இதர நிலையத்தின் தொழில்நுட்பங்கள்
மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையத்தின் தொழில்நுட்பங்கள் உலகளாவிய தொழில்நுட்பங்கள்.மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் என்பது ஓர் முழுமை அடைந்த உணவு ஆராய்ச்சி ஆய்வகம் ஆகும். அவற்றின் முக்கிய குறிக்கோள் யாதெனில்உணவு தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் தரமான பதப்படுத்தப்பட்ட பொருட்களை உலக மயமாக்குவதே ஆகும். உணவு தொழிற்சாலைகளில் பொருட்களை விற்பனை செய்ய உதவுகிறது. இந்நிலையில் சிறு குறு மற்றும் பெரும் உணவு தொழில் முனைவோருக்கு அதிகம் லாபம் ஈட்ட வழி வகுக்கிறது.நவீன அடிப்படை வசதியைக் கொண்டு பதப்படுத்தப்பட்ட பொருட்களை உலகமயமாக்க நீண்ட கால ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. பலதளத்தின் தேவைகளும் மற்றும் தீர்வும்.
- அடிப்படை உணவு முறை மற்றும் செயல்பாடுகள். பதப்படுத்தும் பொறியியல் மற்றும் தாவர வடிவமைப்பு
- உணவு உயரிய சோதனை
- தர ஆய்வுச் சோதனை
- தொழில்நெறி பயிற்சி
- தொழில்நுட்ப தேவைகள்
அடிப்படை உணவு முறை மற்றும் செயல்பாடுகள்:
மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் உணவு தொழில்நுட்பரீதியான அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க தேவையான அனைத்துவசதிகளையும் கொண்டுள்ளதாகும்.
- தொழில்நுட்பஅறிவின்
- அடிப்படை உணவு முறை
- அடிப்படை செயல்பாடுகள்
- மூலக்கூறு படிப்புகள்
- மூலக்கூறு வடித்தல்
- ஒருங்கியம் அமைப்பு
- கணினி வடிவமைப்பு
- நறுமண இலக்கு
- உணவுகளின் பொருளியல் கூறுகல்
- உணவு நொதிகள்
- உணவு உருமாற்ற இயல்புகள்
- நிறங்கள்
- சக்தி குறைய செயல்பாடுகள்
- உயரிய தொழில்நுட்பம்
- உகமமான செயல்பாடுகள்
- உயிர் மூலக்கூறுகளின் செயல்பாடுகளை ஆய்வது
- இயற்கையோடு இணைந்த செயல்பாடு பாதுகாப்பு
- உணவு கட்டுப்பாடு காரணிகள்
சிறப்பான சேவை ஆதரவு:
- உணவு சார்ந்த திட்டத்திற்கு ஆலோசனை வழங்குதல்
- பொருட்கள் உற்பத்திக்காக ஒப்பந்த முறை ஆராய்ச்சி மற்றும் உணவு
- பதப்படுத்தல் மற்றும் உயரிய தொழில்நுட்ப ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்தல்
- காப்புரிமை மேம்பாடு மற்றும் விற்பனை
- பொருட்கள் விநியோகம் (தர மற்றும் விற்பனை ஆய்வு)
மத்திய உணவு தொழில்நுட்ப நிலையத்தில் உள்ள தொழில்நுட்பங்கள் புரத உணவுகள்:
அதிகம் புரதம், 12% புரத அளவு, லாக்டோஸ் அல்லாத (பால் சார்ந்த பொருட்கள்) கடுகு/ : ஒருங்கிணைந்து பதப்படுத்துதல். புரத வகைகள்: கடலை மற்றும் சோயா
- எள்ளில் உமி நீக்குதல்
- சூரிய காந்தியின் விதையை பதப்படுத்துதல்
- தாய்ப்பால் உணவு
- நிலக்கடலை மாவு
- இலை புரத அளவு
- சோயா மாவு
மலைப்பயிர் மற்றும் மசாலா பொருட்கள்
எலுமிச்சை எண்ணெயில் டெப்பீன் நீக்குதல்
செர்ரி தேநீர் தயாரிப்பு
கோக்கோ விதை, வெண்ணெய் மற்றும் தூள்களை பதப்படுத்துதல்.
