|
இலைச்சுருள் குட்டை நச்சுயிரி
தாக்குதலின் அறிகுறிகள்: |
|
|
|
- வளர்ச்சி குன்றிய பயிர்கள் தோன்றும்.
இலைகள் குட்டையாகவும் கரும்பச்சை நிறத்தில் ரம்பம் போன்ற ஓரங்களுடனும் காணப்படும்.
- இலைத்தாள்களின் நுனிப்பகுதி அல்லது அடிப்பகுதியில் முறுக்கு ஏற்பட்டு இலைகள் சுருண்டு விடுகின்றன.
- இலை ஓரங்கள் சீராக இல்லாமலும் முறுக்கு ஏற்பட்டு சுருள்வடிவமாகக் காட்சியளிக்கும்.,
சுருண்ட இலைப்பகுதிகள் மஞ்சள் நிறத்திலிருந்து பழுப்பு மஞ்சள் நிறமாக இருக்கும்.
- வெளிரிய மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்திலிருந்து கரும்பழுப்பு நிறமாக இலைத்தாள்கள் மற்றும் இலையுறைகளில் உள்ள நரம்புகள் வீக்கம் ஏற்பட்டு காணப்படும்.
- கண்ணாடி இலைகள் முறுக்கல் ஏற்பட்டும், உருமாற்றம் பெற்றும் கதிர்ப்பருவத்தில் வளர்ச்சி குன்றி குட்டையாகக் காணப்படும்.
- பூத்தலில் தாமதம் ஏற்படும்.
- முழுமையற்ற கதிர் வெளிப்பாடு.
- கணுக்கிளைகள் மேல்புற கணுக்களில் உருவாகும்.
- பகுதி வெளிவந்த பூங்கொத்துக்கள் மற்றும் நிரம்பப் பெறாத தானியங்கள்
|
|
|
இலைச்சுருள் குட்டைநோய் |
இலைச்சுருள் குட்டைநோய் |
|
|
|
மேலே செல்க |
|
நோய் காரணிகளை அடையாளப்படுத்துதல்: |
|
|
|
பழுப்பு தத்துப்பூச்சி நோயைப் பரப்புகிறது. பூச்சிகளின் முன் வளர்நிலை இனங்குஞ்சுகள் முதிர் பூச்சிகளைவிட விரைவாக நோயைப் பரப்பும் தன்மை கொண்டது. ஐந்து நாட்களான இளம் குஞ்சுகள் அதிக செயல்திறன் கொண்ட நோய் பரப்பிகளாகும். பூச்சிகளின் 24 மணி நேரம் உணவு உட்கொள்ளும் காலத்தில்தான் நச்சுயிரியைப் பெறுகிறது. நச்சுயிர் துகள்கள் 63-65 நேனோ மீட்டர் குறுக்களவுடன் ஐந்து புரதப் பொருள்களைக் கொண்டது. இவை பெரும்பாலும் சல்லடைக் குழாய்த் திசு மற்றும் பித்தநீர்த்திசுக்களில் காணப்படும். இந்த மரபமைவு 10 இரு புரியிழையாலான ரிபோ உட்கரு அமிலப்பிரிவுகளைக் கொண்டு இந்த நச்சுயிரிகள் சுழற்சி தன்மையுடையதும், நோய் பரப்பும் பூச்சிகளில் பெருகும் நச்சுயிரிகளாகவும் இவை விளங்குகின்றது. |
இலைச்சுருள் குட்டை நோய் காரணி |
|
மேலே செல்க |
கட்டுப்பாடு முறைகள்: |
|
|
|
- நெருக்கமாய் நடவு செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் பூச்சிகளின் தாக்குதலைக் குறைக்க ஒவ்வொரு 2.5-3.0 மீட்டர் அளவிற்கும் இடையில் 30 செ.மீ இடைவெளி விட வேண்டும்.
- பழுப்பு தத்துப்பூச்சிகளை எதிர்க்கும் திறன் கொண்ட மரபணு உடைய நெல் இரகங்களை இந்திய “இந்திய நெற்பயிர் ஆராய்ச்சி நிலையம்” வெளியிட்டுள்ளது. அவை ஐஆர் 26, ஐஅர் 64, ஐஆர் 36, ஐஆர்56, மற்றும் ஐஆர் 72 ஆகிய இரகங்கள் ஆகும். வயலிலுள்ள மற்ற மாற்று பயிர்களையும், பயிர் அறுவடை செய்தபின் வயலை நன்கு உழுது செய்து பயிர்த்துார்களையும் அழிக்க வேண்டும்.
- நோய் பரப்பும் உயிரியான பழுப்பு தத்துப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த கீழ்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை அளிக்க வேண்டும்.
- பாஸ்போமிடான் 40 எஸ் எல் 1000 மிலி/எக்டர் (அ)
- போஸலோன் 35 இ.சி. 1500மிலி/எக்டர் (அ)
- கார்பரில் 10 டீ 25 கிலோ/எக்டர் (அ)
- அசிஃபேட் 75 எஸ்.பி். 625 கிராம்/எக்டர் (அ)
- க்லோர்பைரிபாஸ் 20 இ.சி. 1250 மிலி/எக்டர் ஆகியவை ஆகும்.
|
|
தூர்கட்டைகளை உழுதுவிடவும் |
மேலே செல்க |
|