வெற்றிக் கதைகள் :: தொழில் முனைவோர்கள் - 2014 நன்றி பசுமை விகடன் ...
[ 2012 வெற்றிக் கதைகள் காண.. ] [ 2013வெற்றிக் கதைகள் காண.. ]    
புதிய முயற்சிகள்.. பலவிதமான பயிற்சிகள் கை கொடுக்கும் வேளாண் அறிவியல் மையங்கள்
10.05.2014 [மேலும் தகவலுக்கு...

வழக்கமான விவசாயத்தைத் தாண்டி, ‘புதிய முயற்சிகள் எடுக்கலாமா? என சிந்திக்கும் விவசாயிகள் பலர், சரியான வழிகாட்டுதல் இல்லாமல் சிரமப்படுகிறார்கள். ‘புதிய பயிர் நமக்கு சாத்தியமா?, சாதக பாதகங்கள் என்ன?, தொழில்நுட்பங்களை எப்படி அறிந்து கொள்வது. என ஏராளமான கேள்விகள் எழும்போது, குழம்பிப்போய், தனியார் நிறுவனங்கள் சிலவற்றிடம் சிக்கி, பணத்தை இழந்து தடுமாறுபவர்கள் பலர் உண்டு. இப்படி ஏமாறாமல் இருக்க. சரியான வழிகாட்டுதல் மற்றும் தொழிநுட்பங்களைச் சொல்லித்தரும் உற்றத்தோழன்தான், வேளாண் அறிவியல் நிலையம். பல விதமான பயிற்சிகள்! இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் நிதியுதவியுடன், இந்தியாவில் 634 வேளாண் அறிவயில் நிலையங்கள் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் 31 வேளாண்மை அறிவியல் நிலையங்கள் செயல்படுகின்றன. விவசாயிகள் நலன் கருத்தி, ஒரு மாவட்டத்துக்கு ஒரு நிலையம் என்ற அடிப்படையில், இவை அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பாக செயல்படக்கூடிய வேளாண்மை அறிவியல் நிலையங்களில்.. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையமும் ஒன்று. இதன் தலைவர் மற்றும் பேராசிரியருமான டாக்டர் சோழனிடம் பேசினோம். “ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வியாக்கிழமைகளில் ஒரு நாள் பயிற்சி வகுப்புகள் இங்கு நடத்தப்பட்டு வருகின்றன. புறக்கடை முறையில் ஜப்பான் காடை மற்றும் வான்கோழி வளா்த்தல் பரண் மேல் தலைச்சேரி மற்றும் போயர் ஆடுகள் வளர்த்தல்: மிதவைக் கூடுகளில் மீன் வளர்த்தல்: மூலிகைப் பயிர்கள் சாகுபடி: காளான் வளர்ப்பு: தேனி வளர்ப்பு: கூட்டுக்கெண்டை மீன் வளர்ப்பு: அசோலா மற்றும் மண்புழு உற்பத்தி செய்தல்’ மாடித்தோட்டம் அமைத்தல்’ துல்லியப் பண்ணையம் மூலம் காய்கறி சாகுபடி வெள்ளம் மற்றும் வறட்சிக் காலங்களுக்கு ஏற்ற வகையிலான மாற்றுப்பயிர்கள் சாகுபடி: தென்னையில் கோகோ சாகுபடி தீவன வங்கி அமைத்தல் நிழல் வலையகத்தில் காய்கறி சாகுபடி நெல், பயறு, உளுந்து, தீவனப்பயிர்களின் விதை உற்பத்தித் தொழில்நுட்பங்கள் காளான் காய்கறிகளில் மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரித்தல்.. எனப் பல பயிற்சிகளை இங்கு அளித்து வருகிறோம். கட்டணமும் இல்லை! ஒரு நாள் பயிற்சி வகுப்பில், ஒரே தலைப்பில் மட்டும் பயிற்சி அளிப்போம். ஒரு பயிற்சி வகுப்பில் 25 முதல் நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இதனால் விவசாயிகள் மிகத் தெளிவாக, நிதானமாகத் தெரிந்து கொள்ள முடியும். மதிய உணவு, டீ, பிஸ்கட் போன்றவையும் கட்டணம் இல்லாமல் தரப்படும். தவிர, விரிவாகக் கற்றுக் கொள்ள விரும்பும் விவசாயிகளுக்காக ஒவ்வொரு மாதமும் மூன்று நாள் இலவசத் தொடர் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இப்பயிற்சிக்கு வருகிற விவசாயிகளை, வெற்றிகரமான அனுபவ விவசாயிகளின் பண்ணைகளுக்கு நேரடியாக அழைத்துச் சென்று பயிற்சி தருகிறோம். இரவு நேரங்களில் எங்களுடைய வளாகத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்கிக் கொள்ளலாம். விவசாயிகள், தங்களுக்கு எற்படக்கூடிய சந்தேகங்களை, பயிற்சி வகுப்புகள் இல்லாத நாட்களிலும் கூட வந்து விஞ்ஞானிகளை அணுகி, தீர்த்துக் கொள்ளலாம்” என்ற சோழன் நிறைவாக. கருவிகளுக்கும் பயிற்சி! “விவசாயிகளுக்கு அனைத்து வகைகளிலும் பயனளிக்கக்கூடிய நவீன கருவிகளை அறிமுகப்படுத்தி, அவற்றை இயக்கவும் நேரடியாகப் பயிற்சி அளிக்கிறோம். லேசர் உதவியுடன் நிலம் சமப்படுத்தும் கருவி நேரடி நெல் விதைக்கும் கருவி, நெல் அறுவடை இயந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, கடலை உரிப்புக் கருவி, தானியங்கள் பிரிக்கும் கருவி உள்ளிட்ட இன்னும் எராளமான புத்தம் புதிய கருவிகளை அறிமுகம் செய்து விவசாயிகள் கையாலேயே இயக்க வைத்து பயிற்சிகள் அளிக்கிறோம். அசோலா, தீவனப் புல் கரணைகள், மீன் குஞ்சுகள், மண்புழு உரங்கள், விதைநெல் உள்ளிட்டவற்றை இங்கேயே உற்பத்தி செய்து, மிகவும் குறைவான விலைக்கு விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம்” என்று சொன்னார்.

