organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக இடு பொருட்கள் மற்றும் உத்திகள்

ஜவிக் ஜபுத்ரா (பண்ணைத் தோட்டம்)

அறிமுகம்

விவசாயத்தில் இரசாயனப் பொருட்களின் அதிகப் பயன்பாடு, மண் மற்றும் நீர் வளங்களைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் மூலப்பொருட்களின் தரத்தையும் பாதிக்கிறது. இந்த சூழ்நிலையில், அங்கக விவசாய முறை பற்றிய ஒரு கூரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், அதன் மூலம் இரசாயன விவசாய முறையின் விளைவுகளைக் குணப்படுத்த இது ஒரு தீர்வாக அமைகிறது. மண் வளத்தைப்பாதுகாத்தல் மற்றும் மண்ணில் அங்ககக்கார்பனை அதிகரித்தல் போன்ற செயல்களில் பாரம்பரிய அங்கக இடு பொருட்கள் ஒரு கருவியாக இருக்கின்றன.

சுற்றுச்சூழல் சமன் நிலையைப் பாதுகாக்க அங்கக சாகுபடி முறைகள் ஒரு ஆதரவாக செயல்படுகின்றன. உணவு மற்றும் நச்சுப்பொருள்களின் அளவு அதிகரிப்பு, உணவுப்பொருள்களில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவு குறைபாடு, காற்று, மண் மற்றும் நீர் மாசுபாடு அதிகரிப்பு ஆகியவற்றால் மண்ணின் உற்பத்தித்திறன் குறைகிறது.

ஜவிக் ஜபுத்ரா என்ற கருத்து மண் வளத்தை மேம்படுத்தி, அங்கக வேளாண் பயிர்களில் அங்கக விவசாயிகளின் மகசூல் குறையாமல் இருக்க ஆதரவாக உள்ளது. பண்ணையில் உபயோகிக்கப்படும் இடு பொருட்களைப் பொறுத்தே அங்கக விவசாயத்தின் ஊட்டச்சத்து தேவை உள்ளது. அங்கக வேளாண் உற்பத்தித் திட்டத்தில் ஊட்டச்சத்துகளை மாற்றம் செய்தல்,  மண்வளம் மற்றும் மண்ணின் உற்பத்தித்திறனை அதிகரித்தல் ஆகியவற்றில் பயிர்க்கழிவுகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
இயற்கையான உலகை உருவாக்குவதில் இயற்பியல், வேதியியல், உயரியல் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. பொதுவாக, மனித செயல்பாடுகள் சுற்றுச்சூழலின் தரம், அளவு மற்றும் பரப்பு விகிதத்தை பாதிக்கின்றன.

சமூக பொருளாதார புரட்சிகளினால், தொழில்மயமாக்கல் அதிகரித்து உணவு மற்றும் அதனைச்சார்ந்த பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது. அதிக விளைச்சல் தரக்கூடிய ரகங்கள், ரசாயன உரங்கள் தண்ணீருக்கு அதிக பிரதிபலிப்பை அளிக்கின்றன. மேலும் இவை குறைந்த மதிப்புள்ள சத்துக்களைக் கொண்டுள்ளதால் உடல் மற்றும் மன நலத்தை பாதிக்கின்றன. தகவல் தொழில்நுட்பத்துடன் சேர்த்து மருத்துவம் மற்றும் போக்குவரத்து வசதிகள் உள்ளதால் மனிதர்கள் இன்பமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதே சமயத்தில், தாய் மண்ணின் வளம் குறைந்து தீய விளைவுகள் ஒவ்வொரு இடத்திலும் அதிகரித்து கொண்டு வருகின்றன.

மேலும் மண்ணில் அதிகரித்து வரும் ஊட்டச்சத்துக்குறைபாட்டினால், தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களை எளிதாகப் பாதிப்படைகின்றனர். இவற்றைப் பின்னாளில் சரி செய்வது எளிதான காரியம் கிடையாது.

