காப்புரிமை :: அறிவுசார் காப்புரிமை
அறிவுசார் சொத்து மேலாண்மை – த.வே.ப.க-வின் கொள்கைகள் மற்றும் வழிமுறைகள்

ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு அளிக்கப்படுவதே புவியியல் சார்ந்த குறியீடாகும். அக்குறிப்பிட்ட இடத்தின் தனித்தன்மை பெற்றதாக அப்பொருள் விளங்கும். யார் புவியியல் சார்ந்த குறியீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்? ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது நாட்டைச் சார்ந்த குழுவைச் சார்ந்தோர் அப்பொருளின் உற்பத்தியாளர் அல்லது அந்நிறுவனத்தைச் சார்ந்தோர் எவரேனும் விண்ணப்பிக்கலாம். எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்? இதற்கு பதிவு செய்ய GI – 1 A லிருந்து 1D விண்ணப்பக் கட்டணம் ரூ. 5000/- சேர்த்து விண்ணப்பிக்கலாம். அறிக்கையின் 3 நகல்கள் மற்றும் 5 பிரதிநிதித்துவத்துடன் 3 பகுதியாகப் பதிவு செய்யப்பட வேண்டும். அறிக்கையின் விவரம்: அக்குறிப்பிட்ட பகுதி / பிரதேசத்தின் வரைபடம் 3 நகல்கள் அப்பிரதேசத்தின் சுற்றுச்சூழல் தனிச்சிறப்பு, அப்பொருள் தயாரிப்பில் பயன்படும் மனித வேலைத்திறன், மேலும் அப்பகுதியின் பாரம்பரியத் தன்மை. அப்பொருளின் தரம், பிற இடங்களில் தயாரிக்கப்படும் அதே பொருட்களிடமிருந்து வேறுபட்டு இருக்கும் தனிச்சிறப்பு, உற்பத்தியாளர் / தயாரிப்பாளரால் பின்பற்றப்பட்டு வரும் தரம் ஆகியவை. அப் பகுதி / பிரதேசத்தைச் சேர்ந்தது என்பதற்கான ஆதாரம் மற்றும் தயாரிக்கப்படும் முறை. உரிமை கோருவோரின் எழுத்து மூலமான உறுதி மொழிப் பத்திரம். மேற்கண்ட ஆவணங்களை சமர்ப்பித்தல் அவசியம்.

இந்தியாவில் காப்புரிமை பற்றிய விழிப்புணர்வு இந்திய வடிவமைப்புச் சட்டத்தால் 1911 – ஆம் ஆண்டிற்குப் பிறகே ஏற்படுத்தப்பட்டது. அதற்கு முன்பு வரை இந்திய காப்புரிமைச் சட்டம் 1970 மற்றும் அதன் கூறுகள் மட்டுமே அறிவுசார் காப்புரிமையை வலியுறுத்தி வந்தது. எனினும் வேளாண்மைத் துறையில் நமது விவசாயப் பெருமக்களும் ஆராய்ச்சியாளர்களும் பல கண்டுபிடிப்புகளைப் புரிந்து புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிந்திருந்தும் அதற்கென காப்புரிமை பெற வழிவகை இருக்கவில்லை. கடந்த 50 வருடங்களில்தான் உலகமெங்கும் பயிர் வளர்ச்சியில் பல அறிவியல் கண்டுபிடிப்புகள் தோன்றின.

இந்தியாவில் பசுமைப்புரட்சியின் போதுதான் அதிக உற்பத்தி கொண்ட வீரிய ஒட்டு இரகங்கள் உருவாக்கப்பட்டன. புதிய இரகங்கள் அதிக உற்பத்தியோடு நல்ல இலாபத்தையும் பெற்றுத்தந்தன. வீரிய இரக விதைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே விவசாயிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அவற்றை  அதிக அளவில் உற்பத்தி செய்ய ஆரம்பித்தனர். இக்காலங்களில் பயிர் இரகங்களைக் கண்டுபிடித்தவர்கள் / உருவாக்கியவர்கள் உரிமை கொண்டாட உரிமைச்சட்டம் ஏதும் இல்லை. இந்திய காப்புரிமை சட்டம் 1970 – ன் படி பயிர் இரகங்களுக்கு காப்புரிமை பெற இயலாது. 
தொழில்நுட்பம் மற்றும் (வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறையில்) 1986 – ஆம் ஆண்டிலிருந்து தான் உருகுவே வட்ட மாநாட்டிற்குப் பிறகு வேளாண்பொருட்களின் மீதான காப்புரிமை பற்றி சிந்திக்கப்பட்டது. வர்த்தகம் மற்றும் காப்பு மீதான பொது உடன்படிக்கை (GATT) பற்றிய டன்கேலின் (Dukel) பரிந்துரைகளுக்குப் பின்பே பயிர் காப்புரிமை பற்றி பேசப்பட்டது.

வர்த்தகம் மற்றும் காப்பு மீதான பொது உடன்படிக்கையின் (GATT) உருகுவே மாநாடு 1994 – ல் நடைபெற்றது. பின்பு 1995 – ல் உலக வர்த்தக நிறுவனம் (WTO) உருவாக்கப்பட்டது. இதன் பிறகுதான் பயிர் காப்புரிமை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது. அதோடு உணவு மற்றும் வேளாண் நிறுவனம், பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு (CBD) மற்றும் புதிய பயிர் இரகங்களுக்கான சர்வதேச பாதுகாப்புக்குழு போன்றவையும் நிறுவப்பட்டு உயிர்வளங்களின் அறிவுசார் காப்புரிமை பற்றி விவாதிக்கப்பட்டது. இவ்வாறு சர்வதேச அளவிலான முன்னேற்றம், இந்தியாவிலும் பயிர்க்காப்புரிமை பற்றிய திட்டத்தை ஏற்படுத்தத் தூண்டியது.

அறிவுசார் காப்புரிமையில் 8 விதமான பாதுகப்பு உரிமைகள் விவாதிக்கப்பட்டன. அவை.

  1. அச்சிடும் உரிமை
  2. வர்த்தக உரிமை
  3. புவிசார்ந்த (இடம்) / நிலவியல் காப்புரிமை
  4. குறியீடுகள்
  5. காப்புரிமை
  6. ஒருங்கிணைக்கப்பட்ட சுற்று குறியீடுகள்
  7. வர்த்தக சம்பந்தமான இரகசிய உரிமை
  8. சுய் ஜெனிரிஸ் (Sui Generis) முறையில் பயிர் இரகப் பாதுகாப்பு உரிமை

இவற்றில் காப்புரிமை, பயிர் இரகப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை, வர்த்தக குறியீடு புவிசார்ந்த குறியீடு மற்றும் அச்சிடும் உரிமை போன்ற 5 காப்புரிமைகளும்  வேளாண்மையோடு அதிக தொடர்பு கொண்டவை.

மேலும் தகவல் பெற முக்கிய வலை தளங்கள்:
www.wto.org
www.patentoffice.nic.in
www.ipindia.nic.in
www.indianpatents.org.in
www.tifac.org.in
www.en.wikipedia.org/wiki/patent

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014