தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 70 கிராம்
சாமை மாவு - 30 கிராம்
வெல்லம் - 100 கிராம்
இஞ்சி பொடி - 0.35
ஏலக்காய் பொடி - 0.35
உப்பு - 0.10
சோடியம் பை கார்பனேட் - 0.10
எண்ணெய் - 100
செய்முறை
- பச்சரிசி மற்றும் சாமை சுத்தம் செய்து 30 நிமிடம் நீரில் ஊறவைக்கவும். நீரை வடிகட்டி நிழலில் 30 நிமிடம் உலர்ததவும். பின்பு அரைத்து சலிக்கவும்.
- வெல்லத்தை பொடித்து 20 மிலி நீர் சேர்த்து கரைத்து மஸ்லின் துணி கொண்டு வடிகட்டி 80 டிகிரி பிரிக்ஸ் கொண்டு வரவும்.
- மாவுடன் மீதமுள்ள பொருட்களை ஒன்று சேர்த்து ஒர் இரவு முழுவதும் அறை வெப்பநிலையில் புளிக்கவைக்கவும்.
- எண்ணெய் தடவிய பாலிதீன் சுவரில் 50 கிராம் புளித்த மாவை வைத்து 6 செ.மீ தடிமனுக்கு தட்டவும். நடுவில் 4 மி.மீ அளவில் சிறிது ஒட்டை செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 2-3 நிமிடங்கள் பொன்னிறமாக வரும் வரை பொரித்தெடுக்கவும்.
|