உலகத்திலேயே, சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா, உணவு உற்பத்தியில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. மேலும் உணவு மற்றும் வேளாண்மையில் மிக பெரிய அளவில் வருவதற்கான வளம் கொண்டுள்ளது. உணவு மற்றும் உணவு பதனிடும் தொழில்நுட்பம் திறமை மற்றும் உள்கட்டமைப்பு, குறிப்பாக டப்பாக்களில் அடைத்தல், பால் பொருள் சிப்பமிடல், குளிர்ந்த நிலை உணவை வைத்தல் மற்றும் வெப்ப பதனிடுதல் போன்ற தொழில்களில் அதிக முதலீடு செய்ய வாய்ப்புகள் உள்ளன. பழங்கள் மற்றும் காய்கறிகள், பால் மற்றும் பால் பொருள்கள், ஆட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சி, சிப்பமிட்ட உணவு, சாராய பானங்கள் மற்றும் குளிர் பானங்கள் மற்றும் தானியங்கள் முதலானவைகள் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையின் முக்கிய கிளை பிரிவுகளாகும். இந்தியா, உலகிலேயே காய்கறி உற்பத்தியில் இரண்டாம் இடத்திலும் பழ உற்பத்தியில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. இன்னும் 10 ஆண்டுகளுக்குள், இந்தியா நெல் உற்பத்தியில முன்னிலையை வகிக்கும். இந்தியா, ஜப்பான் அடுத்ததாக இரண்டாம் இடத்தில் உள்நாட்டு மின் உற்பத்தியில் உள்ளது.
இந்தியா, பழங்கள் மற்றும் காய்கறிகள், ஆட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சி, பால் மற்றும் பொருட்கள். இரசாயன பானங்கள், மீன்பொருட்கள், மலைத்தோட்ட பயிர்கள், தானிய பதார்த்தங்கள் மற்றும் இதர வாடிக்கையாளர்களின் பொருட்களான தின்பண்டங்கள், சாக்லெட் மற்றும் கோகோ தயாரிப்புகள், சோயா தயாரிப்புகள், மினரல்/ சுத்திகரிக்கப்பட்ட நீர், அதிக புரத உணவுகள் போன்ற உணவு பதப்படுத்தும் பிரிவு வாயிலாக தயாரிக்கப்படுகின்றன.
பழங்கள், காய்கறிகள், பால் இறைச்சி, மீன் போன்ற உணவுகள், அறுவடைக்கு பின் சில வேதியயில், வினையியல் மற்றும நுண்ணுயிரியல் மாற்றங்களால், கெட்டு, அழுகி அனைத்தும இழக்கக் கூடியநிலையில் வரும். இப்படி அழுகக்கூடிய பொருட்களை சில பதனப்படுத்தும் முறைகளான ஈரப்பதம் குறைந்து, நொதிக்கள் மற்றும் நுண்ணுயிர்களை கொண்டு மாற்றியோ அல்லது சிப்பம் அடைத்தோ, வைப்பது தேவையாய் இருக்கிறது. இப்படி ஏதும் பதனப்படுத்தவிடல், அறுவடைக்கு பின் அதிக இழப்பு ஏற்படும். உணவு கெட்டுப்போதல் மற்றும் வீணாக்குதல் போன்றவற்றில் சரியான மாற்றங்களையும் முறைகளையும் கையாண்டு உணவு இருப்பதை உறுதி செய்யவும், அனைவரும் ஏற்கக்கூடியதாக செய்யும் உணவுகளை காப்பதும் உணவியியல் வல்லுநர்கள் மற்றும் தொழில்நட்பளார்களின் முக்கிய பொறுப்பாகும்.