- பெருங்காய தூள்
- ஏலக்காய் பச்சை நிறத்தை உட்புகுதல்
- கொத்தமல்லி குழம்பு மற்றும் சுப்பரி பாக்கு
- உலர்ந்த தேங்கள்
- தேங்காய் பால் பொடிகளை உலர்த்தல்
- உணவு நிறங்களை கண்டறிதல்
- உணவு நிறங்கள் (இயற்கை) : பீட்ரூட், கோக்கம், திராட்சை, குசமப்பூ
- பூண்டு பொடி
- மிளகு: வெண்மை, பச்சை மற்றும் நீர் நீக்கிய பச்சை மிளகு
- குறுமிளகில் நீர் நீத்தல்
- என் டிரையோகண்டனால் அடங்கிய தாவர வளர்ச்சி ஊக்கிகள்
- கார மிளகாயை உலர்த்தல்
- மசாலா எண்ணெய் வகைகள் (மிளகு, இஞ்சி, மஞ்சள் மற்றும் ஏலக்காய்)
மசாலா ஒலியோரெசின்: மிளகு, இஞ்சி, மஞ்சள் மற்றும் மிளகாய்
புளி: அடர் புளி மற்றும் புளியோதரை பொடி
மஞ்சள்: பதப்படுத்துதல் மட்டும் பூச்சு மேற்கொள்ளதல்
வால் விதை பதனிடுதல் ஸ்பைரூலினாவிலிருந்து பைகோசையனின்
கிராமப்புற அடிப்படையில் உற்பத்தி உயிரிய தொழில்நுட்பத்தைக் கொண்டு ஸ்பைரூலினா உற்பத்தி.
பழ/காய்கறி பொருட்கள்:
பழ பட்டை: மா, வாழை, கொய்யா, ஆப்பிள்
பழ தானியம்: மா, ஆப்பிள், வாழை
பழ அடர் சாறு / பசை: மா, அன்னாசி, ஆப்பிள், ஆரஞ்சு, தக்காளி
பழ சாற்று பொடி: மா, வாழை, கொய்யா, தக்காளி
நீர் அகற்றிய பழ மற்றும் காய்கறி: திராட்சை, வாழை, வெங்காயம், உருளை, பட்டாணி பொருட்கள்
- உடனடி தயாரிப்பு ஊறுகாய்கள்: மா, எலுமிச்சை
- ஜாம் பழக்கலவை தயாரிப்பு
- பப்பாளிப் பால்
- பெக்டின் தயாரிப்பு
- குழந்தை உணவு வகைகள் (பழம், காய்கறி, முட்டை, இறைச்சி)
- பழக்கூழ், படிப்பாகு மற்றும் கற்கண்டு
- பழ மிட்டாய்
- பழ மற்றும் காய்கறிகள் பதப்படுத்துதல், குளிரூட்டல் மற்றும் உறையிடுதல்
- மா பழக்கூழ்
- புளிச்சாறு
- மா பழுத்தல்
- முலாம்பழ விதை உமி நீக்கம்
- காளான் உற்பத்தி
- ஊறுகாய் மற்றும் சட்டினி தயாரிப்பு
- அன்னாசி - உலர்த்தல்
- உருளைக்கிழங்கு பொருட்கள்: மாவு, சிப்ஸ், அப்பளம், துண்டுகள்
தக்காளி பொருட்கள்:
தக்காளி கூழ் மற்றும் பசை
- கூழ் மற்றும் காய்கறி பொருட்களின் வைப்பு திறனுக்காக மெழுகில் பதப்படுத்ததல்
- காளான் உற்பத்தி
குடிநீரில் பான பொருட்கள்:
- குழம்பி பானம்: கரியாக்கம் செய்தல் (அடர் குழம்பி உள்பட)
- குழம்பி தேநீர்
- நறுமணம்: கோவா, ஆரஞ்சு, எலுமிச்சை
- நறுமண தேநீர் மற்றும் உடனடி தேநீர் தயாரிப்பு
