அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: பனைஉணவுப்பொருட்கள் – செய்முறை
|
பனங்கிழங்கு மாவு சேர்த்த பனியாரம் |
|
தேவையான பொருட்கள்
அரிசி |
80 கி |
பனங்கிழங்கு மாவு |
20 கி |
உளுந்து |
10 கி |
வெந்தயம் |
2 கி |
வெங்காயம் |
15 கி |
பச்சை மிளகாய் |
4 கி |
சீரகம் |
2 கி |
கருவேப்பிலை |
2 கி |
எண்ணெய் |
10 மிலி |
உப்பு |
தேவைக்கு ஏற்ப |
|
செய்முறை :
- அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் தனியாக 4 மணி நேரம் ஊரவைத்து தண்ணீரை வடித்துவிட்டு நயமாக அரைத்துக் கொள்ளவும்.
- உப்பு சேர்த்து ஓர் இரவு முழுவதும் புளிக்கவிடவும்.
- இத்துடன் பனங்கிழங்கு மாவை சேர்த்து கொள்ளவும்.
- நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- பனியார குழியில் எண்ணை ஊற்றி சூடானதும் பனியார மாவு ஊற்றவும்.
- இருபுறமும் வெந்தவுடன் சட்னியுடன் பரிமாரவும்.
|
|