இந்தியாவில், சமூக-பொருளாதார நிலைகள், தொழிற்சாலை வளர்ச்சி, நகரமயமாகுதல் மற்றும் உலகமயமாகுதல் போன்ற மாற்றங்களால் உணவு பொருட்களில் மதிப்பூட்டுதல் என்பது மிகவும் முக்கியமாகும். இது உற்பத்தியாளர்கள் மற்றும் பதனப்படுத்துபவர்களை, அதிக லாபம் அடைந்து திருப்திபடுவதை மட்டும் கொள்ளாமல், நல்ல சுவையானதாகவும் சத்துள்ளதாகவும் இருக்க வேண்டும். உணவு பதனப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் முயற்சியால், உணவு மதிப்பூட்டுதல் வளர்ந்துக் கொண்டு வந்தாலும் உள்நாட்டு சந்தை மற்றும் ஏற்றுமதிக்கு ஏற்ப உணவு மதிப்பூட்டுதலில் உயர் நிலையிலும், உணவு மதிப்பூட்டப்பட்ட பொருள்களின் தரத்தை மேம்படுத்தவும், பல்வேறு நிலையிலுள்ள மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு, அதை வரிசைப்படுத்தி விவாதிப்பது தேவையாய் உள்ளது.
அறுவடைக்கு பின்சார் தொழில்நுட்பம் - முக்கியத்துவம் மற்றும் பணி
அறுவடைக்கு பின் ஏற்படக்கூடிய இழப்பை தடுக்கக்கூடிய தொழில்நுட்பமானது, நடுத்தர அறுவடை காரணிகளை பயன்படுத்துதல், பொருட்களை கையாளுதல், சிப்பம் அடைத்தல், போக்குவரத்தும் மற்றும் சேமித்தல் போன்றவற்றில் ஏற்படக்கூடிய இழப்பைத்தடுக்க நவீன உள்கட்டமைப்பு இயந்திரங்களை பயன்படுத்துதல், பலதரப்பட்ட பொருட்களை தயாரித்தல், குறைந்த செலவில் வீடு அளவில் பதப்படுத்தல் போன்றவைகளை உள்ளடக்கியதே. வெப்ப பதனப்படுத்தல், குறைந்த வெப்பநிலையில் வைத்தல், காய வைத்தல், வேதியியல் மற்றும் உயிரியல் வினையுடன் இதர பதப்படுத்தும் முறைகளை கையாண்டு அதிக நாள் இருப்பு வைப்பதை உறுதி செய்ய வேண்டும். டப்பாக்கள் மற்றும சிப்பம் அடைக்கும் பொருட்கள் போன்றவை எடுத்துச் செல்ல ஏதுவாக இருப்பதோடு, அதன் வாழ்நாள் அதிகமாக இருத்தல் வேண்டும். இந்த முறைகளை கையாளுவதால் இழப்பு தடுக்கப்பட்டு நல்ல தரத்துடனும் சத்துக்களுடனும் அதிக அளவு உணவு இருப்பு இருக்கவும், பதனப்படுத்துவதற்கு அதிக கச்சா பொருள்கள் இருக்கவும் செய்வதால், விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்க உறுதியளிக்கிறது.
சரியான பதனப்படுத்தும் முறை மற்றும் சத்து இழப்பை ஈடுகட்டும் முறைகளால், உணவு இழப்பு தடுப்பதோடு, நல்ல தரமான சத்தான உணவினை கச்சா பொருளிலிருந்து தயாரித்து, வளர்ந்து வரக்கூடிய மக்கள் தொகையின் உணவு தேவையை நிறைவு செய்வதே அறுவடைக்கு பின்தைய தொழில்நுட்பத்தின் முக்கியத்துவமாகும்.
