அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: தானியங்கள் :: நெல்
இட்லி கலவை

அரிசி ஐ.ஆர்.20 தண்ணீரில் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.  தண்ணீரை முழுவதுமாக வடித்துவிட்டு சூரிய ஒளி உலர்த்துவானில் 5 மணி நேரம் காயவைக்கவும்.  காய்ந்த அரிசியை அரைத்து பி.எஸ்-36 வகை சல்லடையில்  கலக்கவும்.  உளுந்தை அரைத்து சலிக்கவும்.  அரிசி மற்றும் உளுந்துமாவை உலர்த்துவானில் 80 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 2 மணி நேரம் காயவைக்கவும்.  ஆறவைத்து பாலித்தீன் பைகளில் இட்டு ஒட்டவும்.

அரிசி மாவு - 80 கிராம், உளுந்துமாவு - 20 கிராம், உப்பு - 2 கிராம், சிட்ரிக் அமிலம் - 0.05 சதவீதம், சோடியம் பை கார்பனேட் - 0.2 சதவீதம், அரிசி மற்றும் உளுந்து மாவுகளை 4:1 என்ற விகிதத்தில் உப்பு, சிட்ரிக் அமிலம், சோடியம் பை கார்னேட் சேர்த்து ஒன்றாக கலக்கவும். மற்றொருமுறையில் சிட்ரிக் அமிலம் மற்றும் சோடியம் பை கார்பனேட் சேர்க்காமல் 0.1 சதவீதம் ஈஸ்ட் சேர்க்கவும்.

உடனடி இடியாப்ப மாவு

இடியாப்பம் என்பது புழுங்கல் அரிசி மற்றும் பச்சரிசி சேர்த்து தயாரிக்கப்படும் பதார்த்தம் ஆகும்.  இது இனிப்பு அல்லது காரம் சேர்த்தும் (எலுமிச்சை, தக்காளி, தயிர் இடியாப்பமாகவும்) சாப்பிடலாம்.
புழுங்கல் மற்றும் பச்சரிசியை 5 மணி நேரம் தனியாக ஊற வைத்து வடிகட்டவும்.  இதனை 5 மணி நேரம் சூரிய ஒளியில் காய வைக்கவும்.  இதனை பி.எஸ். 36 வலை சல்லடையில் சலிக்கவும்.

புழுங்கல் அரிசி மாவு - 50 கிராம்
பச்சரிசி மாவு - 50 கிராம்
உப்பு - 2 கிராம்
அனைத்தையும் ஒன்றாக கலந்து பாலித்தீன் பைகளில் போட்டு மூடவும்

முறுக்கு மாவு

அரிசி மாவு - 90 சதவீதம்
உளுந்து மாவு - 10 சதவீதம்
உப்பு - 2 கிராம்
தண்ணீர் - 92 மிலி
வெள்ளை எள்ளு - 5 கிராம்

செய்முறை

அரிசி மாவு, உளுந்துமாவு, உப்பு, எள்ளு சேர்த்து ஒன்றாக 80 பி.எஸ் வலை சல்லடையில் சலிக்கவும்.  இதனுடன் எண்ணெய் மற்றும் நீர் சேர்த்து பிசைந்து முறுக்கு பிழியில் எண்ணெய் சூடு செய்து 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 3 முதல் 5 நிமிடங்கள் வரை பொறிக்கவும்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015