- பால் பானம்: தானிய அடிப்படையில்
- பழக்கூழ்: வாழை, திராட்சை, கொய்யா, முந்திரி
- காய்கறி புரதம் அடங்கிய பதப்படுத்திய பால் பொருட்கள்
- கேரட்சாறு
- இஞ்சி கலவை
- கடலைப்பால் / தயிர்
- தேன் பானம்
- ஆரஞ்சு சாறு
- பான் சுப்பாரி தேன்
- மாதுளை சாறு மற்றும் சார்ந்த பொருட்கள்
- பழச்சாறு அடைத்தல் மற்றும் சர்க்கரை பானத்தை பதனிடுதல்
- பழக்கூழ் மற்றும் ஸ்குவாஷ்
- லிச்சி பொருட்கள்: பதப்படுத்தப்பட்ட ஸ்குவாஷ்
தினசரி எளிய முறையில் தயாரிக்கும் உணவு வகைகள்:
- உடனடி கலவை: இட்லி, தோவை, சக்கிலி, ஜமுன், ஜிலேபி, மடூர் வடை, பக்கோடா, சோயா ரசகுல்லா, ரசகுல்லா பதப்படுத்துதல் கக்கரா
- ஆரஞ்சு தோல் கறி / சட்டினி
- தானிய அவல்கள்: அரிசி, சோளம்
- உடனடி பாரம்பரிய உணவுகள்: பிசிபேலா பாத, புளியோதரை, சாம்பார், ரசம், பொங்கல், உருது பாது, இம்லி-போகா
- பாஸ்ட் புட்ஸ்
தானிய மற்றும் பருப்பு பொருட்கள்:
- புது நெல்வகையை பதப்படுத்துதல்
- முரட்டு கோதுமையிலிருந்து சிமோலினா தயாரிப்பு
- சோள சார்ந்த தயாரிப்பு பொருட்கள்
- நெல் புழுங்கவைத்தல்: உலர் சூடு முறை, சூடு நனைத்தல் முறை
- பாஸ்திக் ஆட்டா
- கம்பு மாவு சுத்திகரித்தல்
- பாஸ்மதி அரிசி தயாரித்தல்
நுண்ணுயிரியல் மற்றும் நொதித்தல் பொருட்கள்:
- மது தயாரிப்பு: வாழை, முந்திரி, திராட்சை, மரவள்ளி, மகுவா பூக்கள்
- பேக்கரி காடிகள்
- மது உற்பத்தியில் காடி வடித்தல்
- உணவு நொதிகள்: பூஞ்சான அமிலேஸ், அமைலோ க்ளூகோசிடேஸ், பெகடினேஸ்
- அஃப்லோடாக்சின் சுத்திகரித்தல்
- இயற்கை காடி: வெள்ளம், கள் மற்றும் அன்னாசி
பேக்கரி பொருட்கள்:
பிஸ்கட் தயாரிப்பு: கோக்கோ, கோக்கோ பாலாடை
பேக்கரி பொடி வகைகள்
பிஸ்கட் தயாரிப்பு: உப்பு மற்றும் சர்க்கரை
ரொட்டி தயாரிப்பு: பழுப்பு பழம், வெண்மை, இனிப்பு, பால், கோதுமை
- ரொட்டி, பிஸ்கட், மிட்டாய் வகைகள்
- ராகி ரொட்டி
- பார்லி ரொட்டி
- உடனடி கேக் தயாரிப்பு: சர்க்கரை அல்லாத பிஸ்கட், வெங்காய பிஸ்கட், போக்கரி பொருட்கள்
இறைச்சி, மீன் மற்றும் கோழிக்கறி:
- கோழி குஞ்சு கறி - பொருட்கள்
- கைட்டோசான்
- மாட்டுக்கறி
- முட்டை கரு அவல், முட்டை பொடி, முட்டை பூச்சுதல்
- மீன் - உணவு எண்ணெய், ஊறுகாய், மீன் பொருட்களை உறையிடுதல்
- உடனடி குழம்பு கலவை
