அங்கக வேளாண்மை :: அங்கக முறையில் பூச்சி மேலாண்மை |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அங்கக முறையில் பூச்சி மேலாண்மை முறைகள் - உழவியல் முறைகள் உழவியல் முறை என்பது வழக்கமான பண்ணை நடவடிக்கைகள் மூலமாக பூச்சிகளைக்கட்டுக்குள் வைத்திருப்பதாகும். அதாவது, பூச்சிகளை அழித்து பொருளாதார நட்டம் ஏற்படாமல் பயிர்களைக்காத்தலாகும். பல்வேறு வகையான உழவியல் முறைகள் உள்ளன. அவையாவன: 1.1. பலதரப்பட்ட பயிர்களை ஒன்றிணைத்தல்இது அங்கக வேளாண்மையின் முதுகெலும்பாக்க் கருதப்படுகிறது. ஒரு நிலத்தில் ஒரே வகையான பயிரினைத்தொடர்ந்து பயிரிடும்போது ஒரு குறிப்பிட்ட பயிர் வளர்ச்சிச் சத்தின் அளவு அந்நிலத்திலிருந்து அதிகளவில் உறிஞ்சப்பட்டு சத்துப்பற்றாக்குறை பயிர்களுக்கு ஏற்படுகின்றது. பயிர்ச்சத்துக் குறைபாடு பூச்சிகளின் எண்ணிக்கையும், அவற்றின் தாக்கத்தையும் ஊக்குவிக்கின்றன. இதனைக்கருத்திற்கொண்டே நம் முன்னோர்கள் கலப்புப்பயிர், ஊடுபயிர் போன்ற முறைகளைக்கடைப்பிடித்துள்ளனர். ஒன்றிற்கும் மேற்பட்ட பயிர்களைக்குறிப்பிட்ட நிலத்தில் பயிரிடும் போது சத்துகள் மறுசுழற்சி அடைகின்றன. இதனால் மண்ணின் வளம் மேம்படுகின்றது. வளமான மண்ணில் வளரும் திடமான பயிர்களில் பூச்சிகள் தாக்கம் குறைந்தே காணப்படும். ஊடுபயிர் செய்யப்பட நிலங்களில் பூச்சிகளால் விருப்பு வெறுப்புகளுக்குள்ளான பயிர்கள் இரண்டும் காணப்படுவதால் அவை பூச்சிகளின் இனப்பெருக்கத்தைக்கட்டுக்குள் வைக்கும் சுற்றுச்சூழலை உருவாக்குகின்றது. உதாரணமாக சோளத்தில் துவரையை ஊடுபயிராகப்பயிரிடும் போது சோளக்கதிர்களைத்தாக்கும் கதிர் நாவாய்ப்பூச்சிகளின் எண்ணிக்கையும் துவரையில் தோன்றும் காய்ப்புழுக்களின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல் பாசிப்பயிரில் சோளத்தினை ஊடுபயிராகப்பயிரிடும்போது சோளத்தண்டுத்துளைப்பான்களின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது. 1.2. பயிர் இரகத்தேர்வுநல்ல தரமான விதைகளையும், பூச்சிகளுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டுள்ள இரகங்களையும், குறுகிய காலங்களில் முதிர்வடையும் இரகங்களையும் தேர்ந்தெடுத்து பயிரிடுவதன் மூலமாக அங்கக வேளாண்மையில் சீரான லாபத்தை ஈட்டிட முடியும். பூச்சிகளுக்கு எதிர்ப்புத்திறன் கொண்ட முக்கிய பயிர் ரகங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
1.3.விதைக்கும் பருவம் விதைகளை விதைக்கின்ற அல்லது பயிர்களை நடுகின்ற பருவங்களை சிறிதளவு மாற்றத்திற்கு உட்படுத்தப்படும்போது அந்தப்பயிர் ஒரு குறிப்பிட்ட பூச்சியின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும்.
பயிர் விதைப்பின் அடர்த்தியையோ, நடவின் அடர்த்தியையோ சிறிதளவு மாற்றத்திற்கு உட்படுத்தும் போது பூச்சிகளின் எண்ணிக்கையிலும், அவற்றின் தாக்குதலிலும் மாற்றம் ஏற்படுகின்றது.
அதேபோல் கரும்பில் குறைந்த அடர்த்தி விதைப்பு தண்டு துளைப்பானைக்குறைத்திட ஏதுவாக அமைந்திடும். பயிர் அடர்த்தியினால் கட்டுப்படுத்தப்படும் பூச்சிகள் பூச்சி மேலாண்மையில் பயிர் அடர்த்தி
1.5.வாழும் இடம் மாற்றங்கள் வாழ்விட மாற்றம் என்பது ஒரு சில பயிரில் காணப்படும் பூச்சி அப்பயிர் அறுவடை முடித்ததும் அப்பகுதியிலேயே தன் வாழ்க்கைக்கு ஏற்ற மற்ற பயிர்களின்(வரப்பில் உள்ள களை நச்சுகளை) அடைந்து மீண்டும் தனக்கு சாதகமானபயிர் வரும் வரை காத்திருக்கும் நிகழ்ச்சியே. எனவே முக்கிய பயிர்களில் காணப்படும் களைச்செடிகளையும் இதரச்செடிகளையும் கண்டறிந்து அவைகளை முற்றிலுமாகக் களைத்து பயிர்களின் வாழிடத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தினை ஏற்படுத்தவதாகும். ஏனெனில் அவை பூச்சிகளுக்குப் புகலிடமாகத் திகழ்ந்து பருவ காலங்களில் பயிர்களைத்தாக்கிடும் காரணிகளாகத் திகழ்கின்றன. வயல்களின் வரப்புகளிலும், மூலை முடுக்குகளிலும் பூச்சிகளைக்கவரும் தாவரங்களையும் பூச்சிகளை விரட்டிடும் செடிகளையும் வைத்திருப்பதன் மூலமாக முக்கியப்பயிரில் தோன்றும் பூச்சிகளின் சேதத்தினை ஓரளவிற்குக் குறைத்திடலாம். 1.6.கவர்ச்சிப்பயிர்கள்ஒரு குறிப்பிட்ட பூச்சிக்கு ஒரு குறிப்பிட்ட பயிர்மிகவும் விரும்பத்தக்க உணவுப்பயிராக விளங்கிடும்.அவ்வாறான பயிர்களைக்கவர்ச்சிப்பயிர் என்று அழைக்கின்றோம். கவர்ச்சிப்பயிர்களை முக்கியப்பயிர்களினூடே ரிரு வரிசையிலோ, வரப்புகளிலோ பயிரிட வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமாக, பூச்சிகள் கவர்ச்சிப்பயிர்களில் முதலில் தாக்குதலைத்துவக்கும். அப்போது அவற்றைக்கட்டுப்படுத்துவது மிகவும் எளிது. இதன் மூலம் முக்கியப்பயிர்களில் பூச்சிகளின் தாக்கத்தை முன்கூட்டியே தடுத்திட முடியும். அங்ககப்பூச்சி மேலாண்மையில் பயன்படுத்தப்படும் கவர்ச்சிப்பயிர்கள்பூச்சி மேலாண்மையில் கவர்ச்சிப்பயிர்கள்
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016 |