அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்
1. இன்றைய தேதியில் உள்ள மல்பெரி உற்பத்தி பகுதி எவ்வளவு?
41,624 ஏக்கர் / 30000 விவிசாயிகள் (18.02.2014 நிலவரப்படி)
2. அதிக அளவு உற்பத்தி தரும் மல்பெரி இலையின் வகைகள் யாவை?
V1, MR2 மற்றும் S series
இலை உற்பத்தி : மரபு சார்ந்த வகை (M5) – 12 மெட்ரிக் டன் / ஏக்கர் மேம்படுத்தப்பட்ட வகை (V1) – 24 மெட்ரிக் டன் / ஏக்கர்
3. பட்டுப்பூச்சி வளர்ப்பு பயிற்சிக்கு தேவைப்படும் முதலீடு எவ்வளவு ?
ஒரு ஏக்கரில் மல்பெரி தாவர வளர்ப்புக்கு கூடாரம் அமைக்க தேவையான கருவிகள் மற்றும் பல ரூ.80,000 முதல் ரூ 1,00,000 வரை தேவைப்படும்.
4. ஒரு வருடத்தில் ஒரு ஏக்கரில் எத்தனை அடுக்குகளில் எத்தனை முறை பட்டுப்பூச்சி வளர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது?
800-1200 அடுக்குகள் /ஒரு ஏக்கர் / ஒரு வருடம்
5. பட்டுப்பூச்சி வளர்ப்பில் எதிர் பார்க்கப்படும் நிகர வருமானம் எவ்வளவு?
ஒரு வருடத்திற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.60,000 – 75,000 (சராசரியாக ரூ.50,000 / ஒரு வருடம் / ஒரு ஏக்கர்.
6. தமிழ்நாட்டில் எத்தனை தொழில்நுட்ப பயிற்சி மையங்கள் உள்ளன?
102 தொழில்நுட்ப பயிற்சி மையம் + 3 விதை தொழில்நுட்ப பயிற்சி மையம்.
7. தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை பட்டுப்பூச்சி விற்பனை மையம் உள்ளது?
அவைகள் முறையே மாநில அரசுக்கு சொந்தமானது 11 + மத்திய அரசுக்கு சொந்தமானது 2 + தனியார் பட்டுப்பூச்சி விற்பனை மையம் 11 என்ற அளவில் தமிழ்நாட்டில் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. (உற்பத்தி : மொத்தம் – 130 லட்சம் அதில் அரசாங்கம் 60 லட்சம் / ஒரு வருடம்)
8. தமிழ்நாட்டில் எத்தனை பட்டுக்கூடு சந்தை உள்ளது?
17 பட்டுக்கூடு சந்தை உள்ளது
9. தமிழ்நாட்டில் நடமாடும் பட்டுக்கூடு சந்தை எத்தனை உள்ளது?
5 (சத்தியமங்களம், காங்கேயம், உடுமலைப்பேட்டை, பழனி, வேப்பனப்பள்ளி)
10. தமிழ்நாட்டில் செயல்படும் பட்டு நூற்பு ஆலைகள் எத்தனை?
சர்க்கா |
79 அமைப்புகள் (233 பகுதிகள்) |
பட்டுநூற்பு இயந்திரம் |
162 அமைப்புகள் + 50 அமைப்புகள் (1044 பகுதிகள்) + 250 |
பலமுனை நூற்பு |
32 அமைப்புகள் (239 பகுதிகள்) |
மொத்தம் |
237 அமைப்புகள் + 50 அமைப்புகள் (1516 பகுதிகள் ) + 250 = 1766 பகுதிகள் |
தானியங்கி நூற்பு அமைப்பு மற்றும் ஒரு பட்டுக்கூடு சந்தையும் நிறுவப்பட உள்ளது.
தானியங்கி நூற்பு அமைப்பு:
400 முடிவுகள் (140 கிராம் பட்டு / முடிவுகள் / நேரம் ) 112 கி.கி
பட்டு / நாள் 2 நேரத்திற்கு 34 மெட்ரிக் டன் ஒரு வருடத்திற்கு (300 நாள்கள்) @ 7:1 ரென்டீட்டா 238 (04) 240 மெட்ரிக்டன் பட்டுக்கூடு ஒரு அலகிற்கு
11. தமிழ்நாட்டில் பட்டுக்கூட்டிற்கான செயல்பாடுகள் எத்தனை சதவீதம்?
40-45% பட்டுக்கூடு மொத்த உற்பத்தியில் தமிழ்நாட்டில் நுகரப்படுகிறது.
12. தமிழ்நாட்டில் மூலப்பட்டிற்கான தேவை எவ்வளவு?
1375 மெட்ரிக் டன் ஒரு வருடத்திற்கு
13. தமிழ் நாட்டில் உற்பத்தியாகும் பட்டின் அளவு என்ன?
ஒரு வருடத்திற்கு சராசரியாக 1000 முதல் 1100 மெட்ரிக் டன்.
14. தமிழ் நாட்டில் இருசந்ததி பட்டு எந்தளவிற்கு உற்பத்தி செய்யப்படுகிறது?
250 -300 மெட்ரிக் டன் ஒரு வருடத்திற்கு.
இந்தியாவில் அதிக அளவு உற்பத்தி (மொத்த பட்டு உற்பத்தியில் 25%)
15. பட்டுப்புழு வளர்ப்பில் எதிர்பார்க்கப்படும் பட்டுக்கூடு எவ்வளவு?
