அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: தானியங்கள்
கோதுமை
ஊட்டச்சத்துக்கள்
கார்போஹைட்ரேட் (அ) மாவுச்சத்து
கோதுமையில் உள்ள மாவுச்சத்தானது (ஸ்டார்ச்) என்டோஸ்பெர்ம் பகுதியில் உள்ளது. கரையக்கூடிய சர்க்கரை சத்தானது. germ co பகுதியில் அமைந்துள்ளது.
தவிடுகளில் பெரும்பாரும் செல்லுலோஸ், ஹெமிசெல்லுலோஸ் வகை கார்போஹைட்ரேட் அமைந்துள்ளது.

தாது உப்புக்கள்
கோதுமை அதிக அளவு தாது உப்புக்களை உள்ளடக்கிய தானியம் ஆகும்.   இதில் குறிப்பிடத்தக்க வகையில் இரும்பு பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீஸ், தாமிரம் மற்றும் துத்தநாகம் உள்ளது. முழு கோதுமைய போதிய அளவு தயாமின் மற்றும் நிக்கோடினிக் அமிலத்தை கொண்டுள்ளது. ஆனால் ரிபோப்ளோலின் குறைந்த அளவைக் கொண்டது.

புரதச்சத்து
கோதுமையில் அடங்கியுள்ள புரதச்சத்தை இரண்டு வகை குருட்டன் அல்லாத புரதம் அல்புமின் மற்றும் குளோபுளின் குருட்டன் புரதம்(முக்கியமாக கிளையாபுன், குருப்டெனின் இவை கரையாத புரதம் ஆகும்). கோதுமையில் உள்ள புரதமானது, அதிக குருட்டாமிக் அமிலம் நிறைந்ததாகவும், டிரிப்டோமன் குறைவானது ஆகும். குருட்டாமிக் அமிலம் மற்றும் அஸ்பார்புக் அமிலமும் குருட்டாமை மற்றும் அஸ்பாரணங்களாக பொறுத்த குருட்டன் தரம் இருக்கும். தவிடு மற்றும் முளையில் அதிக அளவு புரதம் மற்றும் முக்கிய அமினோ அமிலங்களும் உள்ளன.

லிப்பிடுகள்
கோதுமை தவிடு எண்ணெயில் அதிக அளவு வைட்டமின் இ கொண்டது. அத்துடன் முக்கியமான அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளது.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015