- சுறா துடிப்பு பொருட்கள்
- இறால்: பதனிடுதல் உறை உலர்த்தல்
- விலங்கின தீவன தயாரிப்பு: ஆடு மற்றும் கோழி
- உப்புக்கண்டம் மற்றும் பன்றி இறைச்சி தயாரிப்பு
- மீன் கழிவிலிருந்து பேக்டோபெப்டோன் தயாரிப்பு
- கோழிக்குஞ்சு பொருட்கள் : கோழி கம்பு, கறி, தந்தூரி, கபாப்
- காணாங்கத்தி: உப்பு பதனிடுதல், உலர்த்தல்
- ஆட்டுக்கறி: சூப், குழம்பு
- ஆட்டுக்கறி ஊறுகாய்
- குடல் இறைச்சி
- உறைந்த கோழி தந்தூரி கோழி, கபாப், வெதும்பிய கோழி கபாப், கோழிக்கலவை, உறைந்த ஆட்டுக்கறி சேமிகபாப் கறி, பன்றி கறி, பிரியாணி (ஆடு மற்றும் கோழி) உறைந்த பிரியாணி
- நீர் அகற்றிய இறைச்சி
- கோழிக் கறி ரொட்டி துண்டு
பொருட்கள் தயாரிக்கும் உணவு இயந்திரங்கள்:
- எலுமிச்சை சாறு பிழியும் கருவி
- நீராவியாகும் கருவி (இரட்டை திறன் கொண்ட)
- நீராவியாகும் கருவி (ஒற்றை திறன் கொண்ட)
- வெப்ப காற்று உலர்த்தி: பாக்கு, ஏலக்காய், முந்திரி
- மூலிகை சாறு எடுக்கும் கருவிகள்
- சோள அரவை இயந்திரக் கருவி
- சிறு தானிய அரவை ஆலை
- சிறு அரிசி அரவை ஆலை
- சிறு கோதுமை அரவை ஆலை
- நவீன பருப்பு அரவை ஆலை
- நெல் வேகவைக்கும் இயந்திரம்
- நெல் உமி நீக்கும் கருவி
- அவல் தயாரிக்கும் சுற்று இயந்திரம்
- தொடர்ந்து சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரம்
- தன்னிச்சையாக தோசை தயாரிக்கும் இயந்திரம்
- தொடர்ந்து இட்லி தயாரிக்கும் கருவி
- எளிய நெல் அரவை ஆலை
- வெப்ப அடைப்புக கருவி
- அப்பளம் தயாரிக்கும் கருவி
- காய்கறிகளை துண்டாக்கும் கருவி
இதர கருவிகள்:
- துத்தநாக எத்திலீன் டை அமீன் டெட்ரா அசிடிக் கலவை
- அல்போன்சா / பங்கனப்பள்ளி மா ரகங்களை ஏற்றுமதிக்கான தொழில்நுட்ப நெறிமுறைகள்
- உணவு அடர்த்தி
- உணவு பதப்படுத்தும் நொதிகள்
- இழைநய புரதம்
தொழிற்சாலைகளுக்கு பரிமாற்றப்பட்ட முக்கிய தொழில்நுட்பங்கள்:
- எருமை பாலிலிருந்து குழந்தை உணவு தயாரிப்பு
- உகந்த குழந்தை உணவு தயாரிப்பு
- மசாலா பான தயாரிப்பு
- உடனடி கலவை (பொதுவாக பாரம்பரிய இந்திய பட்சண வகைகளில்)
- கோக்கம், குசும்பப்பூ இதழ்கள், பீட்ரூட் மற்றும் நீல திராட்சையிலிருந்து இயற்கை நிறங்களை எடுத்தல்
- குறுமிளகு கிருமி நீக்க கருவி
- இந்திய வகை திராட்சையில் தரம் வாய்ந்த உலர் திராட்சை எடுத்தல்
