அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: சிறுந்தானியங்கள்
ராகி 
மதிப்பு கூட்டப்பட்ட பொருள் – ராகி
ராகி நூடுல்ஸ் 
பிழியப்பட்ட முறையில் தயாரிக்கப்டும் உணவுகளானது தயாரிப்பு செலவு குறைந்ததாகவும், தொடர்ச்சியான முறையில் எளிதில் தயாரிக்கக் கூழயதாகவும் உள்ளது. 
தேவையான பொருட்கள் 
மைதா 70 கிராம் 
ராகி 30 கிராம் 
தண்ணீர் 300 மிலி 
உப்பு 2 கிராம் 

செய்முறை

  • ராகி மற்றும் மைதாவை ஒன்றாகக் கலந்து பி.எஸ் 60 வலை சல்லடையில் சலித்து ஆவியில் 5 நிமிடம் வேக வைக்கவும் மீண்டும் ஒரு ஆறவைத்த மாசை சலிக்கவும்.
  • பிழியப்படும் இயந்திரத்தில் மாவு பிசையும் பகுதியில் இந்த மாவை நிரப்பவும்.  பின்பு நீர் சேர்த்து 30 நிமிம் பிசைந்து பிழியவும்.
  • இதனை 5 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.
  • அறை வெப்பநிலையில் 8 மணி நேரம் வைக்கவும்.  பிறகு 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 6 மணி நேரம் உலர விடவும்.
  • பிழியப்படும் இயந்திரத்தில் மாவு பிசையும் பாகத்தில் மாவைப்போட்டு நீர் மற்றும் உப்பு சேர்த்து 30 நிமிடம் பிசைந்து இடியாப்ப அச்சு வழியாக பிழியவும்.  இதனை 5 நிமிம் ஆவியில் வேக வைக்கவும்.  விரைப்பு தன்மை பெற 8 மணி நேரம் அறை வெப்பநிலையில் வைக்கவும்.  பின்பு உலர்த்துவானில் 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 6 மணி நேரம் வைக்கவும்.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015