35% |
|
|
தினசரி ஏற்படும் நீரிழப்பு
தினசரி ஏற்படும் நீரிழப்பு |
மி/லி |
மலம் |
100-200 மி |
சிறுநீர் |
1000-1500 மி |
நுரையீரல் |
250-400 மி |
உணர்வில்லாத வியர்வை |
400-600 மி |
கண்ணுக்குப் புலப்படும் வியர்வை |
0 - 10,000 மி |
தேவை
நாளொன்றிற்குக் குறைந்தது 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் தேவைப்படுகின்றது. இதனால் கணிசமாக, மூட்டு மற்றும் முதுகு வலியிலிருந்து விடுபடலாம். |
|
ஆதாரம்:
Robinson,C.N and Lawler, M.R 16 Edition. Normal and Therapeutic Nutrition. Oxford and IBH Publishing Co, Delhi. |