அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: சிறுந்தானியங்கள்
ராகி 
மதிப்பு கூட்டப்பட்ட பொருள் – ராகி
ராகி சேமியா 
தேவையான பொருட்கள் 
மைதா மாவு 30 கிராம் 
கோதுமை மாவு 40 கிராம் 
ராகி மாவு 30 கிராம் 
தண்ணீர் 30 மிலி 
உப்பு 2 கிராம் 

செய்முறை 
மைதா மாவு, கோதுமை மாவு மற்றும் ராகி மாவு ஒன்றாக சேர்த்து பி.எஸ்.60 வலை சல்லடையில் சலித்து 5 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். ஆறவைத்து மறுபடியும் சலிக்கவும்.
பிழியப்படும் இயந்திரத்தில் மாவு பிசையும் பகுதியில் இக்கலவையை தண்ணீரி மற்றும் உப்பு சேர்த்து 30 நிமிடம் பிசைய விடவும்.  பின்பு சேமியா அச்சு வழியாக பிழியவும்.  பிழியப்பட்ட சேமியாவை 5 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.  சேமியா விரைப்புத் தன்மை பெற 8 மணி நேரம் அறை வெப்பநிலையில் வைத்து பின்பு உலர்த்துவானில் 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 6 மணி நேரம் உலர்த்தவும். 

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015