கிராமப்புறங்களில், அறுவடைக்கு பின்சார் தொழில்நுட்பத்தால் தொழில்சாலைகள் அமைக்க வாய்ப்புகள் உருவாகிறது. இந்தியாவில் 80 சதவீத மக்கள் கிராமத்தில் வாழ்கின்றனர். மேலும் 70 சதவீதத்தினர் வேளாண்மையை சார்ந்து உள்ளதால் நகர்புறத்திற்கு மாறியுள்ள உணவு, தீவனம் மற்றும் நூல் தொழில்களில் அனுபவம் உள்ளவர்களே, இப்படி நகரங்களை நோக்கி தொழிற்சாலைககள் செல்லுவதால், கிராமத்திலிருந்து நகர்புறத்திற்கு பணம் செல்வதுடன், வேலை வாய்ப்பும் குறைந்து, பொருளாதார வளர்ச்சியும், வாழ்க்கை தரமும் நகர மக்களுக்கு இணையாகாமல் வேறுபடுகிறது. இதற்கு ஈடுகட்ட தகுந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி, கிராமப்புறத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். இதனால், விவசாயின் பங்கு உற்பத்தியாளர் மற்றும பதனப்படுத்துவர் என்ற நிலையிலிருந்து குறைந்து, உற்பத்தியாளர் என்ற நிலையை அடைவதோடு, வேலையாள், இடுபொருள், முயற்சி மற்றம சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு வளங்கள் போன்றவற்றில் அதிக பணத்தை இந்த நவீனகாலத்தில் பெறுவார்கள்.
உணவு பதனப்படுத்தும் தொழில்சாலையின் நிலை:
வேளாண் பதனப்படுத்தும் தொழிற்சாலைகளின் முக்கிய பரிவுகளான பழங்கள் மற்றம் காய்கறிகள் பதனப்படுத்துதல், தானியப் பதனப்படுத்துதல், மின் பதனப்படுத்துதல், பால் பதனப்படுத்துதல், ஆட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சி பதனப்படுத்துதல், சிப்பம் அடைத்த/வசதியான உணவுகள், இரசாயன/மது பானங்கள் மற்றும் குளிர் பானங்கள் தயாரித்தல் போன்றவையாகும்.
வேளாண் பதனப்படுத்துதல்:
வேளாண் பொருட்களின் தரத்தை நிலைநிறுத்துவதோ அல்லது மேம்படுத்துவதோ அல்லது அதன் மூலத்தை அல்லது குணாதிசயங்களை மாற்றும் செயல்பாடே வேளாண் பதனப்படுத்துதல் ஆகும். பதனப்படுத்தும் செயலில் வேளாண் பொருட்கள் உற்பத்திக்கு பின் அதன் மதிப்பைக் கூட்டும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. வேளாண் பதனப்படுத்தலின் முக்கிய நோக்கம், அறுவடைக்கு பின் தரம் மற்றும் எடை இழப்புகளை குறைப்பதே.
முதல் நிலை பதனப்படுத்துதல்:
கச்சா பொருட்களிலிருந்து, இதர பொருள், முற்றாத தானியங்களை நீக்கி சுத்தம் செய்து பல்வேறு குவியலாக தரம்பிரித்து, இரண்டாம் நிலை பதனப்படுத்துதலுக்கு உகந்ததாக மாற்றுதல்.
இரண்டாம் நிலை பதனப்படுத்துதல்:
முதல் நிலை பதனப்படுத்திய பொருட்களை உணவு உபயோகத்திற்காக மாற்றுதல் அல்லது சமைத்த பின், வறுத்த பின், பொரித்த பின் அதை உணவாக மாற்றும் பொருட்களாக தயாரித்தல்.
இடை நிலை பதனப்படுத்துதல்
இரண்டாம் நிலை பதனப்படுத்திய பொருள்களை உடனடி உண்ணும் உணவாக மாற்றுதல்.
உணவு பொருளானது கச்சா பொருட்களாகவோ, முதல், இரண்டாம் மற்றும கடைநிலை பதனப்படுத்தப்பட்ட பொருட்களாகவோ விற்பனைக்கு வருகிறது. விவசாயிகள் தங்கள் உணவு மற்றும் விதை உபயோகத்திற்காக எடுத்தது போக மீதியை அப்படியே உடனடியாக விற்பதையே விரும்புவார்கள். விவசாயிகள் மொத்த கோதுமையில் 44 சதவீதம், நெல்லில் 48 சதவீதமும் எடுத்து வைத்துக் கொள்ளுவார்கள் என அளவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள விலைப்பொருட்களை, மண்டிகளும், வணிகர்களும், பதனப்படுத்துவதற்காகவோ இல்லை விற்பனைக்காகவோ வாங்கி கொள்ளுகிறார்கள்.
