தயாரிப்பு முறை
குறிப்பிட்ட உயிர்சக்தி தயாரிப்புகளை இப்பொழுதுப் பயன்படுத்துகிறார்கள். இதனுடைய விளைவுகளை விவசாயிகள் தங்களுடைய அனுபவத்தால் அறிந்து கொள்கின்றனர். இரண்டு வகையான நொதிக்கப்பட்ட பொருட்களின் அளவிடுதலே தயாரிப்பு முறைகள் ஆகும். முதல் வகையில், 6 வேறுபட்ட மூலிகைப் பொருட்கள் உள்ளன. 502 - 507 என்ற எண்ணிட்ட பொருட்களை சிறிய அளவில் இயற்கை உரம் மற்றும் மட்கிய உரத்தில் சேர்க்க வேண்டும். இரண்டாவது வகையில், 500 மற்றும் 501 எண்ணிட்ட பொருட்களைத் தெளிக்க வேண்டும். குதிரைவால் செடியை கொதிக்க வைத்து தயாரிக்கும் ஒன்பதாவது தயாரிப்பான 508ஐ ஈரமான காலங்களில் அளிப்பதால் பூஞ்சான் நோய் தாக்கத்தைத் தவிர்க்கலாம்.
மட்கிய உரத் தயாரிப்புகள் 505 – 507
பலதரப்பட்ட மூலிகைச் செடிகளிலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. இதனால் அதனுடைய உள்ளே இருக்கும் குணங்கள் அதிகப்படுத்தப்படுகிறது. இந்தியாவிலும் மற்ற கடல் கடந்த நாடுகுளிலும், தாவரமக்கு உருவாவது அதிகப்படுத்தப்படுகிறது மற்றும் மதிப்புள்ள ஊட்டச்சத்துக்கள் இழப்பும் குறைக்கப்படுகிறது. |