தோட்டக்கலைப்பயிர்கள் :: தக்காளி்

தக்காளி

  1. தக்காளி பேஸ்ட்
  2. தக்காளி சாஸ் / கெட்சப்
  3. தக்காளி சட்னி
  4. தக்காளி சூப் மிக்ஸ்
1. தக்காளி பேஸ்ட்

தக்காளி பேஸ்ட் செய்தல் அட்டவனை

தக்காளிப் பழச்சாறு (வடிகட்டியது) 

பதமாகும் வரை சமைக்கவும் (அகலமான பாத்திரம் மூலம்) 

பூரி அல்லது பேஸ்ட்டின் முடிவு நிலையை ஆராய்தல் (கை ஒளி விலகல் அளவியைக் கொண்டு தக்காளி தின்மத்தை அளக்க வேண்டும் (அல்லது) அளவு கோலை வைத்து அளவு குறைவதை அளக்க வேண்டும்.) 

சூடாகவே புட்டியில் (அ) குவளையில் அடைக்கவும் (82 – 88 0 செ) 

நுண்ணூட்ட வளர்ச்சியைத் தடை செய்ய 20 நிமிடங்கள் கொதிக்கும் தண்ணீரில் வைக்கவும் 

குளிர வைக்கவும் 

சூழல் வெப்பநிலையில் சேமித்து வைக்க வேண்டும் 

மூட்டைகட்டி சேமிக்கவும் 

சந்தைப்படுத்துதல்

2. தக்காளி சாஸ் / கெட்சப்

இதனை வடிகட்டிய தக்காளி பழச்சாறு (அ) பழக்கூழ் மற்றும் நறுமணப்பொருட்கள், உப்பு, சர்க்கரை மற்றும் விநீகர், வெங்காயம் மற்றும் பூண்டு (சேர்த்தோ, சேர்க்காமலோ) 12 % தக்காளி தின்மம் இவைகளை வைத்து தயாரிக்கப்படுகிறது.

தக்காளி சாஸ் / கெட்சப் தயாரிக்கும் அட்டவனை:

தக்காளிகள் (முழுவதும் பழுத்த, சிவப்பான) 

கழுவி , பிரித்தல் 

வெட்டி நறுக்கவும் 

வேக வைக்கவும் 70 – 90 0 செல்சியஸில் 3 – 5 நிமிடங்கள் (மிருதுவாகும் வரை) 

வடிகட்டிய தக்காளி பழக்கூழ் / பழச்சாறு பழக்கூழ் எடுத்தல்

கால் பங்கு அளவு சர்க்கரையை பழக்கூழுடன் சேர்த்து சமைக்கவும் 

நறுமணப் பொருட்கள் உள்ள பையை போடவும் 

மூன்றில் ஒரு பங்கு கொள்ளளவு பழக்கூழ் / பழச்சாறை சமைக்கவும் 

நறுமணப் பொருட்கள் நிறைந்த பையை அகற்றவும் (பழக்கூழுடன் நன்றாகக் கலந்த பின்) 

மீதமுள்ள சர்க்கரை மற்றும் உப்பை சேர்த்து சமைக்கவும் 

முடிவு நிலையை ஆராய்தல் (கை ஒளி விலகல் அளவியைக் கொண்டு தக்காளி தின்மத்தை அளக்க வேண்டும் (அல்லது) அளவு கோலை வைத்து அளவு குறைவதை அளக்க வேண்டும்.) 

விநீகர் / அசிடிக் அமிலம் மற்றும் பதனச்சரக்கை சேர்க்கவும் 

புட்டியில் நிரப்பி குளிர வைக்கவும் 

நுண்ணூட்ட வளர்ச்சியைத் தடை செய்ய 20 நிமிடங்கள் கொதிக்கும் தண்ணீரில் வைக்கவும் 

Crown Corking 

சூழல் வெப்பநிலையில் சேமித்து வைக்க வேண்டும் (குளிர்வான, வறன்ட இடத்தில்)

3. தக்காளி சட்னி
தக்காளி சட்னியை பதப்படுத்துதல் அட்டவனை:

தக்காளிகள் (முழுவதும் பழுத்த, சிவப்பான) 

கழுவுதல் 

பிரித்தெடுத்தல் 

2 நிமிடங்கள் நிறம் நீக்கியில் வைக்க வேண்டும் 

உடனடியாக குளிர்ந்த நீரில் போடவும் (தோல்கள் வெடிப்பு விட) 

தோல் உறித்தல் 

பிழியவும் 

தேவையான பொருட்களை (உப்பு மற்றும் விநிகரைத் தவிர) சேர்த்து சரியான பக்குவம் வரும் வரை சமைக்கவும் 

உப்பு மற்றும் விநிகரை சேர்த்து 5 நிமிடங்கள் சமைக்கவும் 

பதனச் சரக்கை சேர்க்கவும் 

சூடாக புட்டியில் அடைக்கவும் 

முத்திரையிடுதல் 

சூழல் வெப்பநிலையில் சேமிக்கவும் (குளிர்ந்த, உலர்வான பகுதியில்) 

சந்தைப்படுத்துதல்

4. தக்காளி சூப் மிக்ஸ்

தக்காளிப் பொடியை தயாரிக்கும் முறை:

முழுவதுமாக பழுத்த கெட்டியான தக்காளிப் பழங்களை  குழாயில் ஓடும் தண்ணீரில் நன்றாகக் கழுவவும். பின் இதனை சிறு துண்டுகளாக வெட்டி தனி அறை உலர்த்தியில் 80 0 செல்சியஸில் 10 மணி நேரம் உலர்த்த வேண்டும். நீர் நீக்கம் செய்யப்பட்ட துண்டுகளை மின் அம்மியில் அரைத்து பொடியாக்க வேண்டும்.

தக்காளி சூப் மிக்ஸ் தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள் அளவு
தக்காளிப் பொடி 5.0 கிராம்
வெங்காயப் பொடி 0.5 கிராம்
சோள மாவு 2.0 கிராம்
சீரகத் தூள் 0.5 கிராம்
மிளகுத் தூள் 0.3 கிராம்
உப்பு 1.5 கிராம்
அஜினமோட்டோ 0.5 கிராம்

செய்முறை:
அனைத்து தேவையான பொருட்களை நன்கு கலக்கி பாலித்தீன் பைகளில் மூட்டை கட்ட வேண்டும்.

வெங்காயப் பொடியை தயாரிக்கும் முறை:
நோயில்லாத பெரிய வெங்காயத்தை தேர்வு செய்து தோலை உறிக்கவும். பின் இதனை குழாயில் ஓடும் நீரில் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கவும். இதனை தனி அறை உலர்த்தியில் 60 0 செ 7 மணி நேரம் வரை வைத்து உலர்த்த வேண்டும். நீர் நீக்கம் செய்யப்பட்ட செதில்களை அரைத்து பொடியாக்கி பாலித்தீன் பைகளில் மூட்டை கட்டவும்.

            10 கிராம் செய்து வைத்திருந்த தக்காளி சூப் மிக்ஸை 150 மில்லி கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து நன்கு கிளறவும்.

தொழில் நுட்பங்கள்

* - அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் 
பல்கலைக் கழகம், கோவை.

** - ஹோம் சயின்ஸ் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், மதுரை.

 

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015