உபயோகிப்பாளர்களின் விருப்பமான உடனடி சமைத்தலுக்கும் உடனடியாக உண்வதற்கும் மேலும், தின்பாண்டங்கள் மற்றும் பானங்களின் தேவை அதிகமாக அதிகமாக, உணவு பதனப்படுத்தும் தொழில் இந்தியா முக்கியத்துவம் பெறுகிறது. 42 சதவீத உணவு தொழிற்சாலைகள் பெரிய அளவிலும் 33 சதவீதம் சிறியதும் காட்டேஜ் தொழிற்சாலைகளாக அமைந்துள்ளது.
பிரிவுகள் வாரியாக உணவுப் பதனப்படுத்துதல்
பழங்கள் மற்றும் காய்கறிகள் பதனப்படுத்துதல்
பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் வேறுபட்ட வேளாண் காலநிலைகள் நிலவுவதால், குளிர் பிரதேசம், மித வெப்ப மண்டல மற்றும் வெப்பமண்டல பழங்கள் மற்றும் காய்கறிகள் வளர்வதற்கான சூழ்நிலை உள்ளது. பழங்களின் மொத்த உற்பத்தி 45 மில்லியன் டன்னாகவும் காய்கறிகளின் மொத்த உற்பத்தி 85 மில்லியன் டன்னாகவும் உள்ளது. தகுந்த அறுவடை மறை பதனப்படுத்தல் மற்றும் சேமிப்பு வசதிகள் இல்லாததால் åபாய் 230 மில்லியன் மதிப்புள்ள 20-30 சதவீதம் விலைப்பொருட்கள் சேத இழப்பு ஏற்படுகிறது. பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து, பானங்கள், ஜாம்கள், ஜெல்லிகேண்டிஸ், பழம் மற்றும் காய்கறிகள் சிப்பம் அடைந்தது. உலர்ந்த பொருட்கள், ஊறுகாய், சூப் கலவை, சாஸ் மற்றும் கேட்சபஸ் தயாரிக்கப்படுகிறது. ஊறுகாய், சட்னி வகைகள், பழ சிதைப்பகுதி, கேன் செய்யப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள். பல்ப்ஸ் மற்றும் ஜீஸ் வகைகள், உலர்ந்தது மற்றும் குளிர்விக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் தேவைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்தியாவில், வருடம் முழுவதும் தொடர்ந்து பழங்கள் குறைந்த விலையில் கிடைப்பதால், மக்கள் பொதுவாக பழங்கள மற்றும் காய்கறிகளை அப்படியே எடுத்து கொள்வதையே விரும்புகிறார்கள். பழங்காலத்திலிருந்தே, கிராமப்புறங்கள் சிறிய குடிசைத் தொழிலாக ஊறுகாய் மற்றும் சட்னி தயாரிப்பது நடந்து கொண்டே வருகிறது. அப்படியே இருந்தால், சில வருடங்களாக, அன்னாச்சி, மா, திராட்சை, ஆப்பிள் பீச்சஸ் போன்றவைகள் ‘கேன்’ வகைகளாக பதனப்படுத்தி வைப்பது அதிகரித்துள்ளது. பழங்களை ஜீஸ், உலர் பவுடர், ஜாம் மற்றும் ஜெல்லி வகையாக உபயோகப்படுத்துவது அதிகரித்துள்ளது. பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து பதனப்பட்ட பொருட்களாக தயாரிக்கும் சதவீதம் பின்வருமாறு, பழ ஜீஸ் மற்றும் சதைப்பகுதி - 27%, ஜாம் மற்றும் ஜெல்லி - 10%, உடனடி பானங்கள் - 13%, சிரப் - 8% குவாஸஸ் - 4%, தக்காளி வகைப் பொருட்கள் - 4%, கேன் செய்யப்பட்ட காய்கறிகள் - 4% மற்றும் இதர வகைகள் - 18%.