ஒரு அடுக்கிற்கு சராசரியாக 60 முதல் 70 கிலோ வரை.
16. ஒரு வருடத்தில் எந்தளவிற்கு வளர்க்கப்படுகிறது?
சராசரியாக 5-6 பயிர்கள் ஒரு வருடத்திற்கு
17. காஞ்சிபுரத்திலுள்ள அண்ணா பட்டு மாற்றகத்திற்கு எவ்வளவு பட்டு பரிமாற்றம் செய்யப்படுகிறது?
14-15 மெட்ரிக் டன் ஒரு மாதத்திற்கு (150 மெட்ரிக் டன்) 14% மொத்த உற்பத்தியில்.
18. காஞ்சிபுரத்திலுள்ள டான் சில்க் நிறுவனத்திற்கு எவ்வளவு பட்டு பரிமாற்றம் செய்யப்படுகிறது?
30-35 மெட்ரிக் டன் ஒரு மாதத்திற்கு (400 மெட்ரிக் டன்/ ஒரு வருடத்திற்கு)
19. தமிழ் நாட்டில் எங்கெங்கு பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது?
காஞ்சிபுரம், ஆரணி, கும்பகோணம், சேலம் மற்றும் கோயமுத்தூர்.
20. பட்டுப்பூச்சி வளர்ப்பின் மூலம் எத்தனை நபர்கள் வேலைவாய்ப்பை பெறுகிறார்கள்?
5 நபர்கள் ஒரு ஏக்கருக்கு ஒரு வருடத்திற்கு.
21. அரசால் வழங்கப்படும் பட்டுபூச்சி வளர்ப்பு பயிற்சி விவசாயிகளுக்கு எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது? பட்டுபூச்சி வளர்ப்பு பயிற்சி நிறுவனம், ஒசூர், கீழ்கண்ட முக்கயத்துவம் வாய்ந்த பட்டுபூச்சி வளர்ப்பு பயிற்சியை விவசாயிகளுக்கு வழங்குகிறது.
- உள்ளூர் விதை வளர்ப்பு பயிற்சி
- இருசந்ததி விதை வளர்ப்பு பயிற்சி
- இளம் புழுக்கள் வளர்ப்பு பயிற்சி
- பல்வேறு திட்டங்களின் கீழ் விவசாயிகளின் பயிற்சி
- ஒரு நாள் செறிவூட்டப்பட்ட பயிற்சி
22. தமிழ்நாட்டில் இளம் பட்டுபுழு வளர்ப்பு மையங்கள் எத்தனை உள்ளன?
25 இளம்பட்டு புழு வளர்ப்பு மையங்கள் செயல்படுகின்றன.
23. பட்டுபூச்சி வளர்ப்பு என்றால் என்ன?
பட்டுபூச்சி வளர்ப்பு என்பது முசுக்கொட்டை மற்றும் பட்டுபுழு வளர்ப்பு, வேளாண் சார்ந்த குடிசைத் தொழில் ஆகும்.
24. முசுக்கொட்டை பட்டுபூச்சி வளர்ப்பு என்றால் என்ன?
முசுக்கொட்டை பட்டுபூச்சி வளர்ப்பு 2 நிலைகளில் நடைபெறுகிறது.
1. முசுகொட்டை தாவர சாகுபடி
2. பட்டு புழு வளர்ப்பு
25. எந்த வகையான நிலம் முசுக்கொட்டை சாகுபடிக்கு ஏற்றது?
மணற்பாங்கான அல்லது செம்மண் முசுக்கொட்டை சாகுபடிக்கு ஏற்றது.
26. பட்டு புழு வளர்க்க எங்கிருந்து பட்டுபுழுவை பெறலாம்?
இளம் பட்டு புழுவை விவசாயிகள் மாவட்ட அளவில் செயல்படும் முசுக்கொட்டை வளர்ப்பு கூட்டுறவு அமைப்பிடமிருந்து பெறலாம்.
27. விவசாயிகளுக்கு தொழில்நுட்ப அறிவுரைகளை யார் வழங்குகிறார்கள்?
விவசாயிகளுக்கு பட்டுபூச்சி வளர்ப்பு சம்மந்தமாக தொழில்நுட்ப அறிவுரைகளை பட்டுபூச்சி வளர்ப்பு விரிவாக்க அலுவலர்கள் வழங்குகிறார்கள்.
28. வளர்க்கப்பட்ட பட்டுகூட்டை யாரிடம் விற்பனை செய்யலாம்?
முசுக்கொட்டை வளாப்பு கூட்டுறவு அமைப்பானது நேரிடையாக விவசாயிகளிடமிருந்து பட்டுக்கூட்டை கொள்முதல் செய்கிறது. உடனடியாக பணமும் செலுத்துகிறது.
29. பட்டுபூச்சி வளர்ப்பு சம்மந்தமான தகவல்களை நாம் எங்கு பெறலாம்?
வட்டார அளவில் உள்ள பட்டுபூச்சி வளர்ப்பு விரிவாக்க அலுவலர் மற்றும் மாவட்ட அளவில் உள்ள பட்டுபூச்சி வளர்ப்பு துணை இயக்குனரிடம் பெறலாம்.
வழிமுறைகள்:
www.tnsericulture.gov.in
http.//kendujhar.nic.in / faq/faq 12 htm. |