வ.எண்.

அலுவலர் மற்றும் முகவரி

தொலைபேசி எண்

1.

பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், திண்டிவனம் – 604 002 விழுப்புரம் மாவட்டம்

04147-250001

2.

பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், கோவிலங்குளம் – 626 107, அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்

04566-220561

3.

பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம்,விரிஞ்சிபுரம் – 632 104, வேலூர் மாவட்டம்

0416-2273221

4.

பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், சே்சிப்பாறை – 629 161, கன்னியாகுமரி மாவட்டம்

04651-281759

5.

பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், விருத்தாசலம் – 606 001, கடலூர் மாவட்டம்

04143-238353

6.

பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம்,கடலோர உப்பு நீர் ஆராய்ச்சி நிலையம், மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகம், ராமநாதபுரம் – 623 503

04567-230250

7.

பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், தேசிய பருப்பு ஆராய்ச்சி நிலையம், வம்பன் காலனி,  புதுக்கோட்டை – 622 303

04322-290321

8.

பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், மதுரை – 625 104

0452-2422955/2422956

9.

பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், சந்தியூர் – 636 204, சேலம் மாவட்டம்

0427-2422550

10.

பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம்,நீடாமங்கலம் – 614 404, திருவாரூர் மாவட்டம்

04367-261444

11.

பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், சிறுகமணி – 639 115, திருச்சி மாவட்டம்

0431-2614417

12.

பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், திரூர் – 605 025, திருவள்ளூர் மாவட்டம்

044-27620233

13.

பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், மாநில விதை பண்ணை, பாப்பாரப்பட்டி – 636 209, தருமபுரி மாவட்டம்

04342-245860

14.

திட்ட ஒருங்கிணைப்பாளர், மைராடா வேளாண் அறிவியல் நிலையம், 57, பாரதி தெரு, கோபிச்செட்டிபாளைம் – 638 452, ஈரோடு மாவட்டம்

04285-241626

15.

திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம், காந்திகிராம் கிராம நிலையம் காந்திகிராம்-624 302, திண்டுக்கல் மாவட்டம்

 

16.

திட்ட ஒருங்கிணைப்பாளர், சரஸ்வதி வேளாண் அறிவியல் நிலையம், புலுத்தேரி கிராமம், R.T.மலை அஞ்சல், குளித்தலை வட்டம், கரூர் – 621 313

0451-2452168

17.

திட்ட ஒருங்கிணைப்பாளர், டாகட்ர் பெருமாள் வேளாண் அறிவியல் நிலையம், எலுமிச்சங்கிரி கிராமம், மல்லிநாயனப்பள்ளி அஞ்சல், கிருஷ்ணகிரி – 635 120

09790020666

18.

திட்ட ஒருங்கிணைப்பாளர், உபாசி-வேளாண் அறிவில் நிலையம், கிளன்வியூ, தபால் பெட்டி எண்: 11, குன்னூர் 643 101, நீலகிரி மாவட்டம்

04343-296039

19.