மா, திராட்சை, ஆப்பிள், எலுமிச்சை முதலான பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டும், வாழை, சப்போட்டா, லிச்சி மற்றும் பல பழங்கள் ஏற்றுமதி செய்யலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. காய்கறிகளில் உருளைக்கிழங்கு (28.0%), வெங்காயம் (7.1%) பூக் கோசு மற்றும் கோசு (4% ஒவ்வொன்றும்), வெண்டை (3%) பட்டாணி (3%) மற்றும் இதர (50%) போன்றவைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ரெசின், வெங்காய காய்ந்த துண்டுகள் மற்றும் பவுடர், சிப்ஸ் மற்றும் காய்கறிகள் போன்றவைகள் தயாரிக்க, சூரிய உலர்த்தி கொண்டு கிராமப்புறங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது.
தானியங்களைப் பதனப்படுத்துதல்
வரக்கூடிய ஆண்டுகளில், இந்தியா தானியங்கள் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும். இந்தியாவில் நெல், கம்பு, சோளம், கோதுமை, பருப்பு மற்றும் பயிறு வகைகள் போன்றவை உணவு தானியங்களாகும்.
நெல் அறவை
இந்தியக் கிராமப்புறத்தில் 91287 பழையகால நெல் அரவையாலைகள் உள்ளன. அந்த அரவையாலைகளில் உமி மற்றும் தவிடு தனியாக பிரிக்க முடியாது பொதுவாக அரிசி கழிவுப் பொருட்கள் அப்படியே எரிக்கப்படும். நவீன அரவையாலைகளில் உமி நீக்குவதற்கும் அரிசியை பாலிஸ் செய்வதற்கும் தனித்தனி எந்திர செயல்பாடுகள் உள்ளன. உமியானது எரிபொருளாகவும், ‘ஃபார்பாரல்’ தயாரிக்கவும் தவிடானது சமையல் எண்ணெய் மற்றும இதர எண்ணெய் தயாரிக்கப் பயன்படுகிறது. மேலும் இந்த நவீன ஆலையானது, பழைய ஆலைகளை விட நல்ல அரசியாகும் வீதமும், குறைந்த அளவு ஆற்றலும் செலவாகிறது.
கோதுமை அரவை:
கோதுமை உற்பத்தியானது 73.53 மில்லியன் டன்னுக்கு மேலாக உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களிலும் நகர்ப்புறத்திலும் பர்ர் ஆலை (சாக்கிஸ்) எனப்படும் ஆலைகள் பொதுவாக அரைக்கப் பயன்படுகிறது. உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், பீகார் மேற்கு வங்காளம், பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம், அசாம், குஜராத், கேரளா போன்ற மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான ரோலார் மாவு ஆலைகள் உள்ளன. இங்கு அரைக்கப்படும் மாவுகள், தற்சமயம் இராணுவம் மற்றும் ஹோட்டல் போன்ற நிறுவனய்களுக்கே விற்கப்படுகிறது. மேலும் வீட்டு உபயோகத்திற்கு விற்பது மிகவும் குறைவே அதாவது 1 சதவீதம் மட்டுமே. பொது விநியோக முறையில் விற்பதற்காக திட்டங்கள் இல்லாததே காரணம். சோயா கலந்த கோதுமை மாவு விற்பனை அதிகரித்துக் கொண்டே வருவதால், பிற்காலத்திற்கு பெரிய அளவில் மாவு அரைக்கும் ஆலை தொடங்க வாய்ப்பு உள்ளது.
