முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
வெற்றிக் கதைகள் :: தோட்டக்கலை

கத்தரியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

அறிவழகன்,
பிடாகம் கிராம்,
விழுப்புரம் மாவட்டம்,
போன் -9865654219.

கத்தரியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு - தண்டு மற்றும் காய்த்துளைப்பான்:
      நடவு செய்த 15-20 நாட்கள் கத்தரிச் செடியின் நுனித்தண்டுகள் இலைகளுடன் காய்ந்து தலை காய்ந்து தொங்கி காணப்படும். அவைகளின் இலை உள்ளே பார்த்தால் வெள்ளைநிற புழு காணப்படும். இவ்வகைப் புழுக்கள் காய்கள் பிஞ்சாக இருந்து வளர்ந்து வரும் சமயத்தில் காய்களை குடைந்து சாப்பிட்டு சேதப்படுத்தும். இதனைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட செடிகளின் நுனித் தண்டினை கிள்ளி எறிந்து விட வேண்டும். பாதிக்கப்பட்ட காய்களைப் பறித்து அழித்து விட வேண்டும். காய்களில் 50 சதத்தூளை ஒரு லிட்டருக்கு 2-4 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். காய்களைத் தாக்கும் பருவத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை குயினால்பாஸ் 25 இசி. 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீருடன் 2 மில்லி வேப்பெண்ணெய் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கலவையுடன் சேர்த்து தெளிக்க வேண்டும். அல்லது வேப்பங்கொட்டைச்சாறு 50 மில்லியை ஒரு லிட்டர் நீரில் கலந்துதெளிக்கவேண்டும்.

பச்சை மிளகாய்: 1 ஏக்கர் நிலத்தில் 40 டன் பச்சை மிளகாயை அறுவடை செய்து சாதனை படைத்துள்ளார். விழுப்புரம், பிடாகம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அறிவழகன் சொட்டுநீர்ப் பாசனத்தின் கீழ் மிளகாய் சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெறலாம். முதற்கட்டமாக உலிக்கலப்பை, சட்டிக்கலப்பை, கொக்கிக் கலப்பை போன்றவற்றை பயன்படுத்தி, மண்ணை பொலபொலவென்று உழுது, பின் 7 டன் தொழுஉரம் இட்டு மீண்டும் நன்றாக உழுது கடைசி உழவிற்கு முன்பாக விரிடி, சூடோமோனாஸ் போன்ற உரங்களை இட்டு அதன்பின் ஓர் உழவு உழுது கொள்ள வேண்டும். பின்னர் அரை அடி இடைவெளியில் 5 அடி அகலத்திற்கு பார் அமைத்து, பார் ஒன்றுக்கு இரண்டு அடி இடைவெளியில் இரண்டு வரிசைகள் அமைத்து, செடிக்குச்செடி இரண்டரை அடி இடைவெளியில் 35 நாட்களான பச்சை மிளகாய் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். 1 ஏக்கருக்கு மொத்தம் 10,000 நாற்றுகள் தேவைப்படும். US எனப்படும் விதை நிறுவனத்தின் US 244 என்ற உயர் ரகத்தை, நாற்றுகள் அனைத்தும் குழித்தட்டு முறையில் விவசாயியே உற்பத்தி செய்கிறார்.


Updated on April, 2015
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015