வங்கி மற்றும் கடன் :: தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி லிமிடெட்

சுழல் கடன் நிதி
சுய உதவிக் குழுக்கள் சுழல் கடன், வங்கிகளிடம் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம். சுழல் நிதி கடன் போன்று கணக்கை நடத்தி வருதல் ஆகும். சுழல் நிதி கடன் பல கடன் கணக்குகளை ஒரே குழுவின் பெயரில் அதிக நாட்களுக்கு இருப்பதை அனுமதிப்பது இல்லை. மேலும் அதன் கணக்கில் வரவு செலவு அதிகமாக இருப்பின் (அதாவது தொடர்ந்து கடன் பெறுதல் மற்றும் அதிக அளவில் பெறுதல் மூலம்) அதன் மூலம் சுய உதவிக் குழுக்கள் அதிக அளவு கடன் பெறலாம், மற்றும் உறுப்பினர் கடன் தேவைகளை கடன் அளவு அனுமதிக்கப்பட்ட அளவு வரை பெற்றுக்கொள்ளலாம். அதன் அளவுகளை ஆண்டுக்கு ஒரு முறை மறு ஆய்வு செய்து கொள்ளப்படும். சுழல் நிதி கடன் கணக்குகளின் செயல்பாடுகள் மற்றும் சுயஉதவி குழுக்களின் செயற்கூறுகளைப் பொறுத்து, அதன் அளவுகள் புதுப்பித்தல் அல்லது ஊக்குவிப்பு வங்கிகள், அரசு சாரா நிறுவனம் மற்றும் பி.ஐ.யூ நிறுவனம்  ஆகியவற்றின் மூலம் கலந்து ஆலோசித்து ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் முடிவு செய்யப்படும். இரண்டாம் ஆண்டு ஆரம்பத்திலேயே அதிகப்படியான அளவுகளை முடிவு செய்ய, குழுவின் சேமிப்புகள் முதலாம் ஆண்டின் இறுதி நாளை அடிப்படை ஆண்டாக எடுத்துக் கொள்ளப்படும். தவணை கடன் அனுமதித்தல் அல்லது சுழல் நிதி கடனின் அளவுகளை அனுமதிப்பதை சுய உதவிக்குழுக்கள் மற்றும் வங்கிகளிடமே விடப்பட்டுள்ளது. எனவே, நன்றாக செயல்படும் குறிப்பிட்ட சுய உதவிக் குழுக்களுக்கு மட்டும் சுழல் நிதி கடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அளவு
கடன் தொகை பொருட்படுத்தாமல், எந்த அளவும் தேவை இல்லை. கடன் அளவுகளின் இலக்கை அடைவதற்காக சேமிப்புகளை தடை செய்தல் கூடாது. மானியத் தொகை எதையும் இத்திட்டத்தின் கீழ் TNCDW மூலம் குறிப்பாக பார்ப்பதில்லை. இருப்பினும், இதரத் திட்டங்களான TAHDCO, NBCFDC சிறு கடன் திட்டங்கள் ஆகியவை M.T - யுடன் இணைப்பது மற்றும் இவற்றை சில குறைந்தபட்ச தகுதி அடிப்படைகள் மற்றும் கடன் அளவு முறை மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு கிடைக்கும் படி செய்யப்படுகிறது. மானியம் மற்றும் அதன் அளவுகள், அந்தக் குறிப்பிட்ட திட்டங்களின் வழிமுறைகள் பொருத்து வழங்கப்படுகிறது.

வட்டி விகிதம்: தற்போதைய வட்டி விகித அமைப்பு, பாரத ரிசர்வ் வங்கி நபார்டு ஆகியவற்றின் மூலம் நிர்ணயிக்கப்பட்டவை. சுய உதவிக்குழுக்களின் வங்கி இணைப்புத் திட்டம் மூலம் வழங்கப்படுகின்றது.
நபார்டு மூலம் எஸ்.சி.பி (மறுநிதியளிப்பு) : 6.00 % * 
வங்கிகள் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்குபவை : 9.00 % * ரூ. 50,000 வரை
சுய உதவிக் குழுக்கள் உறுப்பினர்களுக்கு : சுய உதவிக் குழுக்களின் முடிவைப் பொருத்து.
(* பாரத ரிசர்வ் வங்கி / நபார்டு வங்கியின் வழிமுறைப்படி, நேரத்திற்குத் தகுந்தது போல் மாறுபடுபவை)

பாதுகாப்பு: கடனை சரியாகத் திருப்பிச் செலுத்துவதற்கு குழு உறுப்பினர்கள் இணைந்து பொறுப்புள்ளவர்களாவர். எந்த கூட்டு பாதுகாப்பு முறையும் நிர்ப்பந்திக்கப் படுவதில்லை. எந்தச் சூழ்நிலையிலும், குழு சேமிப்புகள் பாதுகாப்புகளாக தடை செய்யப்பட மாட்டாது.

கடன் வழங்கும் முறை: கடன்கள் மொத்த தொகையாக ஒரு முறை அல்லது பகுதிகளாக, அந்த குழுவினரின் கடன் தேவை கேட்டுக்கொண்டதன் படி வழங்கப்படும். குழுவினரின் முடிவின்படி, தொகையை அவர்கள் எடுத்து தேவையான உறுப்பினர்களுக்கு வழங்குவர்.

திருப்பிச் செலுத்தும் காலம்

தவணை கடன்: திருப்பிச் செலுத்துவதற்கு எந்த விதிமுறையும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவும் இல்லை. திருப்பிச் செலுத்தும் காலம் வங்கி மற்றும் சுய உதவிக் குழு ஆகியவற்றின் மூலம் இணைந்து முடிவு செய்யப்படும்.

சுழல் நிதி கடன்
இதை நடப்பு கணக்காக நீடிக்க அனுமதிக்கப்படும். இருப்பினும், கணக்கில் அதன் வரவு செலவு (கடன் அளவுகள் அதன் வருடத்தில்) அளவுகள் அந்த குறிப்பிட்ட அளவிற்கு கீழ் செல்லுதல் கூடாது. ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும், கணக்கை மறு ஆய்வு செய்து பின் வங்கி மூலம் அந்த குழுவின் செயல்பாடு மற்றும் பொருத்தமான அளவு வழங்கப்பட்டவை ஆகியவற்றை புதுப்பித்து வழங்கப்படும். இருப்பினும், வங்கி விதிக்கும் வட்டி விகிதம் கடன் தவணை மற்றும் சுழல் நிதி கடன் ஆகியவற்றை அந்த குழு சரியானபடி செலுத்தவேண்டும்.

தொடர்பு முகவரி
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி லிமிடெட்,
233, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலை,
சென்னை - 600 001.
தொலைபேசி :  25340301, 25340304, 25340321, 25340351, 25340391, 25340421
தொலை நகல் : 044 25340508

முன் பக்கம்

ஆதாரம்: http://www.tnscbank.com/shg2.html
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016