முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேபக வேளாண் இணைய தளம் :: வெற்றிக் கதைகள்

KVK வெற்றிக் கதைகள்

வெற்றிக் கதை – அமில நில நெற்பயிருக்கு டோலோமைட் இடுதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நெற்பயிர் 17000 எக்டா்  நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.  நெல் சாகுபடி செய்யும் இடங்களில்  50 முதல் 60 சதவீதம் மண் அமிலத் தன்மை வாய்ந்ததாக காணப்படுகிறது.  மண்ணில் கார அமில தன்மை குறைவதாகவும், தொடா்ச்சியாக, தண்ணீா் தேங்குவதாலும் இரும்பு நச்சுத்தன்மையும், ஊட்டச்சத்து குறைபாடும் காணப்படுகிறது.  இதனால் தானியங்கள் உருவாகுதல் பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

செயல்பாடு

முறை

அமில நிலத்திற்கான குறைந்த விலை  இடுபொருள் மற்றும் மண் பரிசோதனை மூலம் குறைபாடு உள்ள நுண்ணூட்டச் சத்தை அளிப்பது குறித்த பயிற்சிகள் மற்றும் செயல் விளக்கங்கள் நடத்தப்பட்டது. மேலும் முதல்நிலை செயல்விளக்கங்கள் பெருஞ்செல்வவிளை, ஆண்டார்குளம், வீராண மங்கலம்,  துவரங்காடு மற்றும் தாழக்குடி கிராமங்களில் நடத்தப்பட்டது.

தொழில்நுட்ப விபரங்கள்

அமில நில மேலாண்மைக்காக குறைந்த விலையில் கிடைக்கும் டோலோமைட்டை ஏக்கருக்கு 200 கிலோ என்ற அளவில கடைசி உழவில் இட்டு உழுதல்.  பின்னா் ஏக்கருக்கு 10 கிலோ சிங்க் சல்பேட்டை நெற்பயிருக்கு அடி உரமாக இடுதல்.

ஆய்வு விளக்கம்      

அமில நில நெற்பயிருக்கு டோலோமைட் இடுவது குறித்த முதல்நிலை செயல் விளக்கம் பல கிராமங்களில் 2008-09 முதல் நடத்தப்பட்டு அமில நிலத்தை சரிசெய்யும் திறன் குறித்து அறியப்பட்டது.  சுண்ணாம்பு மற்றும் மெக்னீசிய சத்து இந்த மண்களில் குறைபாடு உள்ளதால் இந்த இடுபொருள் இதற்கான ஆதாரமாக காணப்பட்டது.  நெற்பயிரில் ஒரு செடியில் எத்தனை மகசூல் கொடுக்கும் சிம்புகள் உள்ளன?  மற்றும் மகசூல் ஆகியன பதிவு செய்யப்பட்டன.

விளைவு

தொழில்நுட்பம் பரவுதல்

முதல் நிலை செயல் விளக்கம் மட்டுமல்லாது பயிற்சிகள் விளை நிலங்களை பார்வையிடுதல் மற்றும் இதர முறைகள் வாயிலாக விவசாயிகளுக்கு தொழில்நுட்பங்கள் அளிக்கப்பட்டன. நெல் விவசாயிகள் தன்னார்வ குழுக்களுக்கு, நெற்பயிர்கள் அதிகமுள்ள தோவாளை மற்றும் அகஸ்தீஸ்வரம் தாலுக்காக்களில் இத்தொழில்நுட்ப்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.  விரிவாக்க அலுவலா்களும், செயல் விளக்கம் மூலமாக இந்த தொழில் நுட்பத்தின் சிறப்பு தன்மையை அறிந்து கொண்டனா்.  விவசாயிகள் அரசாங்க மூலம் டோலோமைட்டை குறைந்த மானிய விலையில் கிடைக்கசெய்ய கேட்டுக்கொண்டனா்.  விவசாயிகள் இந்த டோலோமைட்டை வாங்கி தங்கள் அமில நிலத்திற்கு இட்டு வருகின்றனா்.  இந்த தொழில் நுட்பம் 2000 முதல் 3000  எக்டா் பரப்பளவில் பரவலாக விவசாயிகளினால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

வருமான உயா்வு

வ. எண் வருடம் மொத்த மகசூல் (டன்கள்∕எக்டா்) லாபம், செலவு விகிதம் மகசூல் அதிகரிப்பு (சதவீதம்)
டோலோமைட் இடாதது டோலோமைட் இட்டது டோலோமைட் இடாதது டோலோமைட் இட்டது
1 2007 –08 4.19 5.00 1.82 2.07 19.3
2 2009 –10 7.53 8.32 2.11 2.51 10.5
3 2010 – 11 5.61 7.24 2.05 2.59 29.1
4 2011 – 12 5.72 7.56 2.06 2.64 32.2
5 2012 – 13 6.10 7.21 2.14 2.48 18.2
6. 2013 –14 5.90 7.30 2.01 2.40 23.7

நெற்பயிருக்கு டோலோமைட் இடுவதால் மகசூல் அதிகரித்துள்ளது. ஒரு எக்டருக்கு 5.0 முதல்   7.3 டன்கள் வரை அதிகரித்துள்ளது (அட்டவணை). மகசூல் 10.5 முதல் 32.2 சதவீதம் உயா்ந்துள்ளது. டோலோமைட் இடுவதால் ரூ. 7000 முதல் 12,500 வரை எக்டருக்கு அதிக வருமானம் கிடைக்கிறது.  அதிக நிகரலாபம், மற்றும் மண்ணின் அமிலத் தன்மை மாறி மண் வளம் அதிகரித்தல்,  மேலும் மிக குறைந்த செலவாக எக்டருக்கு 1500 முதல் 2000 வரை மட்டுமே, ஆகின்றதால், விவசாயிகள் இந்த தொழிநுட்பத்தை அதிகளவில் கடைபிடிக்க ஆரம்பித்துள்ளனர்.

வேலை வாய்ப்புகள்

ஒரு ஏக்கருக்கு ஒரு மனித நாள் என்றளவில் வேலைவாய்ப்பு டோலோமைட் இடுவதால் உண்டாகிறது.  மேலும் அதிக மகசூல் கிடைப்பதால், தானிய சுத்திகரிப்பில் ஒரு மனித நாள் ஒரு ஏக்கருக்கு என்றளவில் வேலை வாய்ப்பு உருவாகின்றது.        

சாதனை விவசாயியின் பெயா் மற்றும் முகவரி

திரு.ஒ. முஸ்தபா
த.பெ திரு. ஒமர பிள்ளை சாகிப்,
93∕1 பறக்கை ரோடு, இளங்கடை போஸ்ட்
கோட்டார் அஞ்சல் , நாகா்கோவில் – 629 002
கன்னியாகுமரி மாவட்டம்
அலைபேசி - 9488941180

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016