பயிறு அரவை:
இந்தியாவில், சைவ உணவு உண்பவருக்கு பயிறு வகைகளே புரதச்சத்து தரக்கூடிய மூலம். பயிறு உற்பத்தியில் 3-ல் 2 பங்கு அதாவது 60 மில்லியன் டன்கள், இந்தியா, சைனா, பிரேசில், துருக்கி மற்றும் மெக்சிகோ நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. பயிறு வகையானது, குருணையும் நீக்கப்பட்டு பருப்பாக தயாரிக்கப்படுகிறது.
எண்ணெய் பிழிந்தெடுத்தல்:
எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை 24.5 மில்லியன் டன்களாக அதிகரிக்க தொழில்நுட்ப மிஷன் உதவுகிறது. இந்தியாவில் கோல்ஹஸ் மற்றும் ஆயில் கனிஸ் மூலம் குடிசைத் தொழில் அளவில் எண்ணெய் பிழிந்தெடுக்கப்படுகிறது. நவீனமயமாக்குதலில் அதிக கொள்ளளவு இயந்திர பிழிந்தெடுக்கும் கருவி மற்றும் கரைப்பான் மூலம் பிழிந்தெடுத்தல் தொழில்நுட்பமானது ஆரம்பமாகி உள்ளது. வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கவும் நிறைய வேலை வாய்ப்பைக் கொடுக்கவும். கிராமப்புறத்தில் சிறிய கொள்ளவுள்ள எண்ணெய் பிழிவு கருவி நிறுவப்பட்டது. சோயாபீன்ஸ், எண்ணெய் கொடுக்கும் பொருள் அல்லாமல், அது புரதம் நிறைந்ததும் கூட. இந்தியா, சோயா உற்பத்தியில் உலகளவில் ஐந்தாவது இடத்தை பெற்றுஉள்ளது. சோயா உற்பத்தி 5.2 மில்லியன் டன்களுக்கு மேலாக உற்பத்தி செய்யப்படுகிறது. சோயாவானது சோயாபால் பவுடர், நியுக்கேட்ஸ் மற்றும் பல வகைகளில் சந்தையில் கிடைக்கிறது.
வணிகப்பயிர்களை பதனப்படுத்துதல்:
இந்தியாவில் கரும்பு, தேயிலை மற்றும் காப்பி முதலியவை முக்கிய வணிகப்பயிர்களாக சாகுபடி செய்யப்படுகிறது. தேயிலையானது முக்கிய வெளிநாட்டு மூலதனத்தை அள்ளி தரக்கூடியது. இந்தியாவிலிருந்து ஆண்டு ஒன்றிற்கு 150 முதல் 170 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது. தேயிலை தயாரிப்பில், வெளிநாட்டு மூலதனம் பெறுவது நல்ல வாய்ப்பு உள்ளது. பெரிய பல்நாட்டு கம்பெனிகள் இந்திய உற்பத்தியாளர்களுடன் இணைந்து விற்பனை செய்ய முயற்சி எடுத்து வருவதும் அல்லது இந்திய தேயிலை கம்பெனியுடன் பங்குதாரர்களாகவோ இருக்க முயற்சி எடுத்து வருகிறது.
கரும்பு உற்பத்தியானது 299 மில்லியன் டன்களுக்கு மேலாக உள்ளது. 50 சதவீத கரும்பானது கரும்பு ஆலைகள் மூலம் ஜீனி தயாரிக்கவும், மீதமுள்ள கரும்பு, சிறிய சர்க்கரை மற்றும் சர்க்கரை பாகு தயாரிக்கவும் தொழில்களுக்கு பயன்படுத்தப்படுவதாக அறியப்பட்டுள்ளது. கரும்பாலைகளை விட சர்க்கரை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் திறன் குறைவாக இருந்த போதிலும், அது கிராமப்புற மக்களுக்கு நிறைய வேலை வாய்ப்பை வழங்குவதால், அதற்கு சிறப்பு கவனம் தேவைப்படுமே ஒழிய அதை ஒதுக்கமுடியாது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதிக்கு ஏற்ற நல்ல சுத்தமான சர்க்கரை தயாரிக்க கரும்பு கிரச்ஷர் மற்றும் ‘ஃபர்நாஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது.
