அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: உணவு பொதியிடும் முறைகள்
முறைகள்:


  • தொற்றில்லா பொதியல்/சிப்பமிடுதல்: இந்த பொதியல் முறையில் உனவு மற்றும் தனித்தனியே கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின் உணவுப்பொருளை கிருமி அற்ற சூழலில் அடைக்கப்படுகின்றது. இதனால் உணவுப்பொருளின் ஆயுள் நீட்டிக்கப்படுகின்றது.

  • வெற்றிட பொதியல்/சிப்பமிடுதல்: இந்த முறையில் பொதியலில் உள்ள காற்று நீக்கப்பட்டு வேறு வாயுக்கள் சேர்க்காமல் உணவுப் பொருள் அடைக்கபடுகின்றது. இது பதப்படுத்தப்பட்ட இறைச்சி நீண்டகாலமாக பயன்படுத்தப்ப்டுகிறது.

  • கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலை: இம்முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாயுக்களின் செறிவு துள்ளியமாக சேர்க்கப்பட்டு, சேமிப்பு மற்றும் விநியோகத்தின் போது அதன் அளவு குறையாமல் பராமரிக்கப்படுகிறது. இந்த முறைக்கு விலையுயர்ந்த கருவுகள் தேவைப்படுவதால் குளிர் சேமிப்பு கிடங்குகளிலும் மற்றும் கப்பல்வழி அனுப்புவதற்கும் பயன்படுகிறது.

  • திருத்தப்பட்ட சூழ்நிலை: இந்த முறையில் உள்ளிருக்கும் வாயுக்கள் நீக்கப்பட்டு தீர்மானிக்கப்பட்ட வாயுக்கலவை செலுத்தி பொதிக்கப்படுகிறது. இதற்கு கார்பன்- டை- ஆக்ஸைட், நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் உபயோகப்படுத்தப்படுகின்றது.

சில புதிய பொதியல் முறைகள்:

  • மக்கும் தன்மையுடைய பொதியல் முறை: நுண்ணுயிரிகளான பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பாசிகள் கொண்டு மக்க வைக்ககூடிய நெகிழ்களைக் கொண்டு பொதியல் செய்யப்படுகிறது.

  • இயங்கக்கூடிய/செயல்படக்கூடிய பொதியல்: இந்த புதிய முறையில் உணவுப்பொருள், பொதியல் மற்றும் சுற்றுப்புற சூழல் இடைவினைபுரிந்து உணவுப்பொருளின் தேக்க ஆயுள், பாதுகாப்பு மற்றும் புலன் இயல்புகளை அதிகரிக்க செய்கிறது. இந்த பொதியல் முறை தேவைக்கேற்ப சுற்றுச்சூழலை மாறுபடுத்தவும், தேவையற்ற வாயுக்களை வெளியேற்றவும் அல்லது பொதியலின் மேம்பாகத்தில் இருக்கக்கூடிய வாயுக்களின் கலவையை நிர்ணயித்தும் உணவுப்பொருளின் தேக்க ஆயுளை நீட்டிக்கிறது.

  • உண்ணக்கூடிய பொதியல் உணவுப்பொருட்களின் மேல் அல்லது உணவுப் பொருட்களின் இடையே உண்ணக்கூடிய பொருட்களை கொண்டு மெல்லிய பூச்சு செய்வது உண்ணக்கூடிய பொதியலாகும். இயற்கையான பலமூலக்கூறுகளை கொண்டு பல ஆய்வுகளை செய்யப்படுகிறது. பலவகையான பல்கூட்டு சர்க்கரை, புரதங்கள், கொழுப்புகளை தனித்தோ அல்லது கலவையாக உண்ணக்கூடிய பொதியல் செய்யப்படுகிறது.

  • திறன்பொதியல்: இது அடிப்படையில் கண்காணிக்க மற்றும் உணவு தரம் பற்றி தகவல் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இயந்திர, ரசாயன, மின் மற்றும் மின்னனுவால் ஒருங்கிணைக்கப்பட்டு உணவுப்பொருளின் பயன்பாட்டையும் செய்திரணையும் அதிகரிக்கவல்லது.

  • நுண் அலகு/நானோபொதியல்: நுண் அலகு தொழில் நுட்பத்தின் மூலம் பொதியலின் மூலக்கூறுகளின் வடிவத்தில் மாற்றம் செய்யப்பட்டு பொதியலுக்கு தேவையான பண்புகளை புகுத்தி வடிவமைக்கலாம். பல்வேறு நானோ வடிவங்கள் கொண்டு நெகிழிகளுக்கு வாயு மற்றும் நீராவி உட்புகுதன்மை உணவுப்பொருட்களின் தன்மைக்கு ஏற்றவாறு அளிக்கலாம். இந்த இயல்புகள் தேக்க ஆயுளை, ப்லன் பண்புகளை அதிகரிப்பதோடு போக்குவரத்து மற்றும் பயன்பாடுகளை அதிகரிக்கிறது.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015