முதல் பக்கம் தொடர்புக்கு  

நண்டு (பிரடெல்ப்யூசா ஹைட்ரோடிரோமஸ்)

தாக்குதலின் அறிகுறிகள்:  
  • நண்டுகள் வரப்புகளின் ஓரங்களில், பொந்துகள் ஏற்படுத்தி அதனுள் வாழும்.
  • நிலமட்டத்திற்கு அருகில் இருக்கும் இளம் நெற்பயிர்களை இவை வெட்டி (கத்திரித்து) பின் அவற்றை அதனைப் பொந்துகளுக்குள் கொண்டு சென்று வைத்து பின் உட்கொள்ளும்.
  • இரவில் செயல்படும் திறன் கொண்டதால் இரவு நேரத்தில் நன்கு செயல்படும்.
  • நண்டுகள் பயிர்களை சேதம் ஏற்படுத்துவது மட்டும் அல்லாமல், நெல்வயலில் ஆங்காங்கே பொந்துகள் ஏற்படுத்துகிறது. இதனால் நெல் வயலில் நீர் தேக்கம் இல்லாமல் போகிறது.
  • எனவே நெற்பயிரில் நண்டுகள் முக்கிய ஓட்டுடைக்கணுக்காலியாக விளங்குவதால், இதற்கு தீவிர,கடுமையான கட்டுப்பாட்டு முறை தேவைப்படுகிறது.

crab-organic-rice-field

நெல் வயலில் நண்டுகள்
-river-crab-in irrigation rice field
நெல் வயலில் நண்டுகள்
மேலே செல்க

  கண்டறியப்படுதல்:

முட்டைகள்: முட்டைகள் வைக்கும்போது முதலில் நன்கு பிரகாசமான ஆரஞ்சு நிறத்திலும், பின் பொரிப்பதற்கு முன் மஞ்சளாக மாறி, பழுப்பு நிறமாகவும், பின் கரும்பழுப்பு நிறமாகவும் மாறிவிடும்.

புழுக்கள்: முதல் நிலைப் புழுக்கள் “ஜோயியே” எனப்படுவது பொரிக்கும்போது ஏறக்குறைய 0.25 மி.மீ அகலமுடன் காணப்படும். பின் இந்நிலை வளர்ச்சிக்கு 31-49 நாட்கள் தேவைப்படுகிறது.

இளம் நிலை குஞ்சுகள்: இளம் நிலை “முதல் நண்டு” சரியாக 2.5 மி.மீ அகலமுடன் இருக்கும். (நண்டுகளின் பக்கதண்டு முள்களின் மேல் நுனி முதல் நுனி வரை) இளம் நண்டுகள் மெதுவாக குறைவான உப்புத் தன்மையுள்ள நீர் கொண்ட மேல் கழிமுகம் மற்றும் ஆறுகளுக்கு இடம்பெயர்ந்து, அவ்விடத்தில் வளர்ந்து பின் முதிர்ச்சி பெறும்.

முதிர் நண்டுகள்: பின் புழுப்பருவத்திற்கு 18-20 நாட்களுக்குப் பிறகு அதாவது (1-1.5 வருடங்கள்) ஆனப்பிறகுதான் இவை இனக்கலப்பு முதிர்ச்சியை அடையும். ஆண் இன நண்டுகள் இனக்கலப்பு முதிர்ச்சியை அடைந்தபின் தொடர்ந்து தோல் உதிர்ப்பு மேற்கொண்டு வளர்ச்சியடையும். ஆனால் பெண் இனச் சிலந்திகள் தோலுதிர்ப்பதை நிறுத்திவிட்டு அவை முதிர்ச்சியடைந்து, இனக்கலப்பு மேற்கொள்ளும்.

rice field crab
நெல் வயல் நண்டு
மேலே செல்க

மேலாண்மை:  
  • வயலில் சேற்றுழவின் போது தொழு உரம் அளிப்பதால் நண்டுகளின் தாக்கத்தைக் குறைக்க முடிகிறது. வயலின் வரப்புகளில் உள்ள ஓட்டைகளை, (பொந்து) முள் இலவ மரத்தின் (பாம்பாக்ஸ் சீய்பா) பட்டைகள், எம்பெலியா ரைப்ஸ்- வாய்விளங்கம் மரத்தின் பழங்கள் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை ஒவ்வொன்றும் 2 கிலோ எடுத்து 100 லிட்டர் நீரில் கலந்து 1 எக்டருக்கு பயன்படுத்தி ஓட்டைகளைஅடைக்கவேண்டும்.
  • “சையனோவாயு” துகள்களைக் கொண்டு நண்டுப் பொந்துகளை புகைமூட்ட வேண்டும்.
  • நச்சுப்பொறியாக ஒரு பொந்துக்கு பேரத்தியான் 0.5 சதவிகிதத்தை 80-100 மிலி அரிசிக் கஞ்சியுடன் கலந்து அளிப்பது, நண்டுகளை மிகச்சிறப்பாகக் கட்டுப்படுத்துகிறது.
manuring
உரமிடுதல்
poison bait with insecticide
பூச்சிக்கொல்லியுடன் நஞ்சு இரை

மேலே செல்க