நேரடி விதைத்தல் முறையில் முள்ளங்கி சாகுபடி
என்னுடைய பெயர் ஜேம்ஸ்முத்துராஜ். நான் திண்டுக்கல் மாவட்டம் பாப்பன்குளம் என்ற கிரமத்தில் வசித்து வருகிறேன். 30 வருடமாக விவசயம் செய்துவருகிறேன். எங்களுக்கு சொந்தமாக 4 ஏக்கர் நிலம் உள்ளது. 2 கிணறு இருக்கு. 20 வருடமாக முள்ளங்கி பயிரிட்டு வருகிறேன். அதில் 10 வருடமாக விதையை நடவு மூலமாகவும் 10 வருடமாக நேரடி விதைத்தல் முறையிலும் விவசாயம் செய்கிறேன்.
|
பயிரிடும் முறை:
5 கலப்பை டிராக்டர் கொண்டு 2 உழவு 10 நாள் இடைவெளி விட்டு உழவு செய்ய வேண்டும். பிறகு கொக்கி(12 கொக்கி) கலப்பை கொண்டு 2 உழவு ஓட்ட வேண்டும். பிறகு முள்ளங்கி விதையை நேரடி விதைத்தல் முறையில் விதைக்கவேண்டும். ஏக்கருக்கு 3 கிலோ தேவைப்படும். பிறகு 1 ஏக்கருக்கு 1 மூட்டை பாக்டோபஸ் அல்லது டி ஏ பி உரம் இடவேண்டும். மீண்டும் 5 கலப்பை டிராக்டர் கொண்டு உழ வேண்டும். இப்படி உழும் போதே பார் அமைந்து விடும். தண்ணீர் விடுவதற்காக நடுவில் வாய்க்கால் மற்றும் பாத்தி கட்ட வேண்டும். முள்ளங்கி கிழங்கு சாகுபடி முடியும் வரை 5 நாட்களுக்கு தண்ணீர் விட வேண்டும்(மழைக்கு ஏற்ப தண்ணீர் விட வேண்டும்). அதேப் போல் 15 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்கவும் வேண்டும். பின் உரம் போட வேண்டும். பயிரிட்டு 20 நாட்களுக்குள் உரம் போட வேண்டும். 1 ஏக்கருக்கு என்.பி.கே கலப்புரம் 5 மூட்டை(200 கிலோ) அல்லது பொட்டசியம் (50 கிலோ) + யூரியா (50 கிலோ) என உரம் போட வேண்டும். பிறகு அசுவினி பூச்சிக்கான அசிப்பேட் (20 கிராம்) + மோனோக்குரோட்டோபஸ் (40 மிலி) மருந்தடிக்க வேண்டும்.
|
பின் 15 நாட்கள் கழித்து அசுவினி பூச்சி இருந்தால் இதே மருந்தை மீண்டும் அடிக்க வேண்டும். 35 நாட்களில் முள்ளங்கி கிழங்கை எடுக்க ஆரம்பிக்க வேண்டும்.பெரிய கிழங்கை 35 முதல் 60 நாட்கள் வரை எடுக்கலாம். 60 நாட்களில் நிறைவு பெற்ருவிடும். 1 ஏக்கருக்கு 8 ஆயிரம் கிலோ (8 டன்) வரை முள்ளங்கியை சாகுபடி செய்யலாம்.
செலவு :
விதை, அதை விதைதல், மருந்தடிதல், களை எடுத்தல், உரம் போடுதல் என 20 ஆயிரம் வரை செலவகும்.
பின்
முள்ளங்கி 10 ரூபாய் க்கு விற்றால்
கமிசன் |
8 ஆயிரம் |
வண்டி வடைகை |
5 ஆயிரம் |
எடுப்பு கூலி |
15 ஆயிரம் |
இறக்கு கூலி |
1 ஆயிரம் |
சாக்கு |
4 ஆயிரம் |
பொய் வர செலவு |
5 ஆயிரம் |
|
20 ஆயிரம் |
மொத்தம் |
58 ஆயிரம் |
முள்ளங்கி விற்பனை |
80 ஆயிரம் |
மொத்தம் செலவு |
58 ஆயிரம் |
லாபம் |
22 ஆயிரம் |
10 ரூபாய் க்கு மேல் விற்றால் கமிசன் மட்டுமே மாறுபடும். விற்பதில் 10% கமிசன் ஆகும்.
பயன்கள்:
நடவு முறை என்றால் நடுவதற்க்கு செலவு ஏக்கருக்கு 2 ஆயிரம் வரை ஆகும். நேரடி விதைத்தல் முறையில் முள்ளங்கி நெறுக்கமாக வருவதல் நடவு முறையை விட சிறிது அதிகமாக மகசூல் கிடைக்கும்.
|