எஸ்.சி.ஏ.ஆர்.டி.பி -யின் கடன் சேவைகள்
நீண்ட தவணை கடன் (5 வருடம் மற்றும் அதற்கு மேல்) விவசாயம் மற்றும் அதன் சார்ந்த தொழில்கள், கிராம வீடுகள், தரிசு நில மேம்பாடு ஆகியவை எஸ்.சி.ஏ.ஆர்.டி.பி -யின் முக்கிய குறிக்கோள்கள். எஸ்.சி.ஏ.ஆர்.டி.பி -யின் கடன் வழங்கும் முறைகளை 3 துறைகளாகப் பிரித்துக் கொள்ளலாம். பண்ணை சார்ந்த துறை, பண்ணைச சாரா துறை, கிராம வீடுகள் துறை.
பண்ணை சார்ந்த துறைகள்
பண்ணை சார்ந்த துறைகளின் கீழ், நீண்ட காலத் தவணை கடன்கள் கீழ்க்கண்ட வேலைகளுக்கு எஸ்.சி.ஏ.ஆர்.டி.பி -யின் மூலம் முன்பணம் வழங்கப்படுகிறது.
சிறு பாசன வேலைகள் அதாவது
- கிணறு தோண்டுதல் / மறுசீரமைப்பு
- பம்பு செட்டுகள் நிறுவுதல்
- பாசன கால்வாய்கள் அமைத்தல்
- குழாய்கள் அமைத்தல்
- தெளிப்பு நீர் / சொட்டு நீர் பாசன முறை
- சமூக கிணறுகள்
- இறைப்பு நீர் பாசன முறை
பண்ணை இயந்திரமயமாக்கல்
- உழவு உந்து / பவர் டில்லர்கள் அதன் உபகரணங்களுடன்
- கூட்டு அறுவடை இயந்திரங்கள்
- இழுவைகள்
- மின் கதிர் அடிக்கும் இயந்திரம்
- நில மேம்பாடு / நிலம் சீரமைத்தல் மற்றும் நீர் பாதுகாப்பு
- தோட்டக்கலை மேம்பாடு (பழப்பயிர்கள், மலர்கள், காளான், காய்கறிகள்)
- மலை தோட்டப்பயிர்கள் (தென்னை, முந்திரி, பாக்கு, ரப்பர், தேயிலை, காபி, மூங்கில், ஏலக்காய்).
- பல தரப்பட்ட செயல்கள் (பால் பண்ணை, கோழிப்பண்ணை, பன்றிப் பண்ணை, முயல் பண்ணை, மீன் பண்ணை, ஆடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு, சாண எரிவாயுக் கலன், பண்ணை வீடு, பட்டுப்புழு வளர்ப்பு, கிராமப்புற கோடோன், எருதுகள், மாட்டு வண்டிகள், ஏ.பி.எம்.சி குளிர்பதன சேமிப்புகள்)
- தரிசு நில மேம்பாடு / காடு வளர்ப்பு, மானாவாரி நில மேம்பாடு
- பழைய கடன்களை செலுத்துதல்
- நிலம் வாங்குதல்
பண்ணை சாரா துறைகள்
- கிராமப்புற மற்றும் குடிசைத் தொழில்
- கிராமப்புற கைவினைஞர்கள்
- சிறு தொழில்கள் / விவசாய செயலகம், உணவுப்பதப்படுத்தும் செயலகங்கள்.
- சிறு சாலைப் போக்குவரத்து வாகனங்கள் (16 டன் கொள்ளளவு வரை அளவு கொண்டது)
கிராமப்புற வீடுகள்
- ரூ. 5 லட்சம் வரை புது வீடுகள் கட்டமைப்பு
- ரூ. 1 லட்சம் வரை பழைய வீடுகள் சரிசெய்தல் / மறுசீரமைப்பு
ஆதாரம்
http://www.agriculture.tn.nic.in/IS_District.asp?Ino=29&Inm=Land%20Development%20Bank
http://www.nafcard.org/functions.htm |