மீன் மற்றும் மீன் பதனப்படுத்தல்
இறால், ‘சிரிம்பஸ்’, ‘டுனா’, ‘கட்டில்பீஸ்’, ‘ஸ்குயிட்ஸ்’, ‘ஆக்டோபஸ்’, ‘ரெட் ஸ்நாப்பார்ஸ்’, ‘ரிப்பன் ஃபீஸ்’, ‘மாக்கிரேல்’, ‘லோப்ஸ்ட்ரஸ்’, ‘கேட்ஃபீஸ்’ முதலியன கடலில் பிடிக்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து அவைகள் ‘கேன்’ மீன்களாகவும், பதனப்படுத்திய மீன்களாகவும் தயாரிக்கப்படுகிறது.
சிப்பம் அடைத்த மற்றும் உகந்த உணவு
பிரட், பிஸ்கட், மிட்டாய், சாக்லெட், உடனடி உணவாகக் கொள்ளக்கூடிய நூடுல்ஸ், தானிய ‘ஃளேக்ஸ்’ முதலியன நவீன சிப்பம் அடைத்த மற்றும் உகந்த உணவாக, தற்சமயங்களில் குறிப்பாக நகர்ப்புறத்தில் பிரபலமாகி உள்ளது. நமது நாட்டில் வறுத்த, சுட்ட, இனிப்பு மற்றும் பேக்கு உணவாக பழங்காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டபோதிலும் நவீன சிப்பம் அடைந்த மற்றும் உகந்த பொருள் பிரபலமாகவே உள்ளது. பழையகாலத்து, உடனடியாக உண்ணக்கூடிய உணவு தயாரிப்புகள் நல்ல சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்டு, நல்ல முறையில் ‘பேக்’ செய்து சந்தைக்கு விற்பனைக்கு வருவதால், அதற்கான உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகள் அதிக அளவில் உள்ளது.
ஆட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சி பதனப்படுத்துதல்
இந்தியாவில் கால்நடை மொத்த தொகையில் உலக அளவில் முதல் இடத்திலும், எருமை தொகையில் 50 விழுக்காடுகள், மொத்த வெள்ளாட்டு எண்ணிக்கையில் ஆறில் ஒரு பங்கும் உள்ளது. எனவே, நவீன இறைச்சி வெட்டும் வசதியும், குளிர்வூட்டும் பணிபனையும் ஆடு இறைச்சி மற்றும் கோழி இறைச்சி தொழில் அமைக்க வாய்ப்பு பெரியதாக உள்ளது. ஆட்டு இறைச்சியை விட கோழி வளர்ப்பு தொழிலில் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி பதிவாகி உள்ளது. இந்தியா, முட்டை பவுடர், குளிர்வூட்டப்பட்ட முட்டை மஞ்சள் கரு மற்றும் இதர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. கோழி இறைச்சியானது மாலத்தீவு மற்றும் ஓமன் நாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஜப்பான், மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் இந்திய கோழி இறைச்சிக்கறி பொருட்களுக்கு பெரிய சந்தை வாய்ப்புகள் உள்ளன. தற்சமயம், இந்தியாவில் 5 முட்டை பவுடர் ஆலைகள் உள்ளன. முழு முட்டை பவுடர், மஞ்சள் கரு பவுடர் மற்றும் அல்புமின் பவுடர் போன்ற பல்வேறு வகை பவுடர்களின் தேவைக்கு ஏற்ற அளவு ஏற்றுமதி செய்யக்கூடிய அளவில் தற்போது உள்ள ஆலைகள் போதுமானது அல்ல.
