வங்கி மற்றும் கடன் :: தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி லிமிடெட்
சுய உதவிக் குழுக்கள்
  • தமிழ்நாடு அரசு தமிழ்நாடு மாநகராட்சி பெண்கள் மேம்பாட்டிற்கு மகளிர் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி உள்ளது. சுய உதவிக் குழுக்களுக்கு நிதி உதவிகளை சுய உதவிக்குழு வங்கி இணைப்பு திட்டத்தில் நபார்டு வங்கி அறிமுகப்படுத்தியதன் மூலம் வழங்கி வருகிறது.
  • கூட்டுறவு வங்கிகள் சுய உதவிக் குழுக்களுக்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் நிதி உதவிகளை வழங்குகிறது.
தகுதி அடிப்படைகள் (பகுதி 1)
    1. 6 மாதங்களுக்கு மேல் குழு இயங்கி வருதல் வேண்டும்.
    2. குழுவின் அளவு 12 முதல் 20 நபர்களுக்குள் இருத்தல் வேண்டும்.
    3. ஒரு மாதத்திற்கு குறைந்தது இரண்டு கூட்டம் நடைபெற வேண்டும்.
    4. குழுவினர் வங்கி கடன்களை ஏமாற்றியவராக இருத்தல் கூடாது.
    5. உள் மற்றும் வெளிக்கடன்களுக்கு 85 சதவிகிதம் குறையாமல் திரும்பப் பெறுதல் வேண்டும்.
    6. உள்புறக்கடன்களுக்கு 50 சதவிகிதம் உறுப்பினர்கள் குறையாமல் தகுதியுடைவர்கள்.
    7. அனைத்து உறுப்பினர்களும் சீராகப் பணம் சேமித்து வருதல்.
    8. சரியான முறையில் கணக்குப் புத்தகங்களை பராமரித்து வருதல் வேண்டும்.
மேற்குறிப்பிட்ட அனைத்து 8 முக்கியத் தகுதி அடிப்படைகளைப் பெற்றிருப்பின், அவர்கள் மட்டுமே கடன் வழங்குவதற்கு தகுதியுடைவராக எடுத்துக் கொள்ளப்படுவர். மேற்குறிப்பிட்ட 8 தகுதிகளை பூர்த்தி செய்யாமல் இருந்தால், முதல் கட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்படுவர் மற்றும் அவர்கள் வரிசை குழுவில் எடுத்துக் கொள்ளப்படமாட்டார்கள். அக்குழுவினர் குறைந்தபட்ச தகுதிகளை நிறைவு செய்தால் மீண்டும் மனு செய்ய தகுதியுடையவர்களாவர்.

கடன் அளவுகள்
:
கூட்டு மதிப்பீட்டுக் குழுவின் மதிப்பீடுகளைப் பொருத்து, கீழ்க்கண்ட கடன் அளவுகள் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் பரிந்துரைக்க தகுதியுடையவராவர்.
    1. சுய உதவிக்குழுக்களுக்கு தவணைக் கடன் அல்லது சுழல் நிதி கடன், அவர்களின் சேமிப்பு : கடன் அளவு விகிதாச்சாரத்தில், 1:4 என்ற விகிதத்திற்குக் குறையாமல் வழங்கப்படும்.
    2. முதன் முறை கடன் வழங்கும் பொழுது, அவர்களின் சேமிப்பில் 4 மடங்கு அளவிற்கு அதிகமாக வழங்கப்படும். பின் குழுவின் செயல்பாடுகளை நீண்ட நாட்கள் பார்த்து விட்டு, கடன் அளவுகள் 1:4 என்ற விகிதாச்சாரத்தில் நிர்ணயிக்கப்படும். இது 1:15 அல்லது அதற்கும் மேல் உள்ள அளவுகளில் பின் உயர்த்தப்படும்.
    3. அதிகபட்ச அளவு நிர்ணயிப்பது அதாவது சேமிப்பில் 4 மடங்கு அளவிற்கு மேல் வழங்குவதை கூட்டு மதிப்பீடு குழுவினரிடம் வழங்கி அதை வங்கி அரசு சாரா நிறுவனம் மற்றும் பி.ஐ.யூ மூலம் பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.

கடன் தேவை
கடன்கள் உற்பத்தித் தேவைகள் அல்லது நுகர்வுத் தேவைகள் அல்லது இரண்டுக்கும் உபயோகப்படுத்தப்படும். இருப்பினும், குழுக்களிடம் உற்பத்தித் தேவைகளுக்காக மட்டுமே கடன்களை உபயோகப்படுத்த ஊக்குவிப்பு வழங்க வேண்டும். நுகர்வு கடன்கள் வருவாய் கிடைக்க உதவி செய்யாது மற்றும் இதன் மூலம் கடன் தவணை திருப்பிச் செலுத்த இயலாது.

கடன் வகை
: 6 மாதங்கள் முதல் 2 வருட வயதுடைய சுய உதவிக் குழுக்கள் வங்கி கடன் பெற தேர்வு செய்ய வேண்டிய வழிமுறைகள் கீழே வழங்கப்பட்டுள்ளது.

தவணை கடன்

அதிகப்படியான உறுப்பினர்கள் சுய உதவிக் கடன் கிராம பண்ணை மற்றும் பண்ணை சாரா செயல்களுக்குப் பயன்படுத்துதல், மற்றும் இவை குறிப்பிட்ட இடைவெளிக்குள் வருவாய் ஏற்படுத்துவதால், மகளிர் திட்டம் குழுக்களுக்கு கடன்கள் தவணை முறையில் வழங்கப்படுகின்றது. வங்கிகள், அரசு சாரா நிறுவனம் மற்றும் பி.ஐ.யூ மூலம் கலந்து ஆலோசித்து, இரண்டாவது அல்லது அதற்குப் பிறகு கடன்களை அவர்களின் நடைமுறைப்படி வழங்குகிறது.

தொடர்ச்சி

ஆதாரம்: http://www.tnscbank.com/shg2.html

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016