தாவர படுக்கை மூலம் தொழிலக கழிவு நீரைச் சுத்திகரித்தல் |
முன்னுரை
- தொழிற்சாலைகளில் இருந்து அதிக அளவிலான கழிவு நீர் வெளியேற்றப்படகிறது.
- இக்கழிவு நீரில் அதிக அளவு கன உலோகங்கள் மற்றும் நச்சுத் தன்மையுடைய வேதி வினைப் பொருட்களும் கலந்துள்ளன.
- இக்கழிவு நீரை சரியான முறையில் அப்புறப்படுத்தாமையின் மூலம் மண் மற்றும் நீர் மாசுபாடு ஏற்படுகின்றது.
- தற்போதுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு முறைகள் மிகுந்த செலவுடையதாக உள்ளன.
- தாவர படுக்கை சுத்திகரிப்பு முறை சுற்றுச் சூழலுக்கு உகந்ததாகவும், குறைந்த செலவினை உடையதாகவும் உள்ளது.
தாவர படுக்கை முறை : இம்முறையில் தாவரங்கள் மற்றும் புவியியல் பொருட்களை ஒருங்கிணைத்து கழிவு நீரிலிருந்து நச்சு பொருட்கள் நீக்கப்படுகின்றன.
கோரை புற்கள்
- கன உலோகங்கள் மற்றும் உப்புக்களை உறிஞ்சுதல் மூலம் கழிவுநீரிலிருந்து இவற்றை நீக்குகின்றன.
- வேர் கசிவு வேதிப் பொருட்கள் மூலம் வேர் பகுதியில் உள்ள கன உலோகங்களை மண்ணில் முடக்கி விடுகின்றன.
ஆகாய தாமரை : நைட்ரேட் மற்றும் பாஸ்பேட் உப்புக்களை உறிஞ்சுதல் மூலம் கழிவு நீரிலிருந்து இவற்றை நீக்குகின்றன.
வெர்மிகுலைட்
- இது அதிக அளவு நேர்மின் அயனி பரிமாற்று திறனை உடைய சிலிகேட் தாதுப் பொருளாகும்.
- இதன் மூலம் அதிக அளவிலான உலோகங்களை ஒட்டுதல் மூலம் நீக்குகிறது.
நன்மைகள்
- கழிவு நீரிலிருந்து 90-100% கன உலோகங்களை நீக்குகிறது.
- வேதியியல் மற்றும் உயிரியல் ஆக்ஸிஜன் தேவையை குறைக்கிறது.(70-90%).
- கரைந்திருக்கும் திடப் பொருட்களை குறைக்கிறது (>90%)
- கழிவு நீரிலிருந்து நைட்ரேட் மற்றும் பாஸ்பேட்டை நீக்குகிறது (80 - 98%).
பயன்பாடுகள் : தோல் பதனிடும் தொழிற்சாலை, சாயத் தொழிற்சாலை மற்றும் காகித தொழிற்சாலை ஆகியவற்றின் கழிவுநீரை சுத்திகரிக்க பயன்படுத்தலாம்.
|