அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: பனைஉணவுப்பொருட்கள் – செய்முறை
|
பனங்கிழங்கு மாவு சேர்த்த லட்டு |
|
தேவையான பொருட்கள்
கடலைமாவு |
70 கி |
பனங்கிழங்கு மாவு |
30 கி |
சர்க்கரை |
200 கி |
ஏலக்காய்ப்பொடி |
5 கி |
முந்திரி (வறுத்த) |
15 கி |
திராட்சை (வறுத்த) |
15 கி |
கிராம்பு |
2 கி |
|
செய்முறை :
- கடலைமாவு மற்றும் பனங்கிழங்கு மாவையும் தேவையான அளவு தண்ணீருடன் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
- அழுத்தமான பாத்திரத்தில் எண்ணெய்யை சூடாக்கவும்.
- துவாரங்கள் உள்ள பரண்டியில் மாவை ஊற்றி சிறு பூந்திகளாக பொறித்தெடுக்கவும்.
- சர்க்கரையை கம்பி பதத்தில் காய்ச்சி பூந்தியை சேர்க்கவும்.
- வறுத்த பருப்புகள், ஏலக்காய், கிராம்பு சேர்த்து கலக்கவும்.
- சூடாக இருக்கும்போதே உருண்டைகளாக்கவும்.
|
|