வங்கி மற்றும் கடன் :: நில மேம்பாட்டு வங்கி
நிபந்தனைகள் மற்றும் வழிமுறைகள்
  1. கடன் பெறுபவர்களுக்கு 95 சதவிகிதம் கடன் அளவு வழங்கப்படும். இது கடன் தேவையைப் பொறுத்து, வாங்குபவரைப் பொறுத்தும் வழங்கப்படும்.
  2. பாதுகாப்பு
நீண்டகால தவணை கடன்கள், நிலம் / விவசாய நிலத்தை முக்கிய பாதுகாப்பாக வழங்கப்படும். அடகு வைத்தது போக, சொத்துக்கள், பாதுகாப்பு ஆகியவற்றை கூட்டு பாதுகாப்பாக எடுத்துக் கொள்ளப்படும்.

நில மதிப்பீடு: கடன்களுக்கான தகுதி அடிப்படை, நில மதிப்பீட்டில் 60 சதவிகிதம் அளவை கடன் எடுத்துக் கொள்ளப்படும்.

திருப்பிச் செலுத்தும் காலம்:கடன் தேவைகளைப் பொறுத்து நீண்டகால தவணை கடன் 5 வருடம் முதல் 15 வருடம் வரை வழங்கப்படும். ஒரு சில குறிப்பிட்ட திட்டங்களுக்கு கருணைக் காலம் வழங்கப்படும்.

கடன் / திட்டங்களைப் பற்றிய தகவல்கள் பெற யாரை அணுக வேண்டும்.

நாட்டில் ஒவ்வொரு தாலுக்கா / வட்டார அளவிலும் தொடக்க வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கிகள் / எஸ்.சி.ஏ.ஆர்.டி.பி கிளைகள் இடம் பெற்றுள்ளது. கடன் தேவையான நபர்கள் பி.சி.ஏ.ஆர்.டி.பி யின் மேலாளர் / வங்கி கிளையின் வேலை நேரத்தில், திட்டத்தைப் பற்றிய தகவல்கள், நிபந்தனைகள், வழிமுறைகள், கடன் விண்ணப்பம் ஆகியவை பெறலாம்.

வைப்புநிதி சேர்த்தல்

எஸ்.சி.ஏ.ஆர்.டி.பி யின் ஆதார அடித்தளத்தை வளப்படுத்த பாரத ரிசர்வ் வங்கி கிராமப்புற வைப்பு நிதிகளை எஸ்.சி.ஏ.ஆர்.டி.பி கடன் பெறுவோர் / கடன் பெறாதவர் என அனைவரிடமும் பெற அனுமதி வழங்கியுள்ளது. எஸ்.சி.ஏ.ஆர்.டி.பி பல்வேறு வைப்பு நிதி திட்டங்களை வகுத்து, அதன் மூலம் ஒரு வருட காலம் முதல் அனைத்து வைப்பு நிதித் தொகையையும் பெற அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள நில மேம்பாட்டு வங்கிகள்

உள்கட்டமைப்பு - நில மேம்பாட்டு வங்கி
வ.எண்
மாவட்டம்
கிராமங்களின் எண்ணிக்கை
வ.எண்
மாவட்டம்
கிராமங்களின் எண்ணிக்கை
1. கோவை
17
15. இராமநாதபுரம்
5
2. கடலூர்
29
16. சேலம்
28
3. திண்டுக்கல்
21
17. சிவகங்கை
6
4. தர்மபுரி
9
18 தேனி
6
5. ஈரோடு
17
19 திருவள்ளூர்
37
6. கிருஷ்ணகிரி
21
20 தஞ்சாவூர்
11
7. கன்னியாகுமரி
11
21 திருநெல்வேலி
26
8. காஞ்சிபுரம்
24
22 திருச்சிராப்பள்ளி
22
9. மதுரை
11
23 தூத்துக்குடி
13
10. நாகப்பட்டினம்
18
24 திருவண்ணாமலை
33
11. நீலகிரி
7
25 திருவாரூர்
10
12. நாமக்கல்
39
26 வேலூர்
44
13. புதுக்கோட்டை
20
27 விருதுநகர்
8
14. பெரம்பலூர்
6
28 விழுப்புரம்
32
  மொத்தம் = 531
ஆதாரம்
http://www.agriculture.tn.nic.in/IS_District.asp?Ino=29&Inm=Land%20Development%20Bank 
http://www.nafcard.org/functions.htm
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016