பட்டுவளர்ப்பு - கழிவை உரமாக பயன்படுத்துதல்
முக்கிய இணைப்புகள்

பட்டுப்புழு வளர்ப்பில் கிடைக்கும் கழிவை உரமாக பயன்படுத்துதல்
பொதுவாக பட்டப்புழு வளர்ப்பு பண்ணைகளில், வளர்ப்பு படுக்கைகளில் மீதியாகும் மல்பெரி இலைகள் மற்றும் இதர கழிவுகள், பட்டுப்பூச்சியின் கழிவு இவற்றை சரியாக பயன்படுத்தி உயர் மதிப்புள்ள உரங்களை தயாரிப்பது இல்லை. எனவே பொருத்தமான தொழில்நுட்பத்தை பின்பற்றி பட்டுப்புழு வளர்ப்பு பண்ணையின் கழிவுகளை மதிப்பு மிக்க உரமாக மாற்றலாம்.
செய்முறை :
ஒரு ஏக்கருக்கு பண்ணை கழிவுகளை  சேகரிக்க 3x1x1 மீ  என்ற அளவுகளில் இரண்டு குழிகள் போதுமானது.
பட்டுப்புழு கழிவு, படுக்கையில் மீதியாகும் இலைகள், களைகள் இவற்றை ஒவ்வொரு நாளும் ஒரு மெல்லிய படுகையாக சேகரிக்க வேண்டும். அப்படுக்கையின் மீது புது மாட்டு சாணம், சாம்பல் மற்றும் நீர்  தெளிக்க வேண்டும்.
வளர்ப்பு முடிவில், தோட்டத்தில்  மீதியாகும் இலைகள், இளம் மல்பெரி கிளைகள் இவற்றையும் உர குழியில் சேர்க்க வேண்டும்.
12 -15 டன்  ஒரு ஹெக்டரிலிருந்து பட்டுப்புழு வளர்ப்பு கழிவாக மல்பெரி  உருவாக்கப்படும். இதில் 280-300 கிலோ நைட்ரஜன், 90 கிலோ பாஸ்பரஸ் மற்றும் 750 கிலோ பொட்டாசியம் உள்ளது.
சூப்பர் பாஸ்பேட்டும் உரத்தை வளப்படுத்துவதற்காக சோக்கப்படுகிறது. குழி நிறைந்து தரைமட்டத்திலிருந்து 30-40 செ.மீ  உயரம் வரும் பொழுது மாட்டு சாணம் மற்றும் மண்ணை 2.5 செ.மீ அளவிற்கு ஒரு அடுக்காக உருவாக்க வேண்டும்.  குழி நேரடி சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க வேண்டும். உரத்தை மட்க செய்வதற்கு அஸ்பார்ஜில்லஸ் எஸ்பி, டிரைக்கோடெர்மா எஸ்பி, மற்றும் பேலோரோமைசிஸ் என்ற பூஞ்சாண கொல்லி கலவையை 1 கிலோ/டன் என்ற அளவில் பட்டுப்புழு வளர்ப்பு  பண்ணை  இயற்கை கழிவுடன் சேர்க்க வேண்டும்.
காற்று மற்றும் காற்றில்லா முறையில் ஒரு ஹெக்டர் பட்டுப்புழு வளர்ப்பு பண்ணையிலிருந்து  தோராயமாக 10 -15 டன்  நன்கு மட்கிய ஊட்டச்சத்து  நிறைந்த உரம் ஒவ்வொரு வருடமும் உருவாக்கலாம். இந்த உரத்தில் தோராயமாக 30% ஈரப்பதம், 2.0-2.24% தழைசத்து, 93-1.0% மணிசத்து மற்றும் 1.5-1.8% நுண்ணூட்ட துத்தநாகம், இரும்பு, மாங்கனீசு மற்றும் தாமிரம் கலந்த நுண்ணூட்ட உரமாக இருக்கும். இந்த உரம் பண்ணை எருவுடன் ஒப்பிடும் பொழுது உயாந்திருப்பது கண்டிறியப்பட்டுள்ளதுஇதில் 0.3-0.4 தழை சத்து, 0.2-0.4% மணிசத்து, 0.3-0.6% சாம்பல்சத்து உள்ளது.
பட்டுபுழு வளர்ப்பு கழிவு பொருட்களை பயன்படுத்தி மண்புழு உரம் தயாரித்தல் :

