|
சிலந்திப்பேன் (ஒலிகோநைகஸ் ஒரைசே)
தாக்குதலின் அறிகுறிகள்: |
|
|
|
- சிலந்திப்பேன் தாக்கப்பட்ட பயிர்கள் வெளுத்தும் இலைகள் பசுமை சோகை ஏற்பட்டும் காணப்படும். இலைகள்,அழுக்கான பழுப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.
தாக்கும் விதம்:
முதிர்ச்சியான சிலந்திப்பேன் மற்றும் இளம் பூச்சிகள் இரண்டுமே அடிப்பகுதியில் அதிகளவு தாக்குதல் ஏற்படுத்தி இலைகளின் சாறுகளை உறிஞ்சிவிடும். சாறு உறிஞ்சப் பட்டதன் முடிவாக இலைகளில் வெள்ளை நிற திட்டுகளாகக் காணப்படும். நாற்றங்காலில் இருக்கும் நாற்றுக்கள் மற்றும் நடவு செய்யப்பட்ட பயிர்கள் அனைத்தும் இதன் பாதிப்புக்குள்ளாகும்.
|
|
சிலந்தி பேனால் ஏற்படும் சேதம் |
|
சிலந்தி பேனால் ஏற்படும் சேதம |
|
மேலே செல்க |
|
நோய்க்காரணியை கண்டறிதல் |
|
|
|
சிலந்திப்பேன் வாழ்க்கைச் சூழற்சி:
இலைகளின் மேல் சிறிய உருளை வடிவமான முட்டைகள் தனியாக இடப்பட்டிருக்கும். இளங்குஞ்சுகள் பொரித்து வெளிவரும் போது மூன்று ஜோடிக் கால்கள் மட்டுமே கொண்டிருக்கும். பின் முதல் தோலுதிர்ப்புக்கு பிறகு 4 வது ஜோடிக் கால்கள் வளர்ந்து விடும். மொத்த வாழ்க்கைச் சுழற்சி 15-18 நாட்களில் முடிந்து விடும். |
முட்டை மற்றும் சிலந்தி பேன் |
|
மேலே செல்க |
மேலாண்மை முறைகள்: |
|
- பயிர் அறுவடைக்குப் பின், துார்களுடன் சேர்த்து சேற்றுழவு மேற்கொள்ளுதல், குளிர் காலத்தில் பயிர்ச் செடிகள் மறுவளர்ச்சி அடையாதவாறு பாதுகாத்தல் ஆகியவை உழவியல் கட்டுப்பாட்டு முறைகளாகும்.
வயல்களை தரிசு விடுதல், மாற்றுப் பயிருடன் பயிர்சுழற்சி மேற்கொள்ளுதல் வேண்டும். சிலந்திப்பேன் தாக்கம் இல்லாத வயலில் பயன்படுத்துவதற்கு முன் இயந்திரங்களை நன்கு சுத்தம் செய்து பின் உபயோகிக்க வேண்டும்.
- நடவு செய்து 15 நாட்களுக்குப் பிறகு குறைந்த அளவில் உள்ள சிலந்திப்பேன் தாக்குதலை கண்டுபிடிப்பதற்கு இலைமாதிரி எடுத்தல் வேண்டும். தாக்குதல் இருந்தால், இரண்டாம் பயிர் சாகுபடியைத் தவிர்க்க வேண்டும்.
- ஊடுருவும் சிலந்திப்பேன்கொல்லிகளைப் பயன்படுத்துவது சிறந்த இராசயனக் கட்டுப்பாட்டு முறையாகக் கருதப்படுகிறது.
- சிறந்த செயல் விளைவு மிகுந்த சிலந்திப்பேன்கொல்லியான “ஸ்பைரோமெஸிஃபென்” ஒரு எக்டருக்கு 72 கிராம் (எ.ஐ) செயற்கூறு என்ற அளவுடன் பயன்படுத்த வேண்டும்.
- கொன்றுண்ணும் தன்மை கொண்ட சில சிலந்திகளால் சிலந்திப்பேன் தொகையைக் கட்டுப்படுத்த முடிகிறது.
|
|
இரை விழுங்கி சிலந்தி பேன்கள் |
|
சிலந்தி பேன் கொல்லி |
|
மேலே செல்க |
|