- மஞ்சள் ஒலியோரெசின் எடுத்தல்
- இறால் கழிவிலிருந்து கைட்டோசான் எடுத்தல்
- அப்பலோடாக்ஸினற்ற தடலை எண்ணெய் தயாரிப்பு
- என்-டிரையோகண்டனால்: தாவர வளர்ச்சி உளக்கி
- தக்காளி அடர் உற்பத்தி முறை
- வேளாண் கழிவிலிருந்து விலங்கின் தீவன தயாரிப்பு
- மரவள்ளியிலிருந்து மத எடுத்தல்
- உணவு தானிய பாதுகாப்புக்கான நெறி முறைகளை வகுத்தல்
- சூரிய காந்தி விதையில் உமி நீக்குதல்
- பெருங்காய தூள் தயாரிப்பு
- அதிக நார் சத்து, ஆரோக்கழ=ியமான பிஸ்கட் தயாரிப்பு
தொழில்நுட்ப விவரங்கள்:
தேங்காய் பால் பொடி:
இத்தகைய பொடியானது மீன், செதில் மீன், இறைச்சி, கோழிக்கறி, காய்கறி பதார்த்தங்கள். இனிப்பு வகைகள், சர்பத், பான வகைகள் மற்றும் இதர தயாரிப்புகளின் ஒரு வகை செய்பொருளாக பயன்படுகிறது.
அறிமுகம்:
ஆதங்காய் பால் பொருளானது மண்டலத்தின் முக்கிய பொருளாகும். மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் நீர் அகற்றப்பட்ட தேங்காய் பால் பொடி தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது.
பதப்படுத்துதல்:
தேங்காய் பால் பொடியை தயாரிக்க கீழ்வரும் நான்கு முக்கிய படி கொண்ட நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
- தேங்காய் பால் பிழிதல்
- பாலை முறைப்படுத்துதல்
- குழம்பு ஆக்குதல்
- தெளிப்பு உலர்த்தி
வெண்ணிற முளை சூழ்தசையை தேங்காய் ஓட்டிலிருந்து எடுத்து ரோட்டரி வெஜ் கட்டரில் செலுத்த வேண்டும். பின்பு திருகு அமுத்தும் கருவியைக் கொண்டு பால் பிழிய வேண்டும். பால் எடுத்த பிறகு தேவையான செய்பொருட்களை சேர்த்து முறைப்படுத்தி, தொற்று நீக்கம் செய்து தெளிப்பு உலர்த்த வேண்டும்.
பாரம்பரிய உணவு வகைகள்:
அறிமுகம்:
பாரம்பரிய உணவுகள் தற்பொழுது உணவு வகைகளை காட்டிலும் குறைந்த சுவையே கொண்டுள்ளது. எனவே நவீன உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைக் கொண்டு பாரம்பரிய உணவுகளின் சுவையை கூட்டலாம்.
பயன்பாடு:
உடனடி பட்சண மற்றும் இனிப்பு வகை தயாரிப்புகள். தோசை, இட்லி, வடை, குலாப் ஜாமுன், ஜிலேபி, சக்லி, மதுர் வடை, பக்கோடா, மேலும் பாரம்பரிய உணவு வகையான புளிகார், சாம்பார், ரசம், பொங்கல், உருது பாத, கோஜவலக்கி தயாரிப்புகளிலும் பயன்படுகிறது.