நவீன இறைச்சி வெட்டும் கூட வசதியை நிறுவுதல் மற்றும ஆட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சி குளிர்வூட்டும் முறைகளின் மேம்பாடுகள் அமைக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. உள்நாட்டு சந்தை மற்றும் அருகிலிருக்கும் நாடுகளுக்கு குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உடனடியாக உண்ணக்கூடிய உணவு வகை மற்றும் பாதி பதனப்படுத்தப்பட்ட கறிப் பொருட்களின் தேவை குறைய போவதில்லை. எருமை மாட்டு இறைச்சி மிகுந்த அளவில் நம் நாட்டில் உள்ளது. மேலும் நல்ல ஏற்றுமதி சந்தை வாய்ப்பு உள்ளது.
பால் மற்றும் பால் பொருட்கள்
தற்சமயம் மொத்த பால் உற்பத்தி 100 மில்லியன் டன்கள். மேலும், அவற்றின் தேவை அதிக அளவிலேயே உள்ளது. கேசின் மற்றும லாக்டோஸ் தயாரிப்புகள், தற்சமயம் அதிக அளவு இறக்குமதி செய்வதற்கே வாய்ப்பு உள்ளது.
போதை பானங்கள் மற்றும் குளிர் பானங்கள்
இந்தியாவில் போதிய வெளிநாட்டு மூலதனத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் போதை பானங்கள் பகுதி உள்ளது. ஒயின், வோட்கா, ஜின், விஸ்கி, ரம் மற்றும் பிராந்தி போன்றவைகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வெளிநாட்டு பானங்கள். ஒரு ஆண்டுக்கு இந்திய பீர் வகைகள் å. 7000 மில்லியன் åபாய்க்கு விற்பனையாகிறது. இந்தியாவில், எந்த ஒரு மூலதனத்தாரும் இந்திய பான சந்தையில் நுழைய தொழற்சாலைக்கு போதிய அளவு கச்சா பொருட்களான மோலாசஸ், பார்லி, மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, திராட்சை, ஈஸ்ட், மற்றும் ஹேப்ஸ் போன்றவைகள் கிடைப்பதே ஒரு முக்கிய காரணமாகும்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 100க்கு மேற்பட்ட குளிர் பானத் தொழிற்கூடங்கள் உள்ளன. சிப்பம் இடப்பட்ட தேயிலை மற்றும் பிஸ்கட் இவற்றிற்கு அடுத்தபடியாக, குளிர்பானங்கள் தினந்தோறும் உபயோகப்படுத்தக்கூடிய சிப்பம் அடைத்த பொருளாக மூன்றாவது இடத்திலுள்ளது.
பதனப்படுத்துவதால், சாகுபடியாளருக்கு ஒரு கூடுதல் வருமானம் கிடைப்பதோடு, பொருளாதார ரீதியாக நிலையான விலை கிடைக்க உதவுகிறது. உணவு பதனப்படுத்துவதில் பொருளாதார பங்கின் ஒட்டுமொத்த நல்ல குறியீடே உணவு முறையில் மதிப்பூட்டுதலாகும். தொழிற்கூடங்களின் பங்கு தொழிற்சாலைகளின் மதிப்பு கூட்டதல் மற்றம் மதிப்பு கூட்டுதலே மொத்த உள்நாட்டு பொருட்களின் தொழிற்சாலைகளின் பங்காக கருதப்படுகிறது.
பதனப்படுத்தும் தொழிற்கூடமானது, பழத்தோட்டம் அமைப்பவர்களின் நலனுக்காக தோன்றியதாக கருதலாம். அவர்கள் தங்கள் பயிர்களை இழப்பிலிருந்து காத்து அதே நேரத்தில், நல்ல மதிப்புள்ள அதிக விலைக்கு போகக்கூடிய விலைப்பொருளாக தகுந்த அறுவடை பின்சார் நேர்த்தி, சிப்பமிடல் மற்றும் பல்வேறு பொருள்களாக பதனப்படுத்தி கையாண்டு பெற முடியும். |