நண்டுகள் நீர்வாழ் மேலோடுள்ள கணுக்காலி குழுமத்தைஸ் சேர்ந்த்தவையாகும். இவற்றை கடினமான மேலோடுகள் மற்றும் பத்து கால்களைக் கொண்டு அடையாளப்படுத்தலாம். இவை தோலுரித்தல் மூலம் வளர்கின்றன. தோலுரிக்கும் போது கடினமான மேலோட்டை துறந்து நிறைய நீரை உட்கொண்டு அளவில் பெரிதாகும். சிறிது காலத்திற்கு அவை மிருதுவான மேலோட்டையே கொண்டிருக்கும். நாள்பட அந்த ஓடுகள் அடுத்த தோலுரிப்பு நிகழ்முறை வரை கடினமாகும். சில உணவுத்துறை வல்லுநர்கள் மிருதுவான ஓடுடைய நண்டுகளையே பரிமாற விரும்புகின்றனர், ஏனெனில் அவை சதைப்பற்றுடன் இருப்பதோடு சுவைமிகுந்ததாகவும் உள்ளது. உலகளவில் உட்கொள்ளப்படும் கடல் வாழ் உயிரினங்களில் நண்டு 20% ஆகும். இது வருடத்திற்கு 1.5 மில்லியன் டன் ஆகும்.
நண்டில் ஊட்டச்சத்தின் அளவு: |
|