செயல்பாடுகள்:
பொதியலின் முக்கியமான 3 செயல்பாடுகள் - பாதுகாப்பு, பதனிடுதல் மற்றும் விற்பனை மேம்படுத்துதல்/ஊக்குவிப்பு ஆகும்.
- பாதுகாப்பு - இது காலநிலை மற்றும் எந்திரத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து பாதுகாத்தல். காலநிலை பாதுகாப்பு காற்று மண்டல ஈரப்பத்தம், ஆக்ஜிஸன், ஒளி, வெப்பம், குளிர் மற்றும் நுண்ணுயிரி வழியாக ஏற்படக்கூடியது.எந்திரத்தன்மையுடைய பாதிப்பு என்பது பொதியல், சேமிப்பு, போக்குவரத்து, விநியோகம், தாக்கவிளைவு, அதிர்வு மற்றும் அழுத்தத்தால் ஏற்படக்கூடியதாகும்.
- பதனிடுதல் - உணவுப் பதனிடுதல்/ பாதுகாத்தல் என்பது குறிப்பிட்ட உணவு பொதியலில் எத்தனை காலத்திற்கு கெடாமல் பாதுகாக்க முடியும் என்பதாகும். உணவின் தரம் நுகரும் வரை அதன் தரம் கெடாமல் பாதுகாக்கவேண்டும்.
- விற்பனை ஊக்குவிப்பு - சரியான பொதியல் சிறந்த விற்பனையாளராக செயல்பட்டு நுகர்வோரை ஈர்க்கின்றது. இதன் மூலம் விளம்பரஸ் செலவுகளும் கனிசமாக குறையும்.
|