கடல் உணவுகள் :: இறால்கள்
பாதுகாப்பு மற்றும் சேமிப்பு முறை :: இறால்கள

இறால்களை கையாளுதல்:
கடலில் பிடித்த இறால்களை தனியாக பிரித்து அல்லது சிறந்தவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும். இறந்த அல்லது அடிபட்ட இறால்கள், குப்பைகளை கை அல்லது சல்லடை கொண்டு அகற்றவும். மண் அல்லது சேறு கலந்திருந்தால் அவற்றை விரைவாக நீக்கவும், இல்லையெனில் நுண்ணுயிரிகளால் நோய் தொற்று ஏற்படலாம். இறால்களை முடிந்தவை வடித்து வைக்க வேண்டும்.

தரம் பிரித்தல்:
சேதமடையாத இறால்கள் பெரிதான அளவில் உள்ளவற்றை பிரித்தெடுக்கவும் ஏனெனில் பெரிய இறால்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும். உறைய செய்தல்: இறால்களை சர்க்கரை மற்றும் உப்பு கலந்த கலவை கொண்டு அல்லது குளிர்ந்த் காற்று முறை அல்லது. தட்டு முறை கொண்டு உறைய செய்யலாம். சர்க்கரை மற்றும் உப்பு கலவை கொண்டு செய்வது சிறந்ததாக கருதப்படுகின்றன. ஏனெனில் அவை இறால்களுக்கு நல்ல பளபளப்பு பூச்சு மற்று, உறைமீன் பிரித்தலை எளிதாக்குகிறது.

உருகவைத்தல்:
தனியாக உறைந்த இறால்களின் ஒரு சில நிமிடங்களில் உருகவைக்கலாம்.

தரம் பிரித்தல்:
சேதமடையாத இறால்கள் பெரிதான அளவில் உள்ளவற்றை பிரித்தெடுக்கவும் ஏனெனில் பெரிய இறால்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும்.

சமையல்:
பிடித்து சிறிது நேரத்தில் இறால்ளை சமைக்கும் போது சிறந்த சுவை, மனம் மற்றும் வண்ணத்தை தக்கவைக்க முடியும். உரித்தல்: உருகவைத்த இறால்களை எளிதாக உரிக்கமுடியும்.

குளிர்வித்தல்:
உணவை நச்சாக்கும் நுண்ணுயிரிகள் சமைத்த இறால்களில் விரைவாக வளரக்கூடும், ஆகையால் அவற்றை விரைவாக்க வேண்டும்.

குளிர்பதன சேமிப்பு:
உறைவிக்கப்பட்ட சமைத்த இறால்கள் - 30 செல்சியசில் நேர்த்தியாக பொதி செய்து சேமித்தால் 6 மாதங்கள் வரை நன்றாக இருக்கும்.

கலனில் அடைத்தல்:
இறால்களை கலன்களில் அடைத்து 6 மாதம் முதல் 1 வருடம் வரை சேமிக்கலாம்.

புகையூட்டப்பட்ட இறால்கள்:
இறால்களில் குளிர்ந்த புகையூட்டப்பட்ட உணவுகளை சமைக்கலாம். உரிக்கப்படாத தலை மட்டும் நீக்கப்பட்ட்ட இறால் அல்லது உரிக்கப்பட்ட இறால் இறைச்சியை 10% உப்புத்தண்ணீரில் 3 நிமிடத்திற்கு கொதிக்கவைக்க வேண்டும். பின்னர் 2 மணி நேரத்திற்கு நீர் வடிகட்டியபின் எண்ணெய் தடவிய சல்லடைத்தட்டுகளில் பரப்பு 30 செல்சியசில் 1 மணி 30 நிமிடத்திற்கு புகையூட்ட வேண்டும்.

பொதிக்கப்பட்ட இறால்கள்:
உருகவைத்தை வெண்ணெய்யில் சமைத்த உரிக்கப்பட்ட இறால் இறைச்சிகளை நறுமணப் பொருட்களை சேர்த்து சமைத்து அடைகலங்களில் இட வேண்டும். வெண்ணெய் உறைந்த பின் நன்றாக மூடி மெழுகு பூசப்பட்ட அட்டை பெட்டிகளில் வைத்து காற்றுப்புகாதவாறு அடைக்க வேண்டும். இவை விரைவில் கெடுவதால் ஓரிரு நாட்களில் விற்பனை செய்ய வேண்டும்.

இறால்களிலிருந்து செய்யப்படும் மற்றும் பொருட்கள்:
இறால் இறைச்சி பல்வேறு வகையான கடல் உணவுகளை செய்யப் பயன்படுகிறது. இறைச்சி கூழ், மொறுவல், சூப், சாஸ் போன்றவற்றில் இறால் இறைச்சி சேர்க்கப்பட்டு உறைவிக்கப்பட்டு நீண்ட நாட்களுக்கு உபயோகப்படுத்தப்படும்.

இறால் கழிவுகள்:
உணவு இறால் கழிவுகளான தலை மற்றும் ஓடுகள் இறால் பொடி செய்யப் பயன்படுகிறது. இவற்றில் 40 - 45 சதவீத புரதச்சத்துள்ளது. சைட்டின் மற்றும் சைடோசன் இறால்களிலிருந்து பெறப்படுகின்றது. குளுகோசமைன் ஹைடிரோ குளோரைட் இறால் ஓடுகளிலிருந்து பெறப்படுகின்றது. சமைத்து பொடியாகப்பட்ட இறால்கள் கோழி உணவாகக் கொடுக்கப்படுகின்றது.

ஆதாரம்:

http://www.fao.org/fishery/culturedspecies/Penaeus_monodon/en
http://www.fao.org/docrep/field/003/ab915e/ab915e00.htm
 
  முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015