மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் உலகளாவில் தொடர்பு மற்றும் உள்ளூர் தொழிற்சாலைகளின் ஆதரவினால் மனிதவள மேம்பாட்டில் முக்கிய அங்கம் வகிக்கிறது. சுமார் இத்துறையில் 300 உயிரிய வல்லுனர்கள் பணியாற்றுகின்றனர். உலகளவில் பலவிதமான பயிற்சி நிகழ்ச்சியை பெற்றவர்கள் பல முன்னனி உணவு தொழிற்சாலைகளிலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் முக்கிய பொறுப்பு வகிக்கின்றனர்.
மனிதவள மேம்பாட்டு நிகழ்ச்சியின் முக்கியத்துவங்கள்:
அ. இது எம்.எஸ்.சி (உணவு தொழில்நுட்பம்) 4 பருவ பாட நிகழ்ச்சியை இந்திய மற்றும் வளர்ந்து வரும் நாட்டில் உள்ளவர்களுக்கு பயில்விப்பது
ஆ. மைசூர் பல்கலைக்கழகம் எம்.எஸ்.சி (ஊட்டவியல்) என்ற முதுநிலை படிப்பை பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கும் வழங்குகின்றனர்.
இ. முனைவர் படிப்பு மற்றும் மேல் முனைவர் படிப்புகளை பல வகை இந்திய பல்கலைக்கத்திலிருந்து பயில முன் வருகின்றனர். தற்பொழுது சுமார் 100 ஆராய்ச்சியாளர்கள் முனைவர் படிப்பு பயில்கின்றனர்.
ஈ. இந்திய மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள நபர்களுக்கு மாவு அரைவை தொழில்நுட்பம் பற்றி பயிற்சியை சுமார் 1 வருட காலம் வழங்குகின்றனர்.
உ. குறுகிய கால நவீன தொழில்நுட்ப பயிற்சி நிகழ்ச்சியை உணவு தொழிற்சாலை மற்றும் அரசு முகாமில் பணிபுரிபவர்களின் செயல் திறன் மற்றும் அறிவுகளை மேலும் விரிவுப்படுத்த வழங்குகின்றனர்
ஊ. நவீன உணவு தொழில்நுட்பம் பற்றிய நிகழ்ச்சியை வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஐக்கிய நாடு பல்கலைக்கழக உதவியுடன் வழங்குகிறது
எ. 50 நாடுகளில் (இந்தியாவை தவிர) சுமார் 4000 நபர்களுக்கு (665 வெளிநாட்டவர் உள்பட) பயிற்சி நிகழ்ச்சி வழங்கப்படுகிறது.
ஏ. அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி செயலகம் மற்றும் உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையங்கள் இப்படிப்புக்கான உதவித்தொகையை வழங்குகின்றனர்.
ஐ. பயிற்றுனர்களுக்கும் பயிற்சி அளிக்கின்றனர்
ஒ. பணிமனைக்கூட்டம், கருத்தரங்கு, மாநாடுகளை தேசிய மற்றும் சர்வதேச அளவில் வழங்குகின்றனர்.
ஓ. பயிற்சி நிகழ்ச்சியை எளிய முறையில் அனைவரும் அறிய ஆங்கில மற்றும் தமிழக மொழியில் வெளியிடுகின்றனர்
மேலும் விவரங்களுக்கு பின்வரும் இணையதளத்தை பார்க்க http://www.cftri.com.
|