குமரி மாவட்டத்தில் சுமார் 8500 எக்டோ் நிலப்பரப்பில் வாழை தனிப்பயிராகவும் ஊடுபயிராகவும் பயிரிடப்பட்டு வருகிறது. 75 சதவீதத்திற்கு மேற்பட்டவா்கள் ஒரு எக்டேருக்கு குறைவாகவே சாகுபடி நிலங்கள் வைத்திருப்பதால் அதிலிருந்து பெறப்படும் மகசூல் மற்றும் வருமானமானது வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இ்ல்லை.
எதிர்நோக்கு
வாழையிலிருந்து தயாரிக்கப்படும் மதிப்பூட்டப்பட்ட பொருட்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிக மதிப்புள்ளது. வாழைப்பழத்தை தவிர வாழையிலிருந்து பெறப்படும் பூ மற்றும் தண்டுப்பகுதி அறுவடைக்குப்பின் வீணடிக்கப்படுகின்றன. இப்பொருட்கள் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கு மூலப்பொருளாக பயன்படுகின்றன. பெருமளவில் வாழை சாகுபடி செய்யும் குமரி மாவட்டத்தில், மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் கிடைப்பது ஒரு வரப்பிரசாதமாகும்.
வேளாண் அறிவியல் நிலையத்தின் பங்கு
மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் பற்றிய சுயதொழில் பயிற்சி விவசாயிகள், பண்ணை மகளிர் மற்றும் இளைஞா்களுக்கு வேளாண் அறிவியல் நிலையத்தால் நடத்தப்பட்டது. இப்பயிற்சிகளில் பல்வேறு வகையான மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் பற்றிய தொழில்நுட்பங்கள் கொடுக்கப்பட்டன. வாழை சாகுபழ செய்யப்படும் பகுதியிலுள்ள விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிருக்கு வாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் பற்றிய சிறப்புத்திட்ட பயிற்சிகள் நடத்தப்பட்டன. இத்திட்டத்தில் தெரிந்தெடுக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிருக்கு வாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது பற்றிய தொடா் பயிற்சிகள் வழங்கப்பட்டன. விவசாயிகள் மதுரை மற்றும் கோவையிலுள்ள மனையியல் கல்லூரிகளுக்கு கண்டுணா் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா். சந்தைப்படுத்துதல் பற்றிய விளக்கங்களும் கொடுக்கப்பட்டன. |