அங்கக வேளாண்மை :: மக்கிய உரம் |
|
|||||
மட்கிய உரம் குப்பை மற்றும் கழிவுகளின் அளவைப் பொறுத்து குழிகளை வெட்டவும். ஒர் அடுக்கு குப்பையைக் குழியில் இடவும். பின்னர், இரண்டாம் அடுக்காக, 5-10 கிலோ மாட்டு சாணம், 25-5.0 லிட்டர் தண்ணிர் மற்றும் 0.5-1.0 கிலோ எலும்பு தூள் ஆகியவற்றை சமமாக பரப்பவும். இதே போல் பல இரண்டு அடுக்குகளை அமைக்கவும். தரையிலிருந்து 0.75 மீட்டர் அளவு உயரம் வந்தவுடன் மேலாக ஈர மண்ணைக் கொண்டு மூடிவிடவும். இக் குழிகளை நிழலின் கீழ் இருக்கச் செய்வது நல்லது. 2. பெங்களுருவில் பின்பற்றப் படும் முறை :இந்த முறையில், சுமார் 25 செ.மீ அளவு உலர்ந்த கழிவுகளை குழிகளில் கொட்டி அதன் மேல் அடர் மாட்டுசான கரைசலை ஊற்றவும். பின்னர் அதன் மேல் உலர்ந்த கழிவுகளை பரப்பவும். இது போல் ஒன்றன் மேல் ஒன்றாக போட்டு தரைக்கு மேல் 25செ.மீ அளவு வரும் வரை நிரப்பவும். இதை 15 நாட்களுக்கு அப்படியே விட்டுவிடவும். பின்னர் அடர் மண் கரைசல் கொண்டு மேலாக பூசி விடவும். பின்னர் 5 மாதங்கள் கழித்து உரமாக இவற்றைப் பயன்படுத்தலாம். 3. இன்டோர் மக்கிய செய்முறை :இது அதிக அளவு உரம் தயாரிக்கப் பயன்படுத்தும் முறையாகும். அங்கக குப்பைகளை மாட்டுத் தொழுவத்தில் பரப்பவும். சிறுநீர் மற்றும் மாட்டுச் சாணம், இவை இரண்டையும் சுமார் 15 செ.மீ அளவு அடுக்காக பரப்பவும். சிறுநீர் கலந்த மண்ணை தண்ணிருடன் சேர்த்து கரைசலாக்கி, அவ்வடுக்கின் மேல் 2-3 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கவும். சுமார் நாற்பந்தைந்து நாட்களுக்கு இதை தொடர்ந்து செய்யவும். பின்னர் அந்த குமிழின் மேல் மட்கிய உரம் ஒரு சிறு அடுக்காக பரப்பவம். ஒரு மாதத்திற்கு இந்த குமிழை அப்படியே விட்டு விடவும். பின் அதனை ஈரமாக்கிக் கிளறவும். இதை ஒரு மாதம் வைத்து பின்னர் உரமாக உபயோகிக்கலாம். |
||||||
| முதல் பக்கம் | ஊட்டச்சத்து மேலாண்மை | களை மேலாண்மை | பூச்சி மேலாண்மை | நோய் மேலாண்மை | புகைப்படங்கள் | தொடர்பு கொள்ள | © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013 |