பதனிடுதல்:
மூலப்பொருட்களை நன்றாக கழுவி சூட்டில் வறுக்க வேண்டும். பின்பு வறுத்த பொருட்களை நன்றாக அரைத்து மற்ற செயல்பொருட்களுடன் கலக்க வேண்டும்.
பாரம்பரிய உணவு வகைகளை தயாரிக்க பின்வரும் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
குழம்பு கலவைகள்:
குழம்பு கலவைகள் என்பது நீர் அகற்றப்பட்ட சமையல் கறி வகையாகும்.
பதனிடுதல்:
மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம்.
ஆறு வகை குழம்பு கலவை தயாரிக்கும் நெறிமுறைகளை வகுத்துள்ளனர்.
ஆட்டுக்கறி குழம்பு தயாரிப்பு:
-மதராஸ் குருமா
-ஆட்டுக்கறி சில்லி ப்ரை
மீன் குழம்பு தயாரிப்பு:
- தென்னிந்திய மீன் குழம்பு
- ரோகு மசாலா
- மீன் ப்ரை மசாலா
- கோன் மீன் கறி
பலவிதமான குழம்பு வகைகள்:
- ஆட்டுக்கறி
- கோழிக்கறி
- காய்கறி
- முட்டை
பிரியாணி கலவை (ஆட்டுக்கறி, கோழிக்கறி, காய்கறி)
தந்தூரி சிக்கன் கலவை
கபாப் கலவை (இஞ்சி சிக்கன் கபாப் மற்றும் லாசன் கபாப்
உடனடி கேக் கலவை:
இத்தகைய கேக் வகையானது அனைத்து வகை கேக் செய் பொருட்களை கொண்டதாகும்.
விற்பனை வாய்ப்பு:
வளர்ந்த நாடுகளில் உடனடி கேக் தயாரிப்பு பல வீடு மற்றும் பேக்கரி பொருள் கடையில் மிகுந்த கிராக்கி கொண்டுள்ளது. ஆனால் இந்திய நாட்டில் இப்பொருட்களின் ஆராய்ச்சி குறைந்த அளவே உள்ளது.
செயல்பாடுகள்:
- உலர் செய்பொருட்கள்
- சலித்தல்
- கலவை ஆக்குதல்
- புகையூட்டுதல்
- நிரப்புதல்
- அடைத்தல்
- சேமிப்பு
சர்க்கரையற்ற பிஸ்கட் வகை தயாரிப்பு:
குளுக்கோ பிஸ்கட் 450 கலோரி மற்றும் 25 சதவிகித சர்க்கரை கொண்டதாகும். சர்க்கரையற்ற பிஸ்கட்டில் சர்க்கரையே இருக்காது. கடந்த 1970 ஆம் ஆண்டு சுக்குரோஸ் வகை சர்க்கரை பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால் அவற்றின் பயன்பாடு பற்சேதம், உடல்பருமன், இதய நோய் உயிர் அழுத்த ரத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றை விளைவித்தால் அவற்றின் பயன்பாடு எனவே மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் சர்க்கரையற்ற பிஸ்கட்டுகள் தயாரிப்பிற்கான நெறிமுறைகளை வழிவகுத்துள்ளனர்.
சர்க்கரையற்ற பிஸ்கட்கள் மிருதுவான பிசைந்த மாவைக் கொண்டு ரோட்டரி அச்சில் பதப்படுத்த வேண்டும். பின்பு பிஸ்கட் துண்டுகளை தொடர்ந்து சுட வேண்டும்.மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் இவ்வகை பிஸ்கட் தயாரிப்பிற்கான நெறிமுறைகளை வகுத்துள்ளனர்.
