|
பாக்டீரியா இலைக்கீறல் நோய்
(சேந்தோமோனாஸ் ஒரைசே, ஒரைசிகோலா)
அறிகுறிகள்: |
|
|
|
- துார் வைக்கும் பருவத்திலிருந்து கதிர்ப் பருவம் வரை இடை நரம்புகளின் மேல் முதலில் சிறிய கரும்பச்சை நிறமாக நீரில் நனைக்கப்பட்டதைப் போன்று கீறல்கள் காணப்படும்.
- கீறல்கள் நீள் வாட்டமாக வளர்ந்து நரம்புகளால் தாக்கப்பட்டு விரைவில் மஞ்சள் அல்லது ஆரஞ்சு பழுப்பு நிறமாக மாறிவிடும்.
- கீறல்களின் வழியே, நுண்ணுயிர் திவரக்கசிவுகள் சிறிய மஞ்சள் அல்லது நீமிமை நிற துளிகளாகக் காட்சியளிக்கும்.
- இந்த கோடுகள் ஒன்றாக இணைந்து முழு இலைப் பரப்பையும் மூடிவிடும்.
- புள்ளிகள் பழுப்பு நிறத்திலிருந்து சாம்பல் சிற வெண்மையாக மாறி பின் நோய் தாக்கும் தீவிரமடையும்போது இலைகள் காய்ந்துவிடும்.
- பூக்கள் மற்றும் விதைகளில் ஏற்பட்ட நோய் தாக்குதலால், அவை பழுப்பு நிறம் அல்லது கருப்பு நிறங்களாக நிறமாற்றம் ஏற்படுகிறது. மேலும் கருப்பை இறப்பு, மகரந்தக் கேசரம் மற்றும் கருசூழ்தசை இறப்பு ஆகியவையும் ஏற்பட்டு உமிச்செதில்களும் பழுப்படைகின்றன.
|
|
|
இலைகளில்பழுப்பு நிறத்திலிருந்து சாம்பல்நிற நீள் வாட்டமான கீறல்கள் |
கீறல்கள் பழுப்பு நிறத்திலிருந்து சாம்பல் நிறமாகி இலைகள் காய்ந்துவிடும் |
|
மேலே செல்க |
|
நோய்க்காரணி: |
|
|
|
|
- சேந்தோமோனஸ் ஒரைசே பிவி ஒரைசிகோலா நோயை ஏற்படுத்தும் நுண்ணுயிரி உருளை போன்று இருக்கும்.
நுண்ணுயிருக்கு பூசண வித்துக்கள் மற்றும் பொதியுறைகள் கிடையாது.
- இவை ஒற்றை துருவ நீள் நகரிழை மூலம்தான் நகர்கின்றது.
- இந்நுணியிரிகள் கிராம் எதிர் விளைவுடையது. மேலும் இவை காற்றுவாழ் உயிரியான இவை 28° செ வெப்பநிலையில் நன்கு வளர்கின்றது.
- ஊட்டச்சத்து கடற்பாசியில் இருக்கும் நுண்ணுயிர் கூட்டங்கள், வெளுத்த மஞ்சள் நிறமாகவும், வட்டமாக, மென்மையாக, குவிந்த உருவாக மற்றும் ஒட்டும் இயல்புடையதுமாகவும், முழு ஓரத்துடன் காணப்படும்.
நோய் வளர்ச்சிக்கு சாதகமான காரணிகள்:
- பயிர் இலைகள், நீர் அல்லது பயிர்த் துார்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் நுண்ணுயிரிகள் அறுவடைக்குப் பின் வயலிலேயே நிலைத்திருக்கிறது.
- சூடான வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம்.
- முன் நடவுப் பருவம் அதிக துார்விடும் பருவத்திலிருந்து கதிர் உருவாக்க நிலை வரை.
|
சேன்தோமோனஸ் ஒரைசே அணுக்கள் |
சேன்தோமோனஸ் ஒரைசே - கசிவு |
|
|
|
மேலே செல்க |
கட்டுப்பாடு முறைகள்: |
|
|
|
- முறையான உரங்கள் இடுதல் மற்றும் முறையான பயிர் இடைவெளி விடவேண்டும்.
- நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட இரகங்களைப் பயிரிடுவது மற்றும் வெந்நீருடன் விதை நேர்த்தி செய்வதன் மூலமாகவும் நோயின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
- வயல் சுகாதாரம் மேற்கொள்வது மிகவும் முக்கியமாகும்.
- அறுவடைக்குப் பின் வயலில் எஞ்சியிருக்கும் கட்டைப் பயிர், வைக்கோல் மற்றும் தன்னிசையாய் வளர்ந்த நாற்றுக்கள் ஆகியவற்றை அழிக்க வேண்டும்.
- சிறந்த வடிகால் அமைப்பை, குறிப்பாக விதைப் பாத்திகளில் ஏற்படுத்தவேண்டும்.
- நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட இரகங்களைப் (ஐஆர் 20, டிகேஎம் 6,) பயிரிடவேண்டும்.
- தனிமைப்படுத்தப்பட்ட மேட்டுப்பாங்கான நிலங்களில் நாற்றுகளை அமைப்பது சிறந்தது.
நாற்று நடவு செய்யும்போது நாற்றுக்கள் கத்திரிப்பு ஏற்படாதவாறு தவிர்க்க வேண்டும்.
|
|
|
வயல் சுத்தம் பேணவும் |
ஐஆர்20 - எதிர்ப்புத்திறன் கொண்ட ரகம் |
|
|
சாணக்கரைசல்(அ) புதினா (அ) எலுமிச்சைபுல்சாறு கரைசல் தெளிக்கவும் |
டெட்ராசைக்ளின் + ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் தெளிக்கவும் |
மேலே செல்க |
|