அறுவடை பின்சார் தொழில் நுட்பம்:: உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளின் அமைச்சகம்

பழ உற்பத்தி சட்டம் கீழ் பிரிவு அமைக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

தனி நபர் எவ்வித பழ பொருட்களையும் (எ.டு) பழரசங்கள், பழங்கூழ் பழக்காடிகளை பழ உற்பத்தி ஆணை சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற பிறகு வியாபாரம் செய்ய இயலும்.
பழ உற்பத்தி சட்டத்தின் கீழ் - வகை வாரியான நிலப்பரப்பு தேவை, வருடாந்திர உற்பத்தி திறன் மற்றும் உரிமம் கட்டணம் பின்வருவன.


    வகை

    உற்பத்தி பரப்பு (ச.மீட்டர்)

    சேமிப்பு மற்றும் அலுவலக தேவை (ச.மீட்டர்)

    உரிமம் கட்டணம் (ஒரு கால கட்டணம்)

    வருடாந்திர உற்பத்தி அளவு / நாள்காட்டி ஆண்டு

    வீட்டு தொழில் ‘பி்

    25

    25

    ரூ. 100

    10மி.டன் வரை

    குடிசைத் தொழில்

    60

    60

    ரூ.250

    10 மி.டன்னுக்கு மேல் 50 மி.டன் வரை

    சிறு தொழில் ‘ஏ’

    100

    100

    ரூ.400

    50மி.டன் மேல், 100 மி.டன் வரை நிறுவும் கொள்திறன் 1 மி.டன் 1 நாள்

    சிறு தொழில் ‘பி’

    150

    153000

    ரூ.600

    250 மி.டன் கீழ் நிறுவும் கொள்திறன் 2 மி.டன் / நாள்

    தொழில்

    300

    -

    ரூ.1500

    250 மி.டன் மேல் நிறுவும் கொள்திறன்2 மி.டன் / நாள்

    குறிப்பு:

    • இயந்திரங்கள் ஆட்கொள்ளும் நிலப்பரப்பு 50 சதவிகித தொழில் பரப்புக்கு மேல் இருக்கக் கூடாது
    • வீட்டு தொழில் ‘பி’ மற்றும் குடிசைத் தொழில் தொழிற்சாலை வளாக குறைந்த அளவு உயரம் 10 அடி மற்றும் 14 அடி (பெரிய தொழிற்சாலை) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது
    • அனைத்து உற்பத்தியாளர்களும் தங்களது பொருட்களை உற்பத்தி செய்ய உணவு உற்பத்தி ஆணை / சட்டம் குறிப்பிட்ட சுகாதார கட்டுப்பாடு தர மதிப்பீட்டின் கீழ் உற்பத்தி செய்ய வேண்டும்.

    இரண்டாவது விதி:
    பகுதி (அ) பழ பொருட்கள் தொழிற்சாலை சுகாதார தேவைகள்:

    • தொழிற்சாலைகளில் வளாகத்தில் மின்சார கோளாறுகளின்றி காற்றோட்டம் மற்றும் பசுமையான பகுதியில் அமைக்க வேண்டும்
    • ஜன்னல் மற்றும் இதர வெளியிடங்களை திரை கொண்டு மூட வேண்டும் கதவுகளை தன்னிச்சையாக்க சாத்திக் கொள்ளுமாறு நிறுவ வேண்டும். நீடித்த மேற்கூரை மற்றும் தரைகளை காரைக்கொண்டு அமைக்க வேண்டும்
    • தொழிற்சாலை மற்றும் இயந்திரங்களை மீன், இறைச்சி மற்றும் முட்டை சார்ந்த பொருட்களை தயாரிக்க பயன்படுத்தக் கூடாது
    • தொழில் வனாகத்தை சுகாதாரமான வெளியிடங்களில் அமைக்க வேண்டும்
    • இயந்திரம், கருவி மற்றும் கொள்கலன்களை சுத்தப்படுத்தலுக்கான வசதிகளை நிறவ வேண்டும். பொருட்கள் தயாரிப்புக்கான பொருட்களை வழங்க வேண்டும்
    • உற்பத்தி பொருட்களை பொட்டியிட மற்றும் சேமிக்க, தாமிர, பித்தளை மற்றும் இரும்பு கொள்கலன்களை உபயோகப்படுத்தாமல் அலுமினியம், எஃகு மற்றும் டின் கலனையே பயன்படுத்த வேண்டும்.
    • பொது சுகாதார ஆய்வகம் பின்னரே பயன்படுத்த வேண்டும்
    • வேதியல் நுண்ணுயிரியல் ஆய்வுக்கு கொண்டு தொழிந்சாலைகளில் கழிவு பொருட்கள் வெளியேற தேவையான வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.
    • தொழிலாளர்களுக்கு தேவையான சுகாதார கழிப்பறைகளை அமைக்க வேண்டும்
    • சமையல்களை வெளியிடங்களில் மேற்கொள்ளும்போது புகை போக தேவையான புகை போக்கிகள் இயந்திர புகை விசிறிகளை அமைக்க வேண்டும்.
    • தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஆரோக்கியத்தை மருத்துவரீதியாக ஆராய்ந்து தேவையானவர்களுக்கு தடுப்பு மருந்துகளை தர வழங்க வேண்டும்
    • தொழிலாளர்களுக்கு தேவையான மேலாடைகள், கையுறைகள் அளித்து, தனிப்பட்ட முறையில் தினசரி சுத்தமாக வர வேண்டும்

