|
பாக்டீரியா இலைக்கருகல் நோய்
(சேந்தோமோனாஸ் ஒரைசே)
அறிகுறிகள்: |
|
|
|
நாற்று வாடல் அல்லது கிரசெக்
- நடவு செய்து 1-3 வாரங்களுக்குப் பிறகு அறிகுறிகள் தோன்றும்.
- வெட்டுப்பட்ட பகுதி வழியே பச்சை நிற நீர் படலம் காணப்படும் அல்லது இலைகளின் இலை நுனியிலும் இது போன்ற படலம் ஏற்படும்.
- இலைகள் கருகி மேல் நோக்கி சுருண்டு, பின் சாம்பல் நிற பச்சையிலிருந்து மஞ்சள் நிறமாக மாறும்.
- முழு பயிரும் முழுவதுமாக அழுகிவிடும்.
இலைக்கருகல் (அழுகல்) நோய்:
- இலைப்பரப்பின் மீது நீரில் நனைத்தது போன்று மஞ்சள் நிற வரிகளுடன் காணப்படும் அல்லது இலை நுனிகள் அலை வடிவ ஓரத்துடன் மாறும்.
- இலைகளில் வளைந்து நெளிந்த அலை போன்ற மஞ்சள் கலந்த வெண்மை அல்லது தங்கநிற மஞ்சள் நிறத்தில் காய்ந்த ஓரத்துடன் காணப்படும். நுனியிலிருந்து இலைகள் காய்ந்தும் பின் சுருண்டும், இலை நடுநரம்பு பழுதடையாமலும் காணப்படும்.
- அதிகாலை நேரங்களில் இளம்புள்ளிகளின் மேல் பால் போன்ற அல்லது பனித்துளி போல் திரவம் வடிதல் காணப்படும்.
- தீவிர தாக்குதல் ஏற்பட்ட இலைகள் விரைவில் காய்ந்துவிடும்.
- 60% வரை தானிய மகசூல் இழப்பு ஏற்படும்.
உறுதிப்பாடு:
- தண்டு துளைப்பான் சேதத்திலிருந்து நாற்று வாடல் நோயை வேறுபடுத்துவதற்கு, தாக்கப்பட்ட நாற்றின் அடிப்பகுதியை விரல்களுக்கிடையே வைத்து நசுக்க வேண்டும்.
- நசுக்கிப் பிழியும்போது, வெட்டப்பட்ட பகுதியிலிருந்து மஞ்சள் நிற நுண்ணுயிர் திரவம் வடிவதலைக் காணமுடியும்.
- வெட்டப்பட்ட பகுதியை ஒளிக்கு எதிராக வைத்து நோக்கினால் வெட்டப்பட்ட பகுதியிலிருந்து நுண்ணுயிர் திரவம் நீருக்குள் வடிதலைக் காண முடியும்.
- 1-2 மணி நேரத்திற்குப் பின், இந்த நீர் கலங்கலாக மாறிவிடும்.
|
|
|
நாற்று வாடல் - கிரிசெக் |
இலைகள் நெளிந்து, விளிம்புகளில் மஞ்சள் நிறத்தில் காய்ந்து காணப்படும் |
|
|
இலை நரம்புகளை தவிர இலைகள் சுருண்டு, காய்ந்து காணப்படும் |
இலைகள் நெளிந்து, மஞ்சள் நிற விளிம்புடன் காய்ந்து காணப்படும் |
|
|
|
மேலே செல்க |
கட்டுப்பாடு: |
|
|
|
தடுப்பு முறை:
- பிளீச்சிங் பவுடர் (100 கிராம்/லிட்டர், துத்தநாக சல்பேட் (2%) உடன் விதை நேர்த்தி செய்யவேண்டும்.
- அக்ரிமைசின் (0.025%), நனையும் செரிசன் (0.05%) உடன் விதை நேர்த்தி செய்து பின் அதனைத் தொடர்ந்து வெந்நீரில் (52-54° செ) 30 நிமிடங்கள் விதைகளை ஊற வைத்து வெந்நீர் நேர்த்தி செய்யவேண்டும்.
- செரசன்(0.1%) என்ற அளவில் 8 மணி நேரம் விதைகளை ஊற வைத்து பின், ஸ்ட்ரெப்டோசைக்லின் (3 கிராம்/லிட்டர் நீர்) உடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
- 3% வேப்பெண்ணெய் அல்லது 5% வேப்பங்கொட்டையிலிருந்து எடுத்த சாற்றை தெளிக்க வேண்டும்.