சத்துக்களின் தகவல்:
புரதம் -6 சதவிகிதம்
கொழுப்பு -10 சதவிகிதம்
மாவுச்சத்து - 45 சதவிகிதம்
பழ பட்டைகள் (மா, ஆப்பிள், கொய்யா, வாழை)
அறிமுகம்:
பழ வகைகள் புத்துணர்வாகவோ அல்லது பதனிடப்பட்ட நிலையில் பாதுகாக்கப்படுகிறது. இப்பொருளானது ஆரோக்கியம் மற்றும் அதிக வைப்புத்திறன் கொண்டதாகும்.
விற்பனை வாய்ப்பு:
பழ பட்டைகளின் சுவை, மணம் காரணமாக கிராமப்புற மட்டும் நகரங்களில் நல்ல விற்பனை வாய்ப்பு உள்ளது.
தானிய அவல் தயாரிப்பு - அரிசி:
அறிமுகம்:
அரிசி அவல்கள், அவல் அரிசி, குத்து அரிசி, அவல், அவலாக்கி, போஹா, சிவ்டா எனப் பல்வேறு பெயர் கொண்டதாகும். அரிசி அவலானது பாரம்பரிய உணவு வகையாகும். இவற்றின் அடிப்படையில் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் மேம்படுத்தப்பட்ட அரிசி அவல் தயாரிப்பு நெறிமுறைகளை வகுத்துள்ளனர். இவை உப்புமா, புளி சாதம், இனிப்பு பொங்கல், இனிப்பு குழம்பில் பயன்படுத்தப்படுகிறது.
விற்பனை வாய்ப்பு:
இத்தகைய பொருளானது நகர மற்றும் மித நகர பகுதிகளில் அதிக விற்பனை வாய்ப்புள்ளது. அரிசி அவல்களை கிராமப்புரத்தில் உள்ள நடுத்தரக் குடும்பத்தினரும் வாங்குவதற்கும் அவற்றை வெள்ளம் மற்றும் தேங்காய் துருவலை கொண்டு நேரடியாக உட்கொள்ள ஏதுவாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட இணையத்தளத்தை பார்க்க. www.cftri.com
எம் எஃப்பிஐ யில் உள்ள திட்டங்கள்
நெல் பதனிடும் ஆராய்ச்சி மையம்:
சேமிப்பு மற்றும் பாதுகாப்பு
- அதிக ஈரப்பதம் கொண்ட நெல் வகைகள்
- மழைக்காலத்தில் அரிசி புழுங்க வைத்தல்
- வைக்கோல்
உலர்த்துதல்:
அரிசி புழுங்க வைத்தல்:
- துர்நாற்றம் வராமல் தடுத்தல்
- உமி நீக்காமல் கட்டுப்படுத்துதல்
- வேகவைத்த அரிசி
- அழுத்த முறையில் அரிசியை புழுங்க வைத்தல்
- பழுப்பு நிற அரிசியை புழுங்க வைத்தல்
அரவை:
- நவீன அரவை ஆலை
- குறைந்த உராய்வு உமி நீக்க கருவி
பொருட்கள் மற்றும் தயாரிப்புக் கருவி:
- இட்லி பொடி
- சுருள் பொடி
- உப்பிய அரிசியை வலுவூட்டுதல்
- அரிசி சேமியா
- ரவை
- உபபொருட்கள் மற்றும் கருவிகள்
- அரிசி உமி சாம்பல் –நுண்ணுயிர் உரமாக பயன்படுத்துதல்
- தவிடு நிலைப்படுத்தும் கருவி
மாசு கட்டுப்பாடு:
அரிசி ஆலைக்கு கழிவு நீர் வெளியேற்றும் இயந்திரம்
தொடர்புக்கு:
இந்திய பயிர் தொழில்நுட்ப நிலையம்
(உணவு பதனிடும் தொழிற்சாலை செயலகம், இந்திய அரசு)
புதுக்கோட்டை சாலை
தஞ்சாவூர் - 613005
தொலைபேசி: 04362-226676
04362-228155
04362-227971
மின் அஞ்சல்:iicpttnj@gmail.com
|