திட்ட ஒருங்கிணைப்பாளர், சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம், காமாட்சிபுரம், தேனி மாவட்டம் – 625 520

04546-247564

20.

திட்ட ஒருங்கிணைப்பாளர், ஸ்ரீ அவினாசிலிங்கம் வேளாண் அறிவியல் நிலையம், விவேகானந்தபுரம் – 641 113, காரமடை பகுதி, கோயம்புத்தூர்

04254-284223

21.

திட்ட ஒருங்கிணைப்பாளர், வேதபுரி வேளாண் அறிவியல் நிலையம், கீழ்நெல்லி கிராமம், சித்தாத்தூர் அஞ்சல், செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் – 604 410

04182-293484

22.

திட்ட ஒருங்கிணைப்பாளர், ஆர்.வி.எஸ்.வேளாண் அறிவியல் நிலையம், ஆயிக்குடி- 627 852, தென்காசி வட்ம், திருநெல்வேலி மாவட்டம்

04633-292500

23.

திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம், உசிலம்பட்டி, மனையேரிப்பட்டி (பிபிஒ) செங்கிப்பட்டி, தஞ்சாவூர் மாவட்ம் – 613 402

99429-66606,
97888-51026

24.

பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், சிக்கல், நாகப்பட்டினம் – 611 108

04365-246266

25.

பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் (எஸ்.ஆர்.எம், பல்கலைக்கழகம் அருகில்), காஞ்சிபுரம் மாவட்டம்-603203

044-27452371

26.

திட்ட ஒருங்கிணைப்பாளர், ஸ்காட் வேளாண் அறிவியல் நிலையம், வாகைகுளம், தூத்துக்குடி மாவட்டம்

99429-78526

27.

இணைப்பேராசிரியர் மற்றும் தலைாவர், வேளாண் அறிவியல் மையம், குன்றக்குடி, சிவகங்கை – 630206

04577-264288

28.

பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், நாமக்கல் – 637 002

04286-266345

29.

கால்நடைப் பல்கலைக்ககழகப் பயிற்சி நிலையங்கள், இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 63, காளப்பட்டி பிரிவு, சரவணம்பட்டி, கோயம்புத்தூர்-641 035

0422-2669965

30.

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 4-114, பரக்கை அஞ்சல், நாகர்கோயில்-629 601 கன்னியாகுமரி மாவட்டம்

04142-220049

31.

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 150, சத்தி ரோடு, வீரப்பன்சத்திரம், ஈரோடு -638 004

04562-286843

32.

பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 402-B 2-வது தளம், தென்காசி  சாலை, ராஜபாளையம் -626117

0424-2291482

33.

துணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி, மற்றும் ஆராய்ச்சி நிலையம், 4/221, பண்டுதக்காரன்புதூர்,  மண்மங்கலம் அஞ்சல், கரூர் – 639 006

04563-220244

34.

பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருப்பரங்குன்றம், மதுரை – 625 005

04324-294335

35.

பேராசிரியர் மற்றும் தலைவர், கல்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தொழிற்பேட்டை அஞ்சல், புதுக்கோட்டை-622 004

0452-2483903

36.

துணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை பல்கலைக்கழகம் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கால்நடை மருத்துவமனை வளாகம், காமராஜர் சாலை, திருப்பூர் – 648 604

04322-271443

37.

துணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கால்நடை மருத்துவமனை வளாகம், காமராஜர் சாலை, திருப்பூர் – 648 604

0421-2248524

38.

ரோசிரியர் மற்றும் தலைவர், கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 10/3 B, ராமையன்பட்டி அஞ்சல், சங்கரன் கோயில் சாலை, திருநெல்வேலி – 627 358

0462-2337309

39.

இணைப் பேராசிரியர் மற்றம் தலைவர், கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 9, பாலாஜி ரோடு, 3-வது கிராஸ், கிருஷ்ணா நகர், வேலூர் – 632 001

0416-2225935

40.

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஜி.பி.காம்ப்ளக்ஸ், மேல்மருவத்தூர் – 603 319

044-27529548

41.

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை பல்கலைக்கழகம் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 6/7, முதல் பிரதான சாலை, ராமலிங்கா நகர், திருச்சிராப்பள்ளி – 620 003

0431-2770715

42.

பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பிரட்ஸ் ரோடு, சேலம்-636 001

0427-2410408

43.

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல் – 624 004

0451-2460141

தொடர்புக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் அறிவியல் நிலையம், நீடாமங்கலம் – 614 404,
திருவாரூர் மாவட்டம்
தொலைபேசி எண்: 04367-261444
ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு தேதி:10.05.2014
www.vikatan.com

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013