    பகுதி 1 (ஆ). தொழில்நுட்ப பணியாளர்களின் தகுதிகள்:
    தொழில்துறை வல்லுனர்கள் கீழ்க்கொண்ட தனிநபரின் தகுதியைக் கொண்டு பணி நியமனம் செய்வர்

    சிறு தொழில்:

    • பி.எஸ்.சி வேதியல் / வேளாண்மை படிப்பு படித்தவர்
    • பட்டய படிப்பு அல்லது பழ பதனிடுதல் சான்றிதழ் பெற்றவர் அல்லது சுமார் 3 மாதம் ஆவது பாடக்கோப்புகளை அங்கீகாரம் பெற்ற நிலையத்தில் பயின்றவர்.

    பெறுந் தொழில்:

    • பி.எஸ்.சி (தொழில்நுட்பம்) குறிப்பாக உணவு தொழில்நுட்பம் அல்லது வேதி பொருளியல் பட்டம் பெற்றும் 1 வருட காலமாவது பழ பதனிடும் தொழிற்சாலையில் அனுபவ பெற்றவராக இருத்தல் அவசியம்
    • பி.எஸ்.சி. (மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையத்தில் பட்டய படிப்பு பயின்றவர் அல்லது கேரள அரசின் கலகமேரி உயர்தொழில்நுட்ப கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றவர்
    • பி.எஸ்.சி (வேதியல் அல்லது வேளாண்மை மற்றும் பழ பதனிடும் தொழிற்சாலையில் 3 வருட அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்

    தொழிற்சாலை செயலாக்கத்திற்கு தேவையான குறைந்த அளவு கருவிகள் மற்றும் இயந்திரங்கள்.

    1.

    மூலப் பொருட்கள் சுத்தம் செய்தல்

    சுமார் 20 கேலன்ஸ் கொள்ளவு கொண்ட செவ்வக தொட்டி அமைத்தல்

    2.

    கலன்கள் சுத்தம் செய்தல்

    குறைந்த பட்சம் 40 கேலன்ஸ் கொள்ளவு கொண்ட தொட்டி அமைத்தல் கலன் சுத்தமாக்கும் கருவி, தூர்கள் மற்றும் வாளிகள்

    3.

    பழ மற்றும் காய்கறி பொருட்கள் தயாரிப்பு

    1. 21/2 அடி அலுமினியம் அல்லது எஃகு கூரை கொண்ட மேசை அமைத்தல்
    2. 12 அடுக்குகல் அமைத்தல்
    3. எஃகு கத்தி
    4. வெப்பம்படாமல் இருக்க பயன்படும் கருவி அமைத்தல்

    4.

    சாறு பிளிதல் கலவையாக்குதல்

    சாறு எடுக்கும் கருவி 
    எஃகு சல்லடை
    100 லிட்டர் கொள்ளவு கொண்ட பாத்திரங்கள்

    5.

    பதனிடுதல்

    கேஸ் அடுப்பு / கொதிகலன்
    பாத்திரங்கள் / கெண்டிகள்
    கரண்டி
    வெப்பநிலைமானி நீர்மானி
    வேதி பொருட்கள், நிறமிகள் எடை போட தேவையான தராசு

    6.

    நொதித்தல்

    பீப்பாய் / மட்பாண்ட் ஜாடிகள்

    7.

    நிரப்புதல் மற்றும் காற்று புகாதவாறு அடைத்தல்

    குவளை அல்லது பொனல் 
    அடைப்பு இயந்திரம்
    தராசு

    8.

    புகையிடுதல், களன் அல்லது கெண்டி பதனிடுதல்

    1. அடுக்குகள் கொண்ட தொட்டி / புகை பெட்டி
    2. இரட்டை மாலுமி அடுக்கிடைக்கோடு இயந்திரம்
    3. பிரஷர் குக்கர் / தொற்றுநீக்க கருவிகள் 
    4. இன்குபேட்டர் / டெஸ்டர்
    5. நுண்ணுயிரி வளர்ச்சிதடை செய்யும் கருவி

    9.

    கரியாக்குதல் அல்லது காற்றோட்டம் ஏற்படுத்துதல்

    மின்சார காற்றோற்ற கருவிகள் மற்றும் காற்று புகாமல் அடைக்கும் கருவி

    குறிப்பு: இவை அனைத்து சிறு மற்றும் பெறு தொழில்சாலைகளுக்கு மட்டுமே

 

 

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015