  • ஒரு ஹெக்டரில் தோராயமாக  7.5x6.0 மீட்டர் பரப்பில் சற்று உயரமான கூரை வேய்ந்த கொட்டகையில்  மல்பெரி பண்ணை ஏற்படுத்த வேண்டும். கற்களால் வரப்பு ஏற்படுத்தி பாதுகாக்க வேண்டும்.
  • 2.4x0.6x.0.45 மீட்டர் அளவுகளில்  8 சால் அகழியை 2 வரிசைக்கு 4 என்ற வீதத்தில் இணையாக அமைக்க வேண்டும். கொட்டகையில் மண்புழுக்கள் நுழைவதை தவிர்க்க உள் பக்கத்தில் கீழே மற்றும் பக்க சுவர்களை பாலித்தீன் தாள் அல்லது கல் வரிசை கொண்டு தடுக்க வேண்டும். சால் அகழி ஆழம் 0.45 மீ மேல் இருக்க கூடாது.
  • ஒரு டன் களைகள், பட்டுபுழு வளர்ப்பு கழிவு, இவற்றுடன் சாண கரைசல் இவற்றுடன் 100 லிட்டர் தண்ணீர் கலக்கி வைக்க  வேண்டும். இந்தக் கலவையை 7 -10 நாட்கள் கழித்து பார்க்கும் போது பாதி மட்கிய நிலையிலிருக்கும். மட்குவதற்கு இவற்றில் 30-40 சதவீத அளவு ஈரப்பதம் இருக்க வேண்டும். மட்கும் போது  பாதியளவு மட்கிய கலவையின் வெப்பநிலை 50-60 செ உயரும். எனவே, இக்கலவையை கீழிருந்து மேலாக ஒன்று அல்லது இரண்டு முறை கலப்பதால் சாதாரண வெப்பநிலையிலிருக்கும்.
  • 30-40% சதவீதம் ஈரப்பதம் கொண்ட பாதியளவு மட்கிய நிலையிலிருக்கும் பட்டுப்புழு வளர்ப்பு கழிவு ஒவ்வொரு குழியிலும் 200 -300 கி அளவு நிரம்பியிருக்கும்.
  • மண்புழுவானது 30-40 சதவீத ஈரபதம் மற்றும் சாதாரண தட்பவெப்ப நிலையில் உணவை உட்கொள்கிறது. கழிவு பொருட்கள் மட்கும் நேரங்களில் தட்பவெப்ப நிலை 50º செல்சியஸ் அதிகரிப்பதினால் மண்புழு இறந்துவிடும் சூழல் ஏற்படும். ஆகையால் இது உயிர் வாழ்வதற்கு ஏற்ப ஈரப்பதம் மட்டும் தட்பவெப்பநிலையை கட்டுப்படுத்த வேண்டும்.
  • மண்புழுக்கள் வெளிவந்த 2-3 நாட்களுக்கு பிறகு, ஈரப்பதத்தை பாதுகாப்பாகப்பதற்காக  தொடர்ந்து தண்ணீரை தெளித்து தென்னை ஓலை அல்லது எந்த பச்சை இலைகளையும் கொண்டு மூடுவதால் ஆவியாவது தவிர்க்கப்படுகிறது. சரியான முறையில் அனைத்தும் மட்குவதற்காக வாரம் ஒரு முறை கீழிருந்து மேலாக கலக்க வேண்டும்.
  • மண்புழுவானது 6 லிருந்து 7 வாரங்களில் கரும்பழுப்பு நிறத்தில் குருணை வடிவ கழிவுகளை உருவாக்குகிறது. இதனை சல்லடை உதவியுடன் சேகரிக்க வேண்டும்.
  • மண்புழு உரம் பழுப்பு மற்றும் கருப்பு துகள்களாக மாறிய பின்னர் அவற்றை சேகரித்து உரமாக பயன்படுத்தப்படுகிறது. ஈரப்பதம் இல்லாமல் இருப்பது நல்ல பலனை தரும். சில நேரங்களில் கொட்டகையின் உள்ளே சிறிது நேரம் உலர்த்தி பின்னர் எடுத்து வைக்கவும்.
  • சிறந்த முறையில் மண்புழுக்கள் உருவாவதற்கு கொட்டகை ஈரப்பதம் மற்றும் குளிர்ந்த சூழ்நிலையிலும் இருண்டும் இருக்க வேண்டும். ஏனென்றால் மண்புழுக்கள் வெளிச்சத்தை விரும்புவதில்லை.
  • தயார்நிலையிலிருக்கும் மண்புழு உரத்தை பயிர் விளைச்சலுக்கு காலம் தாழ்தாமல் உபயோகிப்பதன் மூலம் நல்ல பலன் அடைய முடியும்.

இராசயன மண்புழு உரம் மற்றும் உயர்தர தொழுவுரம் இவற்றின் அடிப்படையில் தரமான மல்பெரிக்கான பகுப்பாய்வு அட்டவணை  தரப்பட்டுள்ளது.


ஊட்டச்சத்து

மண்புழு உரம்

உயர்தர  தொழுவுரம்

தழைச்சத்து

1.875-2.0%

0.3-0.5%

மணிச்சத்து

0.6-.09%

0.2-0.4%

சாம்பல்ச்சத்து

1.0-1.5%

0.3-.6%

துத்தநாகம்

84.6பிபிஎம்

14.5பிபிஎம்

இரும்பு

1247 பிபிஎம்

1465பிபிஎம்

மாங்கனீசு

509.7பிபிஎம்

69.0பிபிஎம்

தாமிரம்

61.5பிபிஎம்

2.8பிபிஎம்

மல்பெரி இலை பகுப்பாய்வு

மல்பெரிக்கு அளிக்கும் உர வகை

தழைச்சத்து

மணிச்சத்து

சாம்பல்சத்து

மண்புழு உரம் @5.6MT /Ha/Yr

3.833

0.290

2.075

தொழுவுரம் @20MT/ha/yr

3.668

0.290

2.020

நன்மைகள்:
இது ஒரு சுற்றுபுறச் சூழல் தொடர்புடைய தொழில்நுட்பம் இதன் கழிவுகளை எளிதில் உரமாக மாற்ற முடியும். காற்றில்லா சூழலில் உரமாக மாறுவதற்கு 120- 150 நாட்கள் ஆகும். மண்புழு உரம் 50-60 நாட்களில் உரமாக தயாரிகிவிடும்.

   
 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024