ஜவிக் ஜபுத்ரா தத்துவம் திரு.ஜகத்சிங், மண்டல அங்கக வேளாண்மை மையம் அவர்களால்  ஹரியானா மாநிலத்தில்  உள்ள ஹிசார் என்ற இடத்தில் தொடங்கப்பட்டது. வீட்டில் / சமுதாயத்தில் அல்லது அருகில் உள்ள பொருட்களை மட்டும் கொண்டு, சந்தை அல்லது தொழிற்சாலைகளில் இருந்து கொள்முதல் செய்யாமல், மிகவும் எளிமையான, நம்பகமான குறைந்த செலவு கொண்ட ஜவிக் ஜபுத்ரா  ஒரு பொருத்தமான மாதிரி ஆகும். மேலும் இடுபொருட்கள் வாங்குவதற்கு பெறப்பட்ட கடனைத் தவிர்க்கக்கூடிய ஒரு கருவியாகவும் விளங்குகிறது. ஜவிக் ஜபுத்ரா கருத்து என்னவெனில் குறைந்த செலவில் நிலையான வேளாண்மைக்குத் தேவையான இடுபொருட்களை உற்பத்தி செய்வதாகும்.

எளிதாகக் கிடைக்கக் கூடிய இயற்கை வளங்களை, வேளாண் உற்பத்தி மற்றும் மண் வள மேம்பாட்டிற்கு உபயோகப்படுத்தலாம். மேலும் இதனை ஒரு சாதாரண விவசாயி கூட புரிந்து கொண்டு மண் வளத்தை சீர்படுத்த இயலும். தரைமட்டத்திற்கு மேலே தோராயமாக 20x 15x 1.5 அடி அளவில் இதனை அமைக்கலாம். மேலும் இட  அளவைப் பொறுத்து  திறந்த வெளியில் அல்லது நிழலில் கூட அமைக்கலாம்.

ஜவிக் ஜபுத்ரா என்ற கருத்து மூன்று வருடங்களுக்கு முன்பே, ஹரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் 9 தொகுதிகளில், 27 கிராமங்களில் சோதனை செய்யப்பட்டது. மேலும், இதன் முடிவுகள் ஹரியானா, பஞ்சாப், உத்திரப்பிரதேசம், பீகார், உத்தரகாண்ட், ஜம்மு & காஷ்மீர், குஜராத், ஹிமாச்சலப்பிரதேசம் மற்றும் பிற மாநில விவசாயிகளை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியது.

ஜவிக் ஜபுத்ரா அமைப்பு, அங்கக வேளாண்மை மற்றும் தொன்மையான விவசாய முறைகளில் மிகவும் திருப்திகரமாக செயல்பட்டு வருகிறது. இது ஒரு தத்துவ ரீதியான புதுமையான கருத்து ஆகும்.

பண்ணையிலிருந்து பெறப்படும் முக்கியமான இடுபொருட்கள், பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், பழைய மற்றும் புதிய லெஸ்ஸி, பயோசால், பயோடைனமிக் மட்கு எரு, மாட்டுக்கொம்பு சாணம், மண்புழு உரம், சஞ்சீவிக், அமிர்த்டிகா, ஆலமர மண், மாட்டு கோமியம், பசும்பால், நீமாஸ்ட்ரா, தாஸ்பர்னி உப்பு, இஞ்சி, பூண்டு, மிளகாய் பேஸ்ட், அக்னிகோத்ரா முதலியன.