- பசுமையான மாட்டுச் சாண சாறை நுண்ணுயிரி அழுகல் நோயைக் கட்டுபடுத்துவதற்காக தெளித்தல்.
- 20 கிராம் மாட்டு சாணத்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து, அதனை படியவிட்டு பின் வடிகட்ட வேண்டும்.
- நன்கு வடிகட்டிய திரவத்தைப் பயன்படுத்த வேண்டும். (நோய் முதல் அறிகுறி தோன்றியவுடனும், இரண்டு வார கால இடைவெளி விட்டு தெளிக்கவேண்டும்).
| |
|
அக்ரிமைசின் கரைசலில் 8 மணி நேரத்திற்கு விதைகளை ஊற வைக்கவும் |
சாணிக்கரைசலை தெளிக்கவும் |
|
|
வேப்பெண்ணெய் தெளிக்கவும் |
பளீச்சிங் தூளுடன் விதைகளை நேர்த்தி செய்யவும் |
|
உழவியல் முறை:
- நோய் தாங்கும் திறனுள்ள இரகங்களை பயிரிடுதல் (ஐஆர் 20, ஐஆர் 72, பொன்மணி, டிகேஎம் 6)
- நோயற்ற விதைகளைப் பயன்படுத்தல்.
- தனிமையான மேட்டுப்பாங்கான சூழ்நிலையில் நாற்றங்கால்களை அமைத்தல்.
- பயிர் நடவு செய்யும்போது நாற்றுக்கள் கத்திரிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
- சரி விகித உரமளித்தல், மிகுதியான தழைச்சத்து அளிப்பதை தவிர்க்க வேண்டும்.
- கதிர்ப் பருவத்தில் தழைச்சத்து உரம் அளிப்பதை தள்ளிப் போட வேண்டும். வயலில் நீரை வடிகட்ட வேண்டும். (பயிரின் பூத்தல் பருவத்தை தவிர)
- களைகளை மற்றும் மாற்று பயிர்களை அழித்தல்.
- நோய்த் தாக்கப்பட்ட வயலிலிருந்து நீர் மற்ற வயல்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
- முறையான பயிர் இடைவெளியை பாதுகாக்க வேண்டும்.
|
|
|
வயலுக்கு வயல் பாசனம் செய்வதை தவிர்க்கவும் |
பயிர்களுக்கிடையில் சரியான இடைவெளி விடவும் |
|
இராசயன முறை /உயிர் எதிர்ப்புப் பொருள்:
- அக்ரிமைசின் (0.25%), செரிசன் (0.05%) உடன் 8 மணி நேரம் விதைகளை நன்கு ஊற வைக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து வெந்நீருடன் (52-54 செ) விதைகளை 30 நிமிடங்களுக்கு ஊற வைத்தல் வேண்டும்.
- செரிசன் (0.1%) என்ற அளவில் விதைகளை 8 மணிநேரம் நன்கு ஊற வைத்து பின் அதனை தொடர்ந்து ஸ்ட்ரெப்டோசைக்லின் (3 கிராம்/1 லிட்டர் நீர்) உடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
- ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் + டெட்ராசைக்லின் கலவை 300 கிராம் + காப்பர் ஆக்சிக்லோரைடு 1.25 கிலோ எக்டர் ஆகியவற்றை கலந்து தெளிக்க வேண்டும். பின் தேவை ஏற்பட்டால், 15 நாட்களுக்குப் பின் ஒருமுறை இக்கலவையைத் தெளிக்கலாம்.
- பிளீச்சிங் பவுடர் @ 5 கிலோ/எக்டர் என்ற அளவில் பாசன நீருடன் கலந்து அளிக்கலாம்.
- தாமிர பூசணக் கொல்லிகளை(அ) ஸ்ட்ரெப்டோசைக்லின் (250 பிபிஎம்) உடன் இலைவழி மூலம் அளித்து இரண்டாம் நிலை நோய் பரவலை தடுக்கலாம்.
|
|
|
தாமிர பூசணக்கொல்லிகளை இலை வழி உரமாக இடவும் |
துத்தநாக சல்பேட் உடன் விதை நேர்த்தி செய்யவும் |
|
மேலே செல்க |
|