முதல் பக்கம் தொடர்புக்கு  

புல்தழை குட்டை நோய்

தாக்குதலின் அறிகுறிகள்:  
  • நோய் தாக்கப்பட்ட குத்துக்கள் அனைத்தும் மிகவும் குட்டையாகி அதிக துார்களுடனும் மிகவும் செங்குத்தான வளர்ச்சியுடனும் காணப்படும்.
  • நோய் தாக்கப்பட்ட பயிர் குத்துக்கள் புல் போன்ற மற்றும் ரோஜா இதழ் போன்ற அமைப்புடன் காட்சி தரும்.
  • இலைகள் குட்டையாகவும், குறுகியும், மஞ்சளான பச்சை நிறத்துடனும், அதிக துரு ஏறிய சிறு புள்ளிகள் அல்லது துளைகளாகவும் தோன்றி பின் கொப்புளம் அல்லது பொட்டு போன்று உருவாகின்றன.
  • போதுமான தழைச்சத்து உரங்களை அளிப்பதால், இலைகள் பச்சை நிறத்தைத் பெறுகிறது. நோய் தாக்கப்பட்ட பயிர்கள் பொதுவாக முதிர்ச்சிநிலை வரை நிலைத்தருக்கும். ஆனால் எவ்வித கதிர்களையும் உருவாக்காது.
  • நோய் தாக்கப்பட்டு 10-20 நாட்களில் அறிகுறிகள் காணப்படும்.
grassy stunt virus
புல்தழை குட்டை நோய்
rice grassy stunt virus disease
புல்தழை குட்டை நோய்
   

மேலே செல்க

  நோய்க் காரணிகளை அடையாளப்படுத்துதல்:
grassy stunt virus
புல்தழை குட்டை நோய் வைரஸ்
rice grassy stunt virus
புல்தழை குட்டை நோய் வைரஸ்

    வருடம் முழுவதும் நெல் பயிரிடும் பரப்புகளில் பழுப்பு தத்துப் பூச்சிகளின் இளம் குஞ்சுகள் மற்றும் முதிர் பூச்சிகள் நச்சுயிரியைப் பரப்புகின்றன. நெற்பயிர் புல்தழை குட்டை நோய் பொதுவாக குறித்த இடத்தில் தோன்றும், குட்டையான இறக்கை அமைப்புடைய பூச்சிகளை விட நீளமான இறக்கை உடைய பூச்சிகளே நோயைப் பரப்புவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நோய் தாக்கப்பட்ட பயிர்களிலிருந்து நச்சுயிரியை இப்பூச்சிகள் எடுத்துக்கொள்ள குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் அப்பயிரினை உட்கொள்ளும். 24 மணி நேரம் வரை பூச்சிகளின் உணவு உட்கொள்ளும். திறன் நீடித்தால் அதிக அளவு தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

நோய் பரப்பும் உயிரி சேதத்தை அதிகப்படுத்துகிறது. நெற்பயிர் புல் தழை குட்டை நோய், டெனுய் நச்சுயரிகளின் ஒரு அமைப்பு ஆகும். இவை நுண்மையான இழை வடிவமுடைய துகள்களைக் கொண்டுள்ளது. அவை 6-8 நேனோ மீட்டர் குறுக்களவு உடையது. மேலும் கணு சமமட்டநீளம் 950-1350 நேனோமீட்டர் அளவு உடையது. இந்த துகள்கள் ஒரு புரத வெளியுறை மற்றும் நான்கு ஒரு புரியிழையான ரிபோ உட்கரு அமிலத்தால் ஆன மரபடைவைக் கொண்டுள்ளது.

   

மேலே செல்க

கட்டுப்பாடு முறைகள்:  
  • நெருக்கமாய் நடவு செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் பூச்சிகளின் தாக்கத்தினைக் குறைக்க ஒவ்வொரு 2.5-3.0 மீட்டர் அளவிற்கும் இடையில் 30 செ.மீ இடைவெளி விட வேண்டும்.
  • பழுப்பு தத்துப் பூச்சிகளை எதிர்க்கும் திறன் கொண்ட மரபணு உடைய ஐஆர் 26, ஐஆர் 64, ஐஆர் 36, ஐஆர் 56 மற்றும் ஐஆர் 72 ஆகிய நெல் இரகங்களைபயிரிடவேண்டும்.
  • வயலிலுள்ள மற்ற மாற்று பயிர்களையும், பயிர் அறுவடை செய்தபின் வயலை நன்கு உழுவு செய்து பயிர்த்துார்களையும் அழிக்க வேண்டும்.
  • நோய் பரப்பும் உயிரியான பழுப்பு தத்துப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த கீழ்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை அளிக்க வேண்டும்.
  • பாஸ்போமிடான் 40 எஸ் எல் 1000 மிலி/எக்டர் (அ)
  • பாஸலோன் 35 இ.சி. 1500மிலி/எக்டர் (அ)
  • கார்பரில் 10 டீ 25 கிலோ/எக்டர் (அ)
  • அசிஃபேட் 75 எஸ்.பி். 625 கிராம்/எக்டர் (அ)
  • க்லோர்பைரிபாஸ் 20 இ.சி. 1250 மிலி/எக்டர் ஆகியவை ஆகும்.
provide rogue spacing of 30 cm to check vector movement
30 செ.மீ கலவன் பாதை விட்டு பூச்சிகளை கட்டுப்படுத்தவும்
spray phosphomidan to control vector BPH
நோய் பரப்பும் பூச்சிகளை பாஸ்போமிடான் தெளித்து கட்டுப்படுத்தவும்
   
மேலே செல்க