முழுமையான ஜவிக் ஜபுத்ரா  மாதிரி , 40 வெவ்வேறு காரணிகளின் அடிப்படையில் சோதனை செய்யப்பட்டது. அவை, விவசாய உற்பத்தி, மண்வளம் , மண்ணின் தரம், நீர் தக்க வைத்திருக்கும் திறன், முன் கூட்டியே முளைக்கும் திறன், நல்ல முளைப்புத்திறன், அதிக இலைகள் மற்றும் தூர்கள், தண்டின் கடினத்தன்மை, பூக்கள் மற்றும் பழங்களின் எண்ணிக்கை, தாவர எடை உற்பத்தி, நல்ல வேர் பிடிப்புத்திறன், நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை, மண்ணில் அங்ககக்கார்பன், பயிர்க்கழிவுகள் மட்கும் திறன், நிலையான உற்பத்தித்திறன், பருத்தியில் வாடல் நோய் பிரச்சினை, உணவுத்தரம் மற்றும் ஊட்டச்சத்துகளின் அளவு, மொத்த வேரின் நீளம், மண்ணில் மண்புழுக்களின் எண்ணிக்கை, மண் வளத்தின் ஆழம், நோய்கள் மற்றும் பூச்சிகளின் தாக்கம், தண்ணீர் சேமிப்பு, நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை, பயிர்ப்பாதுகாப்பு முறைகள், தீவனப்பயிர்களின் தரம் மற்றும் அறுவடை செயல்முறைகள், தீவன சுவை மற்றும் தீவனம் உண்ணும் விலங்குகளின் பிரதிபலிப்பு மற்றும் குறைந்த அளவு இடுபொருட்கள் சந்தையில் இருந்து பெறுவதால் உற்பத்தி செலவு குறைகிறது.

நாடு முழுவதும் உள்ள  பல்வேறு வகையான சிறந்த மற்றும் சிதறிய தயாரிப்பு முறைகள் விவசாயத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் இந்த முறைகளை முற்போக்கான மற்றும் புதுமையான வழிகளில் அங்கக விவசாயிகள், வெவ்வேறு சூழ்நிலைகளில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அங்கக விவசாயத்தில் உள்ள எல்லா பிரச்சினைகளையும், ஒரே தளத்தில் தீர்க்கும் வகையில் எந்த ஒரு மாதிரியும் இல்லை. எல்லா தயாரிப்பு முறைகளையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ஒரு புதுமையான கருத்துதான் ஜவிக் ஜபுத்ரா. ஒவ்வொரு விவசாயியும் மண் செடி மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை தேவையான காரணிகளை ஒருங்கிணைத்து திறம்பட செயல்புரிய வழி வகுக்கிறது.

 ஜவிக் ஜபுத்ரா, இறந்த மண்ணுக்கு உயிர் கொடுக்கும் ஒரு வாழ்க்கை மாவுச்சர்க்கரை என அழைக்கலாம். ஜவிக் ஜபுத்ரா பகுதிப்பொருள்களை நான்கு வகையாகப் பிரித்து உபயோகிக்கலாம். அவை விதை நேர்த்தி, மண் வள ஊக்கி, பயிர்ப்பாதுகாப்பு மற்றும் பூச்சி மேலாண்மை போன்ற அனைத்து அடிப்படை செயல்முறைகளிலும், பயிரின் வளர்ச்சிக்குத் துணைபுரிந்து எல்லா பருவ காலங்களிலும் பயிர்களை முழுமை அடையச் செய்கிறது. மேலும் இது மண் வளத்தைப் புதுப்பித்தல், நீர் தக்க வைத்திருக்கும் திறன், களைகளை ஒருங்கிணைத்து அழித்தல், நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை நிலை நாட்டல், அங்கக கார்பனை நிலைப்படுத்துதல், மண்ணில் பல்லுயிர்ப் பெருக்கத்தைத் தக்கவைத்தல், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலைக் குறைத்தல் போன்ற பயன்களை பயிர்களுக்கு அளிக்கிறது.

ஜவிக் ஜபுத்ரா இப்பொழுது ஒரு வீட்டுத்தோட்டத்தில் பயன்படுத்தக்கூடிய ஒரு புதுமையான கருத்தாக மாறியுள்ளது. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில விவசாயிகள், இந்த ஜவிக் ஜபுத்ரா கருத்தை ஏற்றுக்கொண்டு அதைப் பயன்படுத்தி மிகவும் பலனடைந